இந்தியாவில் உள்ள அமானுஷ்யம் நிறைந்த கல்லூரிகள்!

Posted By:
Subscribe to Boldsky

கல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் மிகவும் இனிமையான வாழ்க்கை. கல்லூரியில் தான் நாம் நம் நண்பர்களுடன் சேர்ந்து பல லூட்டிகளை செய்திருப்போம். ஆனால் அப்படி நீங்கள் படித்த கல்லூரி இந்தியாவில் இருக்கும் அமானுஷ்யம் நிறைந்த கல்லூரிகளில் ஒன்று என்று சொன்னால் எப்படி இருக்கும்?

ஆம், இந்தியாவில் மிகவும் பிரபலமான பல கல்லூரிகளில் பேய் நடமாட்டம் உள்ளது. இங்கு இந்தியாவில் இருக்கும் பேய் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படும் கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
NIT, ஹமீர்பூர்

NIT, ஹமீர்பூர்

NIT கல்லூரி வளாகத்தில் உள்ள கைலாஷ் என்னும் மாணவர்கள் தங்கும் விடுதியின் அறையில் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை செய்து கொண்ட அறையில் ப்ளூடூத் கருவியை இணைக்கும் போது 'BOY WHO DIED' என்னும் பெயரில் சிக்னல் கிடைப்பதாக சிலர் சொல்கின்றனர். மேலும் அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டால், அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறதாம்.

Image Courtesy

பெண்கள் கல்லூரி, கொல்கத்தா

பெண்கள் கல்லூரி, கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள இந்த கல்லூரியில் சார் வாரென் ஹாஸ்டிங்ஸ் என்பவரின் ஆன்மா சுற்றிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். பல மாணவர்கள், இக்கல்லூரியில் இவரது ஆன்மா இருப்பதை உணர்ந்துள்ளார்களாம்.

Image Courtesy

கைரதாபாத் அறிவியல் கல்லூரி, ஹைதராபாத்

கைரதாபாத் அறிவியல் கல்லூரி, ஹைதராபாத்

இந்த கல்லூரியைப் பார்க்கும் போதே, ஏதோ ஒன்று இருப்பதை நம்மால் உணர முடியும். இந்த கல்லூரியின் வளாகத்தில் மர்மமான முறையில் பல இறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த கல்லூரியில் பயிலும் பல மாணவர்கள், நிறைய முறை எலும்புக்கூடு நடப்பதையும், கூச்சல் சப்தத்தையும் கேட்டுள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த கல்லூரியின் காவலாளியும், மர்மமான முறையில் இறந்துள்ளார்.

Image Courtesy

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை

சென்னையில் மிகவும் பிரபலமான மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வுக்கூடத்தில் யாரும் இல்லாத போது வித்தியாசமான சப்தம் கேட்பதாக மக்கள் கூறுகின்றனர். அதுவும் யாரோ ஒருவர் வேதியியல் வகுப்பு எடுப்பது போல் சப்தம் கேட்பமாக கூறுகின்றனர்.

Image Courtesy

பூனே பல்கலைகழகம்

பூனே பல்கலைகழகம்

இந்தியாவில் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் பல்கலைகழகங்களுள் ஒன்று தான் பூனே பல்கலைகழகம். ஆனால் இந்த பல்கலைகழகத்தின் உள்ளே ஆஸ்திரேலிய பெண்மணியான ஆலிஸ் ரிச்மென் என்பவரின் கல்லறை ஒன்று உள்ளது. இப்பெண் காலராவினால் 1886 ஆம் ஆண்டு இறந்தார். இவரது ஆன்மா இந்த கல்லூரி வளாகத்தை சுற்றிக் கொண்டிருப்பதாக பலர் நம்புகின்றனர்.

Image Courtesy

NIT, ரூர்கேலா

NIT, ரூர்கேலா

ஏற்கனவே சுடுகாடாக இருந்த இடத்தில் தான் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் நிறைய மாணவர்கள் விடுதியின் சமையலறையில் திடீரென்று பாத்திரங்கள் விழுவதையும், கிரிக்கெட் மைதானத்தில் மனித எலும்புக்கூடுகளையும் கண்டிருப்பதாக கூறுகின்றனர்.

Image Courtesy

செயின்ட் பாடன் கல்லூரி, சிம்லா

செயின்ட் பாடன் கல்லூரி, சிம்லா

சிம்லாவில் உள்ள இந்த கல்லூரியில் தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது பட்டப்படிப்பை முடித்தார். இந்த கல்லூரியில் திடீரென்று விசில் சப்தம் அதிகமாகவும், யாரே ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டே அருகில் வருவது போன்றும் இருப்பதாக அங்கு பயின்ற மாணவர்கள் கூறுவார்கள்.

Image Courtesy

IIT, ரூர்க்கி

IIT, ரூர்க்கி

இந்த கல்லூரியும் அமானுஷ்யம் நிறைந்த கல்லூரிகளுள் ஒன்றாக உள்ளது. அதுவும் இந்த கல்லூரியில் பயின்ற மாணவன் ஒருவன் மன இறுக்கத்தினால், விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டானாம். அவனது ஆன்மா இங்கு சுற்றிக் கொண்டிருப்பதாக அங்குள்ளோர் கூறுகின்றனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Haunted Colleges Of India

Check the list of most haunted colleges in India. These are the colleges which have witnessed paranormal activities and are said to be haunting.
Story first published: Wednesday, April 13, 2016, 15:52 [IST]