உலகில் உள்ள அருவெறுக்கத்தக்க சில மோசமான வேலைகள்!

Posted By:
Subscribe to Boldsky

'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப பலர் தங்களது வேலையை மிகவும் ரசித்து செய்வார்கள். அது நம்மைப் பார்ப்பவர்கள் மோசமாக நினைக்கக் கூடியதாக இருந்தாலும், தன் தொழிலை சற்றும் தயங்காமல் செய்வார்கள்.

நீங்கள் உங்கள் வேலை திருப்தியற்றதாக நினைக்கிறீர்களா? அப்படியெனில் உலகில் அருவெறுக்கக்கூடிய வகையில் உள்ள சில வேலைகளைப் பற்றி தெரிந்தால், உங்கள் வேலையை நீங்கள் அப்படி நினைக்கமாட்டீர்கள்.

நம்மைப் பொறுத்த வரை மோசமான வேலையெனில் கழிவறை கழுவுவது, சாக்கடை சுத்தம் செய்வது போன்றவை தான். ஆனால் அதையும் தாண்டி சில மோசமான வேலைகள் உலகில் உள்ளது.

இங்கு அப்படி உலகில் உள்ள அருவெறுப்பான சில மோசமான வேலைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆபாச தியேட்டரில் வாயிற் காவலர்

ஆபாச தியேட்டரில் வாயிற் காவலர்

இது இருப்பதிலேயே மிகவும் மோசமான வேலை எனலாம். சாதாரண திரையரங்குகளில் உணவுப் பொருட்களின் குப்பை தான் தரையில் இருக்கும். ஆனால் இந்த ஆபாச திரையரங்குகளில் ஆண்களின் விந்தணு தரையில் இருக்கும். இந்த திரையரங்குகளில் வேலை செய்யும் பணியாளர்கள், அடுத்த காட்சி ஆரம்பிக்கும் முன், இதனை சுத்தம் செய்ய வேண்டும். எவ்வளவு மோசமான வேலை என்று பாருங்கள். நல்லவேளை இந்த மாதிரியான திரையரங்கு நம் நாட்டில் இல்லை.

வாய்வு ஆய்வாளர்

வாய்வு ஆய்வாளர்

இது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை எனலாம். ஏனெனில் இந்த பணியில் நோயாளிகளின் குதவழியில் வெளிவரும் காற்றை சுவாசித்து, எந்த மாதிரியான நோய் அவர்களுக்கு உள்ளது என சொல்வது. சற்று யோசித்துப் பாருங்கள், இந்த பணியில் உள்ளோரை...!

ஒராங்குட்டானின் கழிவை சேகரிப்பவர்

ஒராங்குட்டானின் கழிவை சேகரிப்பவர்

ஓராங்குட்டான் என்பது பெரிய வால் இல்லாக் குரங்கு வகையைச் சேர்ந்தது. இந்த குரங்குகள் அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிப்பவைகள். இவைகள் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க, இந்த குரங்குகளின் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். எப்படியெல்லாம் உலகில் வேலை உள்ளது என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

Image Courtesy

தடயவியல் பூச்சியியல் வல்லுநர்

தடயவியல் பூச்சியியல் வல்லுநர்

இதுவும் ஓர் மோசமான வேலை தான். சற்று யோசித்துப் பாருங்கள், பல மாதங்களுக்கு முன் யாரோ ஒருவரை கொன்று புதைத்து, அழுகி, புழுக்கள் உள்ள ஓர் சடலத்தை ஆராய்ந்து, அவர்களைப் பற்றி சொல்லச் சொன்னால் செய்வீர்களா? மிகவும் கடினம் தானே!

Image Courtesy

கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்பவர்

கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்பவர்

உண்மையிலேயே, இந்த வேலையை செய்பவர்களைப் பாராட்ட வேண்டும். நாம் நம் வீட்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யவே யோசிப்போம். ஆனால் இவர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் கேவலமாக நினைப்பார்கள் என்று சற்றும் தயங்காமல் பலரது வீட்டு கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்கின்றனர்.

Image Courtesy

மலத்தை ஆராய்பவர்

மலத்தை ஆராய்பவர்

இதுவும் ஓர் மோசமான ஓர் வேலை தான். ஆம், இந்த வேலையின் படி, யாரோ ஒருவரின் மலத்தை கையில் எடுத்து, அதை ஆராய்ந்து அவர்களின் உடல்நல கோளாறைக் கூறுவது என்பது சாதாரணமான வேலை அல்ல. இம்மாதிரி வேலை செய்பவர்கள் நாம் ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும்.

Image Courtesy

சாலையில் உள்ள சடலத்தை அப்புறப்படுத்துபவர்

சாலையில் உள்ள சடலத்தை அப்புறப்படுத்துபவர்

சாலைகளில் விபத்தினால் இறந்த விலங்குகளை பலரும் வேடிக்கைப் பார்த்துவிட்டு தான் செல்வோம். ஆனால் அதை அப்புறப்படுத்துவதற்கு என்று கட்டாயம் யாரேனும் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இந்த மாதிரியான வேலையையும் உலகில் உள்ள சில மக்கள் செய்து வருகின்றனர் என்பதை மறவாதீர்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List Of The Most Disgusting Jobs

Here are list of jobs that you never want to chose from. If wondering what are these jobs, then read on to know more..