நறுமணம் வீசிய நதியா இப்படி சாக்கடை நாத்தம் அடிகிறது!! - கூவம் பற்றிய அரிய தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

கூவம், சென்னையின் ஜீவநதியாக திகழ்ந்த காலம் ஒன்று இருந்தது என்று 80 வயதை தொட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் தெரிந்த விஷயம் ஆகும். குடிநீராகவும், பொழுதுபோக்கு இடமாகவும் கூவம் இருந்தது என்று இப்போது கூறினால், நம்மை பவர் ஸ்டாரை புன்ச் வசனம் பேசுவதை போல தான் பார்ப்பார்கள்.

உங்களால் நம்ப முடியாத சில அதிர்ச்சிகரமான உண்மைகள்!!!

1960 முதல் 70-கள் வரை கூட கூவம் நன்றாக தெளிந்த நீரோட்டம் கொண்ட நதியாக தான் இருந்திருக்கிறது கூவம். காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களினால், கழிவுகள் அதிகம் கலக்கப்பட்டுக் கூவம் என்பதன் பொருள் சாக்கடை என்பதை போல ஆகிவிட்டது.

இந்தியாவில் அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய கொடூர நிலநடுக்கங்கள்!!!

இனி, கூவம் எப்படி இருந்து, இப்படி ஆனது என்பதனை பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சென்னையில் முக்கிய ஆறுகள்

சென்னையில் முக்கிய ஆறுகள்

சென்னையில் இரண்டு முக்கிய ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று அடையாறு மற்றொன்று கூவம்.

நீராதாரம்

நீராதாரம்

சென்னையின் நீராதாரத்தை தாங்கி ஓடிக்கொண்டிருந்த நதிகளில் ஒன்று, இன்று சாக்கடை என்று இகழாரம் சூட்டப்பட்டு, கூனி குறுகி காட்சியளிக்கிறது.

மதராசப்பட்டிணம்

மதராசப்பட்டிணம்

மதராசப்பட்டிணமாக இருந்த வரை தான் கூவம் உண்மையிலே கூவமாக இருந்தது என்று கூறலாம். மதராசப்பட்டிணத்தின் மக்களுக்கு ஒரு மாபெரும் நீதாரமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும், திகழ்ந்த நதி தான் கூவம்.

மணம் வீசும் கூவம்

மணம் வீசும் கூவம்

"மனம் பறிக்கும் மணம் வீசும் கூவம்..." என்று வாய் நிறைய பேசிய காலம் ஒன்று இருந்தது. கூவம் அருகே சென்றாலே நல்ல மணம் வீசும் என்று கூறுவார்கள். இன்றும் கூறுகிறார்கள் ஆனால், அது நறுமணமாக அல்லது மூக்கை பொத்திக்கொள்ளும் படியான நாற்றமாக ஆகிவிட்டது.

படகுப் போட்டி

படகுப் போட்டி

கூவத்தில் அந்நாட்களில் நிறைய படகுப் போட்டிகள் எல்லாம் நடைப்பெற்றிருக்கின்றன. இதை எல்லாம் சொல்லும் போதே (நீங்கள் சென்னைவாசியாக இருந்தால்) மெய் கூசும்படி ஆகும். இதை நேரில் கண்டால்... அந்த நிலை வர வேண்டும் என்று தான் லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

மீன் தொழில்

மீன் தொழில்

சுதந்தரத்திற்கு பின் ஏறத்தாழ 30 - 40 ஆண்டுகள் வரையிலும் நல்ல மீன் வளம் கொண்ட நதியாக தான் கூவம் இருந்திருக்கிறது கூவம். சாக்கடை கழிவு நீரின் அதிகப்படியானகக் கலப்பினால் தான் கொஞ்சம், கொஞ்சமாக மீன் வளம் குறைந்துப் போனது. இன்று மீன்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் காகிதங்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன.

நோய் அபாயம்

நோய் அபாயம்

கூவத்தை சுற்றி குடியிருக்கும் குடிசை வாழ் மக்களில் பெரும்பாலானோருக்கு நிறைய நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு கூவம் ஒரு காரணமாய் திகழ்ந்து வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

கொசுக்களின் பண்ணை

கொசுக்களின் பண்ணை

முதலை பண்ணைக்கு மாமல்லபுரம் என்றால், கொசுக்களின் பண்ணை கூவம் என்று கூறலாம். கொசுக்கள் பறப்பது, தெரு விளக்கின் ஒளிக்கீற்றுகளின் நடுவே ஏதோ மழை பொழிவதை போல காட்சியளிக்கும்.

சுனாமி

சுனாமி

சென்னையில் கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலைகள் வந்த போது, கடல் நீர் உட்புகுந்ததால் கூவம் பல ஆண்டுகள் கழித்து தெளிந்த நீரோடை போல காட்சியளித்தது. ஆனால், அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஓரிரு நாட்களில் மீண்டும் கழிவுகளின் காரணத்தினால் கருமையாகி போனது கூவம்.

கூவம் மட்டுமல்ல...

கூவம் மட்டுமல்ல...

கூவம் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தொழிற்சாலைகளின் கழிவுகளினால் பல ஆறுகள் மாசுபட்டு, அதன் இயல்பு தன்மையை இழந்து காட்சியளிக்கிறது.

நீண்ட நாள் கனவு

நீண்ட நாள் கனவு

சென்னை மக்களின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று, கூவம் சுத்தீகரிப்பு. இது மட்டும் நடந்துவிட்டால், சென்னையின் நீராதாரம் மட்டுமின்றி, கூவத்தை சுற்றி இருக்கும் மக்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம் என பலவன மேன்மையடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Golden Memories About Chennai Koovam River

Do you know about the facts about Chennai's Koovam river? Read here.
Story first published: Wednesday, April 29, 2015, 10:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter