For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜங்க் உணவில் இருந்து ஏன் விலகி இருக்க வேண்டும் என்பதற்கான 7 முக்கிய காரணங்கள்!

எளிமையாக கிடைப்பதும், இதன் நாவூறும் சுவையும், சமைக்கும் நேரம் குறைவாக இருப்பதும் , நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதும் ஜங்க் உணவுகளை மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாகும்.

|

தெருக்களில் கிடைக்கும் உணவுகள், சாட் வகைகள், சிப்ஸ், மென்மையான பானங்கள், ஐஸ் க்ரீம், பேக்கரி உணவுகள், சாக்லேட், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை நாம் ஜங்க் உணவுகள் என்று அழைக்கிறோம். ஜங்க் உணவுகள் எல்லா வயது மக்களிடமும் மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற ஒரு சக்தி வாய்ந்த பொருளாக உள்ளது.

Seven Major Reasons To Refrain From Junk Food

பலரும் இந்த உணவிற்கு அடிமையாக உள்ளனர். எளிமையாக கிடைப்பதும், இதன் நாவூறும் சுவையும், சமைக்கும் நேரம் குறைவாக இருப்பதும் , நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதும் ஜங்க் உணவுகளை மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாகும். இந்த காரணங்களினால் ஜங்க் உணவுகளை புறக்கணிப்பது இயலாமல் போகிறது.

MOST READ: காலையில் எழுந்ததும் ஏன் வெறும் வயிற்றில் காபி குடிக்கக்கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜங்க் உணவுகளை விலக்கி வைக்க வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள்:

ஜங்க் உணவுகளை விலக்கி வைக்க வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள்:

* ஜங்க் உணவுகள் கவனக் குறைபாட்டை உண்டாக்குகின்றன மற்றும் வளரும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கின்றன.

* ஜங்க் உணவுகள் உட்கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகிறது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

* ஜங்க் உணவுகளில் புரதம், வைட்டமின் மற்றும் மினரல் போன்ற ஊட்டச்சத்துகள் முற்றிலும் இல்லாமல் அல்லது மிகக்குறைந்த அளவு மட்டுமே உள்ளது.

* இந்த வகை உணவில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, ரசாயனக் கலவை மற்றும் கலோரிகள் மிக அதிகமாக உள்ளன.

* நீரிழிவு, இதய நோய், மற்றும் சில வகை புற்றுநோய்கள், ஜங்க் உணவுகள் உட்கொள்வதுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் எடை அதிகரிக்கும் நிலை உண்டாவதால் இன்னும் பல்வேறு உடல் சிக்கல்கள் உண்டாகிறது.

* இந்த வகையான மோசமான தரத்தை கொண்ட உணவுகளை உட்கொள்வதால் நோய்கள் அதிகரிப்பதாகவும் , புகை பிடிப்பதால் உண்டாகும் இறப்பு விகிதத்தை விட ஜங்க் உணவுகள் உட்கொள்வதால் உண்டாகும் இறப்பு விகிதம் அதிகரிப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

* ஜங்க் உணவுகளை உட்கொள்வதால் மூளையில் உள்ள ஏற்பிகள் ஊக்குவிக்கப்பட்டு டோபமைன் அளவு அதிகரிக்கப்படுகிறது. இதனால் மது / புகையிலை போல் இவ்வகை உணவிற்கும் மனிதன் அடிமையாகும் நிலை உண்டாகிறது.

ஜங்க் உணவுகள் உட்கொள்வதில் இந்தியாவின் நிலை என்ன?

ஜங்க் உணவுகள் உட்கொள்வதில் இந்தியாவின் நிலை என்ன?

ஆரோக்கியத்தின் அடிப்படையில் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தர வரிசை பட்டியலில் மிகவும் தாழ்ந்த இடத்தை பிடிப்பதாக உலகளாவிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறையால் இளைஞர்களிடையே கொரோனா காலங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களில் 43% பேர் ஜங்க் உணவு பயன்பாடு குறைந்துள்ளதாக ஒப்புக் கொண்டனர். அதேசமயம் 31% பேர் ஆரோக்கியமற்ற உணவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதாக பதிலளித்தனர். 68% பேர் இந்த உணவின் சுவைக்காக மட்டுமே இதனை விரும்பி உட்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இதனை எவ்வாறு சமாளிப்பது?

இதனை எவ்வாறு சமாளிப்பது?

* ஒவ்வொரு கலாச்சாரத்திலும் , ஒவ்வொரு பகுதியிலும் ஜங்க் உணவுகள் குறித்த ஒரு பார்வை உள்ளது. ஒரு கலாச்சாரத்தில் ஜங்க் உணவாக கருதப்படும் ஒரு உணவு மற்றொரு கலாச்சாரத்தில் அல்லது மற்றொரு பகுதியில் ஊட்டச்சத்து உள்ள உணவாக பார்க்கப்படுகிறது.

* பள்ளிகளில் ஜங்க் உணவுகள் உண்டாக்கும் தீமையான விளைவுகள் குறித்து பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

* பாக்கெட் உணவுகளை வாங்கும்போது அவற்றில் இருக்கும் லேபிளை படிப்பதால் அந்த உணவில் இருக்கும் சோடியம், சுக்ரோஸ், குளுக்கோஸ், டெஸ்ட்ரோஸ், மேப்பில் சிரப், ட்ரான்ஸ் கொழுப்பு போன்றவற்றின் அளவு குறித்து அறிந்து கொள்ள முடியும்.

* நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்க்க ஆரோக்கியமற்ற பானங்களுக்கு மாற்றாக சாதாரண நீர், மோர், லஸ்ஸி, ஜல்ஜீரா, சூப், சர்க்கரை இல்லாத மூலிகை தேநீர், மாம்பழ ஜூஸ், இளநீர், பழச்சாறு போன்றவற்றைப் பருகலாம்.

* சிறு தானியங்கள், கம்பு, பட்டாணி, கடலை பருப்பு, பாலிஷ் செய்யப்படாத தானியங்கள் போன்றவற்றை பேக் செய்து அல்லது காற்று கொண்டு பொரித்து உட்கொள்ளலாம். இந்த வகை உணவில் புரதம், இரும்பு, நார்ச்சத்து, கால்சியம் போன்றவை உள்ளன.

* ஜங்க் உணவென்று முத்திரை குத்தப்பட்ட உணவில் மூலப்பொருளாக உள்ள ஆரோக்கியமற்ற பொருளை நீக்கி விட்டு ஆரோக்கியமான பொருளை சேர்ப்பதை முயற்சிக்கலாம்.

* பதப்படுத்தப்பட்ட அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை வாங்குவதை குறைத்துவிட்டு, வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

முடிவுரை:

முடிவுரை:

உணவு தொழிற்சாலைகள் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு மாற்றாக ஆரோக்கியமான பொருட்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கிய காரணியாக இருக்கும் இயற்கையான மற்றும் வீட்டில் தயாரிக்கும் தயாரிப்புகளுக்கு மாறுவதால் நல்ல எதிர்காலம் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Major Reasons To Refrain From Junk Food

Here are seven major reasons to refrain from junk food. Read on...
Desktop Bottom Promotion