டாக்டர் அம்பேத்கர் பற்றி நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில்1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டவர். இவர் இந்தியாவிலேயே உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். இவர் சட்டம், அரசியல், வரலாறு, தத்துவம் போன்ற துறைகளில் கைத்தேர்ந்தவர்.

இவர் சிறந்த ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், புரட்சியாளராகவும் விளங்கியவர். இவை அனைத்திற்கும் மேலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையும் குழுவின் தலைவராக இருந்தவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிய பெரிதும் போராடியவர்.

இவ்வளவு சிறப்புகளுக்கு பெயர் போன டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரான டாக்டர் அம்பேத்கர், அவரது பெற்றோருக்கு 14 ஆவது குழந்தையாவார்.

தகவல் #2

தகவல் #2

டாக்டர் அம்பேத்கரின் முன்னோர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் நீண்ட காலம் வேலை பார்த்து வந்தனர்.

தகவல் #3

தகவல் #3

அம்பேத்கரின் உண்மையான பெயர் அம்பேவாதேகர் ஆகும். ஆனால் இவரது ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர், இவரைப் பிடிக்கும் என்பதால் இவரது பெயரைப் பள்ளி பதிவுகளில் அம்பேத்கர் என்று மாற்றிவிட்டார்.

தகவல் #4

தகவல் #4

டாக்டர் அம்பேத்கர் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் 2 வருடங்கள் கல்லூரி முதல்வராக இருந்தார்.

தகவல் #5

தகவல் #5

அம்பேத்கர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ கடுமையாக எதிர்த்தவர்.

தகவல் #6

தகவல் #6

இந்தியாவிலேயே வெளிநாட்டில் பொருளியல் முனைவர் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.

தகவல் #7

தகவல் #7

டாக்டர் அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டில் இருந்து கடுமையான நீரிழிவு நோயால் பல அவஸ்தைகளை அனுபவித்து, 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது உயிரைத் துறந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dr BR Ambedkar: 7 Facts You May Not Have Known About Him

Here we bring to you 7 facts you may not have known about Dr BR Ambedkar. Read on to know more...
Subscribe Newsletter