உங்களை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் நடந்து கொள்ளும் விதம் மற்றும் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் முக்கிய காரணம் நம் மூளை தான். அனைவருக்கும் ஒரே மாதிரியான மூளை தான் இருக்கும். ஆனால் அதன் சிந்திக்கும் திறன் மற்றும் செயல்பாட்டில் தான் வேறுபாடுகள் இருக்கும்.

இக்கட்டுரையில் நாம் இப்போது பார்க்கப் போவது சில மனோதத்துவ உண்மைகளைக் குறித்து தான். இந்த உண்மைகள் நிச்சயம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் மற்றும் கடவுளின் படைப்பை போற்றவும் செய்யும்.

சரி, இப்போது நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.

உண்மை #2

உண்மை #2

உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

உண்மை #3

உண்மை #3

ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

உண்மை #4

உண்மை #4

சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.

உண்மை #5

உண்மை #5

முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.

உண்மை #6

உண்மை #6

பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.

உண்மை #7

உண்மை #7

இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

உண்மை #8

உண்மை #8

ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

உண்மை #9

உண்மை #9

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?

உண்மை #10

உண்மை #10

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Psychological Facts That Will Blow Your Mind

Here in this article, we are here to share the list of amazing facts that will blow your mind. These are the facts that will amaze and shock you. Check out.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter