For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ணனின் இடக்கை தானம் குறித்த சுவாரஸ்ய கதை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

By John
|

கர்ணன், பாண்டவர்களின் மூத்த அண்ணன், துரியோதனின் உயிர் தோழன், கொடை வள்ளல், குருஷேத்திரம் போரில் நட்புக்காக உயிர் துறந்த தியாகி. அதுவும் கண்ணனின் சூழ்ச்சி முடிச்சுகளால் வீழ்த்தப்பட்டவன்.

இராமாயணத்தில் வரும் இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!

சரித்திரத்தில் தர்மத்திற்கு பெயர் போனவன். யாரேனும் அதிகமாக கொடை செய்தாலோ அல்லது ஒரு ரூபாய் அதிகம் பிச்சை போட்டால் கூட, "ஆமா, இவன் பெரிய கர்ணன், கர்ண பரம்பரை.." என்று தான் பல நூற்றாண்டுகளாக நாம் கூறி வருகிறோம்.

மகாபாரதத்தில் திரௌபதியை பற்றி நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

மகாபாரதத்தில் துரியோதனன் பக்கம் நின்று சண்டையிட்டும் மற்ற அனைவர்களையும் விட அதிக நற்பெயர் கொண்டவனாக திகழ்ந்தவன் கர்ணன். இனி, கர்ணனின் இடக்கை தானம் குறித்த சுவாரஸ்ய கதை குறித்துக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலையெழு வள்ளல்களில் முதல்வன்

தலையெழு வள்ளல்களில் முதல்வன்

வரலாற்றில் சிறந்த வள்ளகளில் முதன்மையில் இருப்பவன் கர்ணன். வந்தவருக்கு இல்லை என்று கூறாத இவனது குணமும், போர்களத்தில் தனது உயிரைக் காத்து வைத்திருந்த தான பண்பினால் கிடைத்த அருளையும் கூட தானமாய் கொடுத்த இவனது பண்பும் தான் அதற்கு காரணம்.

எண்ணெய் நீராட்டு

எண்ணெய் நீராட்டு

ஒரு நாள் கர்ணன் எண்ணெய் நீராட்டுக்காகத் தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்துத் தன் உடலில் தடவிக் கொண்டிருந்தான். அப்போது ஓர் இரவலன் வந்தான்.

பிக்ஷாம்தேகி

பிக்ஷாம்தேகி

அந்த இரவலன் கர்ணனிடம் பிக்க்ஷாம்தேகி என்றி (பிச்சையிடுக) இரவல் வேண்டி வந்து நின்றான்.

தங்க கிண்ணம் தர்மம்

தங்க கிண்ணம் தர்மம்

உடனே தனது இடக்கை பக்கமாக இருந்த தங்க கிண்ணத்தை தனது இடக் கையாலையே எடுத்து, இரவலனுக்கு அளித்துவிட்டான் கர்ணன். இரவலனும் மகிழ்வுடன் சென்றான்.

அருகிலிருந்த நண்பர்

அருகிலிருந்த நண்பர்

அப்போது அருகிலிருந்த நண்பர், கர்ணா, இடக் கையால் தானம் தரலாகாது என்று அறநூல் கூறுகின்றதே. தாங்கள் செய்தது அறநூலுக்கு எதிரானது அல்லவா? வலக் கையால் தானே தர்மம் செய்தல் வேண்டும் என்று கூறினார்.

கர்ணனின் பதில்

கர்ணனின் பதில்

நண்பரே, அந்த அறநூலை நான் நன்கு படித்தவன். ஆனால், மனித மனம் நிலையானது அல்ல. நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். இடக்கை அருகே இருக்கும் தங்க கிண்ணத்தை வலக் கையால் எடுக்க சில நொடிகள் ஆகும். அதனால் தான் இடக் கையில் கொடுத்தேன் என்றான்.

கொடை தடுமாறிப் போகலாம்

கொடை தடுமாறிப் போகலாம்

மற்றும் அந்த சில நொடிகளில் மனம் மாறிட வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வளவு உயர்ந்த தங்க கிண்ணத்தை தானம் தர மனம் மறுக்கலாம். அதனால் தான் இடக் கையில் உடனே தானம் செய்தேன் என்று இடக் கையில் தானம் செய்ததற்கு காரணம் கூறினான் கர்ணன்.

நண்பர் வியப்படைந்தார்

நண்பர் வியப்படைந்தார்

இதைக் கேட்ட கர்ணனின் நண்பர்," கர்ணா, உனது தானம், கொடை பண்பு அந்த அறநூல்களையும் விஞ்சிவிட்டது. உன்னை விட ஒருவன் தானத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க முடியாது என்று வாழ்த்திக் கூறினார்.

மற்றொரு கதை

மற்றொரு கதை

ஓர் நாள் கர்ணன் தனது அரண்மனையில் இருக்கும் போது, ஓர் இரவலன் கர்ணனிடம், "ஐயா, நாட்டில் விடாது மழைப் பெய்து வருவதால் காய்ந்த விறகுகள் கிடைக்கவில்லை. அரிசி இருந்தும் விறகு இல்லாததால் சமைக்க இயலாது பட்டினியாக இருக்கிறோம். நீங்கள் தான் தர்மம் செய்ய வேண்டும்" என்றுக் கேட்டுக் கொண்டார்.

 அரண்மனையில் விறகு

அரண்மனையில் விறகு

உடன் இருந்த அனைவரும் அரண்மனையில் காய்ந்த விறகிற்கான அவசியமே இல்லை. மற்றும் நமது அரண்மனையில் இதற்கு எங்கே போவது என்று கூறினார்கள்.

தர்மம் செய்ய இயலாது

தர்மம் செய்ய இயலாது

கண்டிப்பாக இந்த இரவலனுக்கு கர்ணனால் தர்மம் செய்ய இயலாது, இல்லை என்று கூறி தான் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறி வந்தனர்.

கர்ணனின் கொடைநலன்

கர்ணனின் கொடைநலன்

ஆனால், கர்ணன் அனைவரின் எண்ணத்தையும் பொய்ப்பித்து, அரண்மனையின் தாழ்வாரத்தில் போட்டிருந்த கை மரங்களில் சிலவற்றைப் பிரித்தெடுத்தான். நன்கு காய்ந்திருந்த அவற்றை அந்த இரவலனுக்குக் கொடுத்து அனுப்பினான்.

பாராட்டுதல்

பாராட்டுதல்

சுற்றி இருந்தவர்கள் அனைவரும், வள்ளல் தன்மைக்கு ஒருவன் என்று உலகம் கர்ணனைப் பாராட்டுவது சரிதான் என்று கூறி புகழ்ந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Story About Karnan's Donation

Do you know about the interesting story about karunans donation? read here.
Story first published: Tuesday, June 2, 2015, 10:21 [IST]
Desktop Bottom Promotion