உலகில் மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் சில முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் மூடநம்பிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் பல விஷயங்களில் மூடநம்பிக்கைகள் கலந்துள்ளன. நம் வரலாற்றைக் கண்டால், பாரம்பரிய பழக்கவழக்கம் என்று சரியான காரணமே தெரியாமல், இன்று வரை சில செயல்களை உலகில் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்... அதற்கான காரணங்களும்...

உதாரணமாக, திருணமத்தின் போது மணப்பெண்கள் முகத்திரை அணிவது, இரவு நேரத்தில் சூயிங் கம் சாப்பிடக்கூடாது போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, இப்போது உலக மக்கள் நம்பி பின்பற்றிக் கொண்டிருக்கும் சில முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள் குறித்து காண்போம்.

காரணமே தெரியாமல் நாம் பின்பற்றி வரும் சில பழக்கவழக்கங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணப்பெண் முகத்திரை

மணப்பெண் முகத்திரை

திருமணத்தின் போது மணப்பெண்கள் முகத்திரையை அணிவது தீய சக்திகள் அண்டாமல் தடுக்கும் என ரோமன் வரலாறு கூறுகிறது. அதிலும் முகத்திரை அணிவதற்கு முக்கிய காரணம், தீய சக்திகள் மணப்பெண்ணை அடையாளம் காணாமல் இருப்பதற்காக என்றும் ரோமன் வரலாறு கூறுகிறது.

குழந்தைகள் வேண்டுமானால் லெட்யூஸ் சாப்பிடக்கூடாது

குழந்தைகள் வேண்டுமானால் லெட்யூஸ் சாப்பிடக்கூடாது

லெட்யூஸ் என்பது ஓர் ஆரோக்கியமாக கீரை வகையைச் சேர்ந்தது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டு ஆண்கள், திருமணமான பின் இந்த கீரையை சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் இந்த கீரையானது ஆண்களின் பிள்ளைப் பெறும் தன்மையைக் குறைத்து, மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை வெளிநாட்டு ஆண்களிடையே உள்ளது.

இரவில் சூயிங் கம் சாப்பிடக்கூடாது

இரவில் சூயிங் கம் சாப்பிடக்கூடாது

இந்த மூடநம்பிக்கியைனது துருக்கியில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதுவும் இரவில் சூயிங் கம் சாப்பிடுவது என்பது இறந்த சடலத்தின் தசையை சாப்பிடுவதற்கு சமமாக அங்குள்ள மக்கள் நினைக்கின்றனர்.

குதிரை லாடம் அதிர்ஷ்டத்தை வழங்கும்

குதிரை லாடம் அதிர்ஷ்டத்தை வழங்கும்

வீட்டில் அதிர்ஷ்டம் கொட்டவும், தீய சக்திகள் வீட்டில் இருந்து விலகவும், படுக்கையறையில் குதிரை லாடத்தின் முனைகள் மேல் நோக்கியவாறு தொங்க விட வேண்டும். இதற்கு காரணமாக குதிரை லாடத்தில் ஏழு துளைகள் உள்ளன. ஏழு என்பது அதிர்ஷ்டமான எண். அதிலும் இது இரும்பினாலானது என்பதால், இதனை வீட்டில் தொங்க விடுவதால், வீட்டில் உள்ள தீய சக்திகள் ஈர்க்கப்பட்டு, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறவும் அதிர்ஷ்டம் கொழிக்க வழி செய்வதாகவும் நம்புகின்றனர்.

நடு ராத்திரியில் திராட்சை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் கொட்டும்

நடு ராத்திரியில் திராட்சை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் கொட்டும்

ஸ்பெயினில் புது வருடத்தின் போது, மக்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்து சொல்லிக் கொள்ளமாட்டார்கள். மாறாக, அவர்கள் 12 திராட்சைப் பழங்களை உட்கொள்வார்கள். ஏனெனில் 12 பழங்களை உண்பதால், வருடத்தின் 12 மாதங்களும் நல்ல அதிர்ஷ்டம் கொட்டும் என்று நம்புகின்றனர்.

தலையில் பறவையின் எச்சம் விழுந்தால் பணக்காரர் ஆகலாம்

தலையில் பறவையின் எச்சம் விழுந்தால் பணக்காரர் ஆகலாம்

ரஸ்யாவில், பறவையின் எச்சம் தலையில் விழுவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அதிலும் ஒருவரது தலையில் பறவையின் எச்சம் விழுமாயின், அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, பணக்காரர் ஆகலாம் என்ற ரஸ்ய மக்கள் நம்புகின்றனர். என்ன ஒரு நம்பிக்கை பாருங்க...

கருப்பு பூனை குறுக்கே செல்வது அபசகுணம்

கருப்பு பூனை குறுக்கே செல்வது அபசகுணம்

இந்த மூட நம்பிக்கை இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மக்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு இதில் நம்பிக்கை உள்ளதா?

வித்தியாசமான பறவை இனம்

வித்தியாசமான பறவை இனம்

Wryneck அல்லது Jinxtorquilla என்பது ஒரு வகையான பறவை இனம். இந்த பறவையின் ஸ்பெஷல், இவைகளால் தாராளமாக தலையை திருப்ப முடியும். இந்த பறவை குறித்து அப்பகுதியில் வாழும் மக்களிடையே உள்ள ஓர் மூட நம்பிக்கை என்னவெனில், இந்த பறவை ஒருவரைப் பார்த்து தலையைத் திருப்பினால், அவருக்கு மரணம் நிச்சயம் என்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Superstitious Beliefs Around The World

Here are some of the superstition belief’s around the world. These beliefs are generally foolish, yet informative. Read on to know more..
Story first published: Tuesday, May 17, 2016, 12:32 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter