வருடந்தோறும் சீனர்கள் கொண்டாடும் வினோதமான 'நாய் கறி திருவிழா' பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகின் சில பகுதிகளில் இன்னும் நம்மை உறைய வைக்கக் கூடிய வகையிலான செயல்கள் அல்லது திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சீனாவில் ஓர் விநோதமான திருவிழா நடைபெற்றது. நாய்களை வளர்ப்போர் இந்த திருவிழா பற்றி கேட்டால் நிச்சயம் கொதித்தெழுவார்கள்.

ஏனெனில் அது நாய் கறி திருவிழா. இந்த திருவிழாவின் போது பல ஆயிரக்கணக்கான நாய்கள் கொன்று குவிக்கப்பட்டு, யூலின் சமுதாய மக்களின் வீடுகளில் சமைத்து உண்ணப்படும். உற்ற தோழனாக விளங்கும் நாயைக் கொன்று இம்மக்கள் உட்கொள்வதற்கு முட்டாள்தனமான காரணங்களை அவர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் இந்த வினோதமான நாய்கறித் திருவிழா குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் இந்த திருவிழா?

ஏன் இந்த திருவிழா?

சீனாவின் குஹாங்சி என்ற மாகாணத்தில் வாழும் யூலின் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், ஆவிகள் மற்றும் கொடிய நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, 2010 ஆம் ஆண்டிலிருந்து நாய் கறித் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உலகிலேயே மிகவும் முட்டாள்தனமான ஓர் திருவிழா என்றால், அது இந்த திருவிழாவாகத் தான் இருக்க முடியும்.

Image Courtesy

சட்டவிரோதமான செயல் இல்லை

சட்டவிரோதமான செயல் இல்லை

சீனாவில் எந்த ஒரு விலங்குகள் நலத்துறையும் இல்லாததால், அங்குள்ள மக்கள் எந்த ஒரு விலங்குகளையும் உட்கொள்கின்றனர். மேலும் லாரிகளில் ஆயிரக்கணக்கான நாய்களை யூலின் சமுதாயத்தினர் திருடும் போதும் சீன அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது தான் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

Image Courtesy

எத்தனை நாய்கள் கொல்லப்படுகின்றன?

எத்தனை நாய்கள் கொல்லப்படுகின்றன?

சீனாவில் நடைபெறும் இந்த திருவிழாவில், ஒவ்வொரு வருடமும் சுமார் 10-20 மில்லியன் நாய்கள் கொல்லப்பட்டு வருகின்றனவாம். இந்த வினோதமான திருவிழாவில், குறைந்தது 10,000 நாய்கள் கொல்லப்பட்டு விருந்துண்ணப்படும் என்பது கொடுமையான விஷயம்.

Image Courtesy

நாய்கள் மட்டும் தான் சாப்பிடப்படுகிறதா?

நாய்கள் மட்டும் தான் சாப்பிடப்படுகிறதா?

இந்த வினோதமான திருவிழாவில் நாய்கள் மட்டும் தான் கொல்லப்படும் என்பதில்லை, பூனைகளும் தான் கொல்லப்படுகின்றன. இருப்பினும் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் நாய் கறி தான் என்பதால் நாய்கள் அதிகமாக கொல்லப்படுகின்றன.

Image Courtesy

எங்கிருந்து இவ்வளவு நாய்கள் கொண்டு வரப்படுகின்றன?

எங்கிருந்து இவ்வளவு நாய்கள் கொண்டு வரப்படுகின்றன?

சில அறிக்கைகளில், இவ்வளவு நாய்கள் பண்ணைகளில் இருந்து கொண்டு வரப்படுதாக தெரிவிக்கின்றன. ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல. பொதுவாக, இவ்வளவு நாய்கள் திருடப்பட்டு, கூண்டிற்குள் அடைக்கப்பட்டு, யூலின் திருவிழாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது தான் உண்மை.

நாய்கள் உயிருடன் சமைக்கப்படுகிறதா?

நாய்கள் உயிருடன் சமைக்கப்படுகிறதா?

ஆம், இந்த திருவிழாவில் நாய்களானது இரக்கமற்ற, இதயமற்ற நடைமுறையில் உயிருடன் துடிதுடிக்க வைத்து சமைக்கப்படுகின்றன.

Image Courtesy

ராபிஸ் நோய்

ராபிஸ் நோய்

உண்மையில் இவ்வளவு கொடூர குணத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நாய் கறி திருவிழாவால் ராபிஸ் நோய் தாக்கப்பட்டு பலர் உயிரை இழந்து வருவது தெரியாமல், இன்னும் அப்பகுதி மக்கள் இந்த கொடிய திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Know About China’s Yulin Dog Meat Festival

This is something that you need to know about China’s Yulin Dog Meat Festival. These shocking revelations about this festival will surely disgust you.
Story first published: Monday, June 27, 2016, 14:56 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter