For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் இஞ்சி லெமன் டீ குடிப்பது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா?

இஞ்சி மற்றும் எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும் பண்புகள் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டும் பண்புகள் அதிகம

|

இன்று பலர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இஞ்சி லெமன் டீ குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இஞ்சி மற்றும் எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும் பண்புகள் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டும் பண்புகள் அதிகம் உள்ளது.

Reasons Why You Should Drink Lemon Ginger Tea

இத்தகைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயை, குளிர் காலத்தில் குடித்து வந்தால், நோய் தாக்குதல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கலாம். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நாம் நினைத்திராத பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. அதனால் தான் இஞ்சி லெமன் டீ குடிப்பது நல்லது என்று சொல்கிறார்கள். இப்போது நாம் அந்த இஞ்சி லெமன் டீயின் நன்மைகள் குறித்தும், அந்த டீயை எப்படி தயாரிப்பது என்றும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஜீரண பிரச்சனை நீங்கும்

அஜீரண பிரச்சனை நீங்கும்

இஞ்சி லெமன் டீயில் உள்ள உட்பொருட்கள், வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து, செரிமான செயல்பாட்டை சீராக்கும். மேலும் இந்த பானம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படுத்தும். இதில் உள்ள எலுமிச்சை அஜீரணம் மற்றும நெஞ்செரிச்சலைக் குறைக்கும் திறன் கொண்டது.

அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும்

அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும்

எலுமிச்சை மற்றும் இஞ்சி மனதை ஒருமுகப்படுத்தவும் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். எனவே உங்களால் எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவஸ்தைப்பட்டால், இஞ்சி லெமன் டீ குடியுங்கள்.

எடை குறைவு

எடை குறைவு

இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, பசியுணர்வைக் கட்டுப்படுத்த உதவும். எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் ஒரு டம்ளர் இஞ்சி லெமன் டீ குடித்தால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.

தலைமுடிக்கு நல்லது

தலைமுடிக்கு நல்லது

பல நூற்றாண்டுகளாக இஞ்சி மற்றும் எலுமிச்சை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், வறட்சி மற்றும் பொடுகைத் தடுக்கும் உட்பொருட்கள் உள்ளன. மேலும் இந்த டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், தலைமுடி வலிமையடைவதோடு, முடியும் பட்டுப் போன்று ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

இஞ்சி மற்றும் எலுமிச்சை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பொருட்களாகும். எனவே இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு டீ தயாரித்து ஒருவர் குடித்து வந்தால், நோய்க்கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் உடல் நலம் சரியில்லாத ஒருவர் இந்த டீயை ஒரு நாளைக்கு 1-2 கப் குடித்து வந்தால், விரைவில் உடல்நலம் குணமாகும்.

சர்க்கரை நோய் கட்டுப்படும்

சர்க்கரை நோய் கட்டுப்படும்

இஞ்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக 2015 இல் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது. எனவே இஞ்சி லெமன் டீ குடித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.

டீ தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

டீ தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 1 லிட்டர்

* எலுமிச்சை - 1

* நற்பதமான இஞ்சி - 1 துண்டு

* தேன் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

* முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் இஞ்சியை சேர்த்து நன்கு 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

* பின்பு அதனை இறக்கி 10 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

* இறுதியில் வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், இஞ்சி லெமன் டீ தயார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Should Drink Lemon Ginger Tea

Here are some reasons why you should drink lemon ginger tea. Read on to know more...
Story first published: Friday, October 4, 2019, 16:24 [IST]
Desktop Bottom Promotion