பிறப்பு குறைபாடுகளுடன் ஊக்கமளிக்கும் மனிதர்களாக வாழ்ந்து வருபவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தன்னம்பிக்கையால் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் மனிதர்களாக வாழ்ந்து வருபவர்களின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். அப்படி அவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட பின், நமக்கு ஓர் புதிய ஆற்றல் கிடைத்தது போன்று மற்றும் நம்முடைய இலக்குகளை கட்டாயம் அடைய வேண்டுமென்ற எண்ணம் இன்னும் மேலோங்கும்.

இவ்வுலகில் பிறப்பு குறைபாடுகளுடன் பிறந்த சில மனிதர்களும் மற்றவர்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் மனிதர்களாக தங்களது வாழ்வில் சாதனைப் படைத்து வருகின்றனர்.

இங்கு அதில் டவுன் சின்ட்ரோம் என்னும் பிறப்பு குறைபாட்டுடன் பிறந்து, இன்று மற்றவர்கள் முன்பு சிறந்த மனிதர்களாக வாழ்ந்து வருபவர்களைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எய்லின் பரீரோ

எய்லின் பரீரோ

டவுன் சின்ட்ரோமினால் பாதிக்கப்பட்ட இந்த பெண் அர்ஜென்டினாவின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனது நடன திறமையை வெளிக்காட்ட நினைத்து பங்கு பெற்றார். மேலும் முதன் முதலில் இந்த ஷோவில் இந்த நிலையுடன் பங்கு கொண்ட முதல் பெண் இவர் தான். இப்போட்டியில் இவர் வெற்றி பெறாவிட்டாலும், பல மில்லியன் மக்களின் இதயத்தில் இடம் பெற்றார்.

Image Courtesy

மேடிசன் டெவ்லின்

மேடிசன் டெவ்லின்

இந்த பதின்வயது சிறுமிக்கு இசையில் மிகுந்த விருப்பம் உள்ளது. மேலும் இந்த சிறுமி யூடியூப்பில் ஜான் லெஜெண்ட்டின் "All of Me" பாடலைப் பாடி வெளியிட்டுள்ளார். இவர் பாடி வெளியிட்ட பாடலை 6 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர் என்றால் பாருங்கள்.

Image Courtesy

அங்கேலா பேச்சில்லர்

அங்கேலா பேச்சில்லர்

இவர் ஸ்பெயினில் உள்ள பொது அலுவலகத்தில் டவுன் சின்ட்டோமுடன் முதல் பெண் ஆலோசகராக உள்ளார்.

Image Courtesy

டிம் ஹாரிஸ்

டிம் ஹாரிஸ்

டவுன் சின்ட்ரோம் கொண்ட இவர் அமெரிக்காவில் சொந்தமாக ஒரு ரெஸ்ட்ரண்ட்டை நடத்தி வருகிறார். இவரது கனவு சொந்தமாக ரெஸ்ட்ரண்ட் வைப்பது என்பதால், இவரது பெற்றோரும் அதை நிறைவேற்றி வைத்துள்ளனர்.

Image Courtesy

நொய்லியா கரெல்லா

நொய்லியா கரெல்லா

டவுன் சின்ட்ரோம் கொண்ட இந்த பெண் அர்ஜென்டினாவில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

Image Courtesy

பப்லோ பினிடா

பப்லோ பினிடா

இவர் ஒரு நடிகர் மற்றும் 2009 இல் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் ஷெல் விருதை தம்பியன் என்னும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பெற்றுள்ளார். மேலும் ஐரோப்பாவில் டவுன் சின்ட்ரோமுடன் பட்டம் வாங்கிய முதல் மாணவரும் இவர் தான்.

Image Courtesy

சவ் சவ்

சவ் சவ்

இசை எழுத்துக்களை படிக்காமல் பாட்டு வடிவில் கேட்டு மியூசிக் கண்டக்டராக இருப்பவர் தான் சவ் சவ். இவருக்கு இசைக்கருவியான சிம்பொனியில் உள்ள அனைத்து பாகங்களைப் பற்றியும் நன்கு தெரியும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List Of Inspirational People With Down Syndrome

Here, in this article, we've shared the list of inspirational people who are suffering from Down's syndrome and yet are very successful in their lives.
Story first published: Tuesday, May 24, 2016, 14:12 [IST]
Subscribe Newsletter