For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூண்டின் முழு நன்மையும் கிடைக்க எப்படி சாப்பிடணும் தெரியுமா? இத படிங்க...

பூண்டு உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரை நோயைப் பராமரிக்க மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.

|

அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவர் தங்களது உணவில் பூண்டுகளை அதிகம் சேர்த்து வருவதன் மூலம் பருவ கால ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். சமையலில் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் பூண்டு, பண்டைய கால மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டது. சொல்லப்போனால், ஆயுர்வேத்தில் கூட பூண்டின் மருத்துவ குணங்களால் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

The Right Way To Eat Garlic To Get Maximum Benefits

பூண்டு உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரை நோயைப் பராமரிக்க மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இருப்பினும், இதன் மணம் மற்றும் சுவை காரணமாக, இதை பச்சையாக சாப்பிடுவது என்பது கடினமானதாகவே இருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பூண்டின் முழு நன்மைகளையும் பெறுவதற்கு எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்று கொடுத்துள்ளது. அந்த மாதிரி சாப்பிட்டால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

MOST READ: நாம் செய்யும் இந்த தவறுகளால் தான் பற்கள் இப்படி ஆகுதுன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டில் உள்ள சத்துக்கள்

பூண்டில் உள்ள சத்துக்கள்

பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிவதோடு, ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. அதோடு, பூண்டில் வளமான அளவில் கனிமச்சத்துக்களான பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவை உள்ளன. மேலும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 போன்றவையும் அதிக அளவில் உள்ளன.

ஏன் குளிர்காலத்தில் பூண்டு சாப்பிட வேண்டும்?

ஏன் குளிர்காலத்தில் பூண்டு சாப்பிட வேண்டும்?

பூண்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை இயற்கையாக மேம்படுத்த உதவுகிறது மற்றும் பருவ கால நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான திறனை மேம்படுத்துகிறது. கூடுதலாக, குளிர்காலத்தில் பூண்டுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உடல் வெதுவெதுப்பான நிலையில் இதமாக இருக்கும். உங்களுக்கு பூண்டு சாப்பிட பிடிக்காது என்றால், அதை சாப்பிடுவதற்கான சில சிறப்பான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி சாப்பிட்டால், பூண்டில் உள்ள முழு சத்துக்களையும் எளிதில் பெறலாம்.

பச்சை பூண்டு

பச்சை பூண்டு

உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், பூண்டு பற்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வயதான பூண்டு இதயக்குழாய்களில் உள்ள அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் பச்சை பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இது இரத்தத்தை மெலிதாக்க உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

ஏன் பச்சை பூண்டு நல்லது?

ஏன் பச்சை பூண்டு நல்லது?

பூண்டில் உள்ள மிகச்சிறப்பான ஒரு பொருள் தான் அல்லிசின். இந்த அல்லிசின் நற்பதமான பச்சை பூண்டில் தான் சிறப்பான அளவில் இருக்கும். பூண்டுகளை வேக வைக்கும் போது, அதில் உள்ள அல்லிசின் கூறு நீர்த்துப் போகும். எனவே பூண்டின் அதிகப்பட்ச ஊட்டச்சத்தைப் பெற விரும்பினால், பூண்டு பற்களை பச்சையாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதே நல்லது. பூண்டுகளை பச்சையாக சாப்பிட முடியாதவர்கள், அந்த பூண்டை இரவு தூங்கும் போது நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடிக்கலாம். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, சர்க்கரை நோயும் நிர்வகிக்கப்படும்.

பூண்டு டீ

பூண்டு டீ

பூண்டுகளை பச்சையாக சாப்பிடுவது என்பது கடினமான செயல் தான். ஆனால் நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு மேம்படுத்த நினைத்தால், பூண்டு டீ தயாரித்துக் குடிக்கலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி, அதில் ஒரு பூண்டு பல்லை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, பின் அதில் 1/2 டீஸ்பூன் பட்டை தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

சிக்கன் பூண்டு சூப்

சிக்கன் பூண்டு சூப்

பூண்டு சூப் தயாரிப்பதற்கு, 1 சிக்கன் நெஞ்சுக்கறியை வாங்கி நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய், 4 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி போட்டு, அத்துடன் 1 வெங்காயத்தையும் வெட்டிப் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் 4 மிளகு, சிறிது பார்ஸ்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதன் பின் சிக்கன் துண்டுகளைப் போட்டு, தேவையான அளவு உப்பு, அத்துடன் 4 முழு பூண்டு பற்கள், 1 இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கி, 3 கப் நீர் ஊற்றி, குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். சூப் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சிக்கன் பூண்டு சூப் தயார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Right Way To Eat Garlic To Get Maximum Benefits

Why should you eat garlic in winters? Here are some right way to eat garlic to get maximum benefits. Read on...
Desktop Bottom Promotion