Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்களுக்கு தெரியுமா? இதெல்லா நடந்தா, அது இங்க மட்டும் தான் நடக்குமாம்!!
சிலர் அவர்களது காலரை தூக்கிவிட்ட படி கூறுவார்கள், "இதெல்லாம் நாங்க மட்டும் தான் பண்ண முடியும் வேற எவனாலும் பண்ண முடியாது.." என்று. ஒருவேளை அது அவர்களது தனி திறமையாக கூட இருக்கலாம். ஆனால், இயற்கையாகவே சில விஷயங்களில் சில இடங்களில் மட்டும் தான் நடக்கின்றது எனும் போது நமக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கும். அப்படி பல விஷயங்களுக்கு பல இடங்கள் மற்றும் சிலரினால் மட்டும் செய்ய முடிகிறது என்பது மிகவும் பிரசித்திப் பெற்று இருக்கிறது. அதை பற்றி தான் இங்கு இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்...

ஐரோப்பியா
ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் தான் பாலைவனங்களே கிடையாதாம்.

ஜே (J)
தனிம வரிசை அட்டவணை எனப்படும் Periodic Table-இல் இடம் பெறாத ஒரே எழுத்து என்ற பருமை ஜே (J)க்கு மட்டும் தான் இருக்கிறது.

வீனஸ்
வீனஸ் கிரகம் மட்டும் தான் கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம்.

அன்டார்ட்டிகா
அன்டார்ட்டிகா கண்டத்தில் மட்டும் தான் ஊர்வன / பாம்பு உயரினங்கள் உயிர் வாழ்வதில்லையாம்.

பனிக்கரடி
கர்ப்பமாக இருக்கும் போலார் பெண் கரடிகள் மட்டும் தான் உறங்குமாம்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா நாடு மட்டும் தான் அது கண்டமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது

யானை
பாலூட்டி உயிரினங்களில் யானை மட்டும் தான் குதிக்க முடியாத ஒரே மிருகம்.

வவ்வால்
பாலூட்டிகளில் பறக்கும் திறன் இருக்கும் ஒரே உயிரினம் வவ்வால்

ரீங்கார பறவைகள் (hummingbirds)
ரீங்கார பறவைகள் தான் பின்னோக்கியும் பறக்கும் ஒரே பறவை இனம்

கொசு
பெண் கொசுக்கள் மட்டும் தான் கடிக்குமாம். (ஆம்பளைங்க கொசு பிறவியில கூட வாயில்லா பூச்சியா தான் இருக்காங்க)



Click it and Unblock the Notifications
