நியூயார்க், லண்டன், மும்பை போன்ற உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்!!

Posted By:
Subscribe to Boldsky

அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பிரதேசங்கள் ஆகிய தென், வட துருவங்கள் புவி வெப்பமடைந்து வருவதால் மிக வேகமாக உருகி வருகிறது. இதனால் வரும் அரை நூற்றாண்டுக்குள் இவை முழுவதுமாக உருகிவிடும். மேலும் கடல்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆழ்கடலில் மூழ்கிய பண்டையக் காலத்து அற்புத நகரங்கள்!!!

இவ்விரண்டு துருவங்கள் மட்டுமின்றி கிரீன்லாந்து பனிப்படலங்களும் கூட அதிவேகமாக உருகி வருகின்றன. ஒருவேளை இந்த கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுவதுமாக உருகிவிட்டால் உலகின் மிக முக்கியமான நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எட்டு அங்குலம் உயர்ந்துள்ளது

எட்டு அங்குலம் உயர்ந்துள்ளது

ஏற்கனவே, புவி வெப்பமயம் ஆதல் காரணத்தினால், நமது உலகில் கடலின் உயரம் எட்டு அங்குலம் வரை உயர்ந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பல கடலோர பகுதிகள் மற்றும் தீவுகளின் கடற்கரை மட்டம் உயர்ந்து வருகிறது

கிரீன்லாந்து பனிப்படலங்கள் உருகிவிட்டால்

கிரீன்லாந்து பனிப்படலங்கள் உருகிவிட்டால்

ஒருவேளை இப்போது வேகமாக உருகி வரும் கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுமையாக உருகிவிட்டால் தற்போது உள்ளதை விட 23 அடி வரை வர கடல் மட்டம் உயரலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் உலகின் முக்கிய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன.

ஷாங்காய்

ஷாங்காய்

சீனாவின் மிக முக்கியமான நகராக திகழ்ந்து வருகிறது ஷாங்காய். ஏறத்தாழ இரண்டு கோடியே நாற்பத்தி ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்து வரும் உலகின் பெரும் நகரம். வர்த்தக ரீதியாக உலகின் முக்கிய நகராக விளங்கிவரும் இந்த நகரம் கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் இருக்கிறது.

நியூயார்க்

நியூயார்க்

வர்த்தக ரீதியில் உலகின் மற்றுமொரு முக்கிய நகராக திகழ்ந்து வருகிறது அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க். ஏறத்தாழ இந்த நகரில் 90 இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். கிரீன்லாந்து பனிப்படலம் முற்றிலுமாக உருகினால் இந்நகரமும் கடலில் முற்றிலுமாக மூழ்கிவிடும்.

சிட்னி

சிட்னி

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத்வேல்ஸ் பகுதியின் தலைமை இடம் சிட்னி. இங்கு ஏறத்தாழ ஐம்பது இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலக சந்தை பொருளாதாரத்தில் முக்கியமான நகராக திகழ்ந்து வரும் சிட்னியும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது.

இஸ்தான்புல்

இஸ்தான்புல்

துருக்கியின் மிக முக்கியமான நகர். வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, கலாச்சாரம், வரலாறு, நாட்டின் பொருளாதாரம் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் நகர் தான் இஸ்தான்புல். இந்நகரமும் கடலில் மூழ்கிவிடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். இந்த நகரில் ஏறத்தாழ 1.5 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சான் பிரான்சிஸ்கோ

சான் பிரான்சிஸ்கோ

வடக்கு கலிபோர்னியா பகுதியின் முக்கிய நகரம் சான் பிரான்சிஸ்கோ. கலாச்சாரம், வணிகம், பொருளாதாரம் போன்றவற்றில் இந்த நகரம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஐம்பது இலட்சம் பேர் வாழ்ந்து வரும் நகரான சான் பிரான்சிஸ்கோவும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது.

மும்பை

மும்பை

இந்தியாவின் மான்செஸ்டர் நகரான மும்பை வர்த்தக ரீதியாக மாபெரும் நகராக விளங்கி வருகிறது. கடலோர பகுதியான மும்பையும் அபாயத்தில் இருக்கிறது. இங்கு ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சம் பேர் இங்கு குடிப்பெயர்ந்து வந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

லண்டன்

லண்டன்

இங்கிலாந்தின் மிகமுக்கியமான நகர் என்று லண்டனை குறிப்பிடலாம். இது மாபெரும் வரலாற்று பின்னணி கொண்ட நகரும் கூட. இங்கு ஏறத்தாழ 80 இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

எழுச்சியின் இலச்சினை என்று புகழப்படும் சிங்கப்பூரும் கூட கடலில் மூழ்கும் அபாயத்தில் தான் இருக்கிறது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான சிங்கப்பூரில் ஐம்பது லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

அம்ஸ்ரடாம்

அம்ஸ்ரடாம்

நெதர்லாந்தின் முக்கிய நகர் அம்ஸ்ரடாம் இது ஒரு மெட்ரோபொலிட்டன் பகுதியாகும். இங்கு ஏறத்தாழ இருபது லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகரும் கடலில் மூழ்கும் அபாயத்தில் தான் இருக்கிறது.

கேப் டவுன்

கேப் டவுன்

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்கிற்கு அடுத்து முக்கியமான நகராக விளங்கிவரும் கேப் டவுன் பகுதியும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

துபாய்

துபாய்

உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வரும் துபாய். அதிவேகமாக வளர்ச்சி கண்ட பகுதி. உலக பணக்காரர்கள் இங்கு கோடிகளை கோடி வீடுகளை வாங்கி வருகிறார்கள். ஆனால், துபாயும் கடலில் மூழ்கும் அபாயத்தில் முதன்மை பகுதியாக இருக்கிறது.

டோக்கியோ

டோக்கியோ

ஜப்பானின் தலைநகர் மற்றும் பெரிய நகர் டோக்கியோ. இது ஒரு மாபெரும் தொழில்நுட்ப நகரம் என்று தான் குறிப்பிட வேண்டும். மக்கள் தொகை அதிகமாக இருக்கும் உலகின் பெரிய மெட்ரோபொலிட்டன் நகர் இது. இங்கு ஏறத்தாழ 1.3 கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். டோக்கியோவும் கடலில் மூழ்கும் அச்சத்தில் உள்ளது.

ரியோ டி ஜெனிரோ

ரியோ டி ஜெனிரோ

பிரேசிலின் இரண்டாவது பெரும் நகரம் ரியோ டி ஜெனிரோ. உல்லாச நகரம் என்று குறிப்பிடும் அளவில் இங்கு கொண்டாட்டங்களுக்கு குறைவே இருக்காது. உலக பாரம்பரிய நகர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 1.2 கோடி பேர் வாழும் இந்த நகருமும் அழிந்துவிடும் அச்சத்தில் தான் இருக்கிறது.

சென்னை

சென்னை

வெள்ளப்பெருக்குக்கே நிலைக்குலைந்து போன சென்னையும் இதற்கு தப்பாது. இயற்கையை சீர்குலைத்த நமது செயல்பாடுகளின் விளைவு தான் இது. இயற்கை இனி வரும் நாட்களில் அதற்கான தக்க பதிலடிகளை தரத்தான் போகிறது என்பது மட்டுமே உண்மை.

60 கோடி மக்கள்

60 கோடி மக்கள்

கிரீன்லாந்து பனிப்படலங்கள் முற்றிலுமாக உருகி கடல்மட்டம் உயர்ந்தால் ஏறத்தாழ உலகில் 60 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் தருணம் ஏற்படும். இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுமா???

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

World Major Cities Will Be Submerged

If the Greenland ice sheets melt, our major cities including New york, London, Mumbai will be submerged.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter