உலகில் அசுர உடல் எடையுடன் பிறந்த குழந்தைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் ஆச்சரியப்படும் வகையில் பல விஷயங்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. அப்படி நம்மை ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்கள் சில நமக்கு சில நேரங்களில் வருத்தப்பட வைக்கவும் செய்யும். அது அந்த விஷயத்தைப் பொறுத்தது.

இக்கட்டுரையில் உலகிலேயே பிறக்கும் போது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிலான எடையில் பிறந்த குழந்தைகள் குறித்து கொடுககப்பட்டுள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், சாதாரணமாக பிறக்கும் குழந்தையின் எடை 3.5-4 கிலோ வரை இருக்கும்.

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகள் பிறக்கும் போது 5 கிலோவிற்கு அதிகமாக உள்ளனர். குழந்தையின் எடையை சொன்னதும், பலருக்கும் அக்குழந்தையின் தாய் பிரசவிக்கும் போது எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார் என்று நிச்சயம் தோன்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜஸ்லீன் (ஜெர்மனி)

ஜஸ்லீன் (ஜெர்மனி)

இந்த பெண் குழந்தை பிறக்கும் போது 6.1 கிலோ எடையுடனும், 57 செ.மீ உயரத்துடனும் இருந்தது. இக்குழந்தையின் தாய் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பகால நீரிழிவால் அவஸ்தைப்பட்டார் எனவும், இதனால் தான் இக்குழந்தை இவ்வளவு எடையுடன் பிறந்துள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Image Courtesy

மாக்சின் மாரின் (ஸ்பெயின்)

மாக்சின் மாரின் (ஸ்பெயின்)

இக்குழந்தை பிறக்கும் போது 6.2 கிலோ எடையுடன் இருந்தது. இக்குழந்தையை பிரவிக்கும் போது, அக்குழந்தையின் தாய்க்கு 40 வயதாக இருந்ததோடு, பிரசவ வலியின் போது மயக்க மருந்து கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல், சுமுகமாக பிரசவம் நடைபெற்றதாம்.

Image Courtesy

ஜார்ஜ் கிங்

ஜார்ஜ் கிங்

இந்த குழந்தை 2013 ஆம் ஆண்டு, 15 பவுண்ட் 7 அவுன்ஸ் எடையுடன், அதாவது சாதாரண பிறந்த குழந்தையின் எடையை விட இரண்டு மடங்கு அதிக எடையுடன் பிறந்தது. இக்குழந்தை பிறக்கும் போது, தாய் சில சிக்கல்களை எதிர்கொண்டார்.

Image Courtesy

ஜாமைக்கேல் (டெக்ஸாஸ்)

ஜாமைக்கேல் (டெக்ஸாஸ்)

டெக்ஸாஸைச் சேர்ந்த ஜாமைக்கேஸ் என்னும் குழந்தை பிறக்கும் போது 16 பவுண்ட் எடையுடன், அதாவது சாதாரண குழந்தையின் எடையை விட இருமடங்கிற்கும் அதிகமான உடல் எடையுடன் பிறந்தது.

Image Courtesy

நாடியா கலினா (சைபீரியா)

நாடியா கலினா (சைபீரியா)

சைபீரியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 12 ஆவது குழந்தையாக நாடியா கலினா என்னும் குழந்தை அதிக உடல் எடையுடன் பிறந்தது. இக்குழந்தையின் எடை 7.75 கிலோவாக இருந்தது. மேலும் இக்குழந்தை பிறக்கும் போது தாய் மற்றும் சேய் நலமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Image Courtesy

ஸ்டெஃபென் ஹெண்ட்ரிக்ஸ் லூயிஸ்-ஜீன் (நார்விச்)

ஸ்டெஃபென் ஹெண்ட்ரிக்ஸ் லூயிஸ்-ஜீன் (நார்விச்)

நார்விச்சை சேர்ந்த இக்குழந்தை 14 பவுண்ட் 13 அவுன்ஸ் எடையுடன் பிறந்தது. மேலும் இக்குழந்தை பிறக்கும் போது 23 இன்ச் உயரத்துடனும் இருந்தது.

Image Courtesy

அடிமில்டன் டோஸ் சாண்டோஸ் (பிரேசில்)

அடிமில்டன் டோஸ் சாண்டோஸ் (பிரேசில்)

இக்குழந்தை 2005 ஆம் ஆண்டு, 8 கிலோ எடையுடன் பிரேசிலில் பிறந்தது. இக்குழந்தையின் அசுர எடைக்கு காரணம், தாயின் கர்ப்பகால நீரிழிவு தான் காரணம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking List of Huge Babies Who Were Born

Here is the list of the heaviest babies ever born in the world. One must check out on their weight as they are really huge for sure!
Story first published: Friday, April 22, 2016, 13:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter