For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகைப்பிடிக்கும் போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? இத படிங்க...

புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாக்குகிறது. சிகரெட் அல்லது பீடி புகைப்பதால் மனநலத்தில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

|

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் இந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள் இதனை கைவிடுவதில்லை. கைவிட நினைத்தாலும் அது அவர்களுக்கு கடினமான ஒரு செயலாகவே உள்ளது. புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாக்குகிறது.

What Are The Effects Of Smoking On The Brain And Nervous System?

சிகரெட் அல்லது பீடி புகைப்பதால் மனநலத்தில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பி.எல்.ஓ.எஸ் ஒன் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி பற்றிய பகுப்பாய்வு ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம், பெல்கிரேட் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள ப்ரிஸ்டைன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

MOST READ: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்!

இந்த ஆராய்ச்சியில், செர்பிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார சூழல் ஆய்வு செய்யப்பட்டது. புகை பழக்கம் இல்லாத மாணவர்களை விட புகைபிடிக்கும் மாணவர்களில் மனச்சோர்வு ஏற்படுவதற்கான அபாயம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என்பதை இது வெளிப்படுத்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப் பழக்கம் மற்றும் நரம்பு மண்டலம்

புகைப் பழக்கம் மற்றும் நரம்பு மண்டலம்

ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளர் லிவின் கூறுகையில், புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறுகிறார் . புகைப்பிடிக்கும் பழக்கம் மனச்சோர்வை உண்டாக்கும் என்று சொல்வதை விட புகையிலை பழக்கம் மனநல ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாக்குகிறது என்று கூறலாம்.

 ஆய்வு

ஆய்வு

ஆராய்ச்சியின்படி, குறிப்பாக ப்ரிஸ்டைன் பல்கலைக்கழகத்தில், மனச்சோர்வு உள்ளவர்களில் 14% புகைப்பழக்கம் உள்ளவர்கள். 4% புகைப்பழக்கம் இல்லாதவர்கள். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் 19% மற்றும் 11% என்று கணக்கிடப்பட்டது.

மாணவர்களின் சமூக அரசியல் பின்புலன் மற்றும் பொருளாதார பின்புலன் ஆகியவற்றைத் தாண்டி, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மனச்சோர்விற்கு அதிகம் உட்பட்டனர். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டனர்.

சிகிச்சை மற்றும் கவுன்சிலிங்

சிகிச்சை மற்றும் கவுன்சிலிங்

இந்த போதையில் இருந்து விடுபட மருத்துவர்கள் நிகோடின் மாற்று சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். மருந்து மாத்திரை தவிர, பழக்கவழக்கத்தில் மாற்றம், அதாவது குணநலன் சிகிச்சை அளித்து அந்த பழக்கத்தை போக்க முயற்சித்தனர். மன அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்க அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

உயிரைப் பறிக்கும் பழக்கம்

உயிரைப் பறிக்கும் பழக்கம்

உடல் பருமன், மது அருந்துதல் , கொடிய தொற்றுநோய் , சாலை விபத்து போன்றவற்றை விட புகை பழக்கம் பலரின் உயிரைப் பறிக்கிறது. சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றில் பல்வேறு தீங்கு உண்டாக்கும் ரசாயனங்கள் உள்ளன. அவற்றுள் சில, நிகோடின், டார், கார்பன் மோனோஆக்ஸைடு , ஹைட்ரஜன் சயனைடு , பார்மாலிடீஹைடு , ஆர்சனிக் அமோனியா , பெனிஸின் , புட்டேன் ஹெக்ஸாமின் , காட்மியம் , போன்றவையாகும். இவை அனைத்தும் புகை பிடிப்பவர் மற்றும் அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு தீங்கை உண்டாக்கக்கூடும்.

புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இதர அபாயங்கள்

புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இதர அபாயங்கள்

நுரையீரல் புற்றுநோய், சுவாசம் தொடர்பான பாதிப்புகள் போன்றவற்றின் அபாயத்தை புகைப்பழக்கம் அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு அபாயம் , கருவுறுதலில் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்குகிறது. வழக்கமான வயது முதிர்விற்கான செயல்பாட்டை புகைப்பழக்கம் விரைவு படுத்துகிறது. இளம் வயதில் முக சுருக்கங்கள் மற்றும் சரும அழற்சி போன்றவற்றை உண்டாக்குகிறது . இது மட்டுமில்லாமல் புகைப்பழக்கம் இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

முடிவு

முடிவு

நீண்ட நாட்கள் சிகரெட் புகைப்பதால் ஒருவர் அதற்கு அடிமையாகிறார். இளம் வயதில் இதனை பயன்படுத்துபவர்கள் விரைவில் இந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த சூழ்நிலையில் வெறும் 6% நபர்கள் மட்டுமே இந்த போதையில் இருந்து வெளிவர முடிகிறது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are The Effects Of Smoking On The Brain And Nervous System?

What are the effects of smoking on the brain and nervous system? Read on...
Desktop Bottom Promotion