For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! விந்து வெளியேறும் போது வலிக்கிறதா? அது எதனால் தெரியுமா?

ஒரு ஆணுக்கு விந்துக்களை வெளியேற்றும் போது வலி ஏற்பட்டால், அது அந்த ஆணின் பாலியல் வாழ்க்கையில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே விந்து வெளியேறும் போது வலி ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத

|

வலிமிக்க விந்து வெளியேற்றத்தை ஆர்காஸ்மால்ஜியா என்று அழைப்பர். இப்பிரச்சனை இருந்தால், ஆண்கள் விந்துக்களை வெளியேற்றும் போது அல்லது விந்து வெளியேற்றத்திற்குப் பின் மிதமான அசௌகரியம் முதல் தீவிரமான வலியை சந்திக்க நேரிடும். இந்த வலியானது ஆண் குறி, விதைப்பை மற்றும் பெரினியல் அல்லது ஆசனவாய் பகுதிகளில் இருக்கும்.

Possible Causes for Painful Ejaculation

ஒரு ஆணுக்கு விந்துக்களை வெளியேற்றும் போது வலி ஏற்பட்டால், அது அந்த ஆணின் பாலியல் வாழ்க்கையில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே விந்து வெளியேறும் போது வலி ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

MOST READ: வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் இன்றுவரை விற்கப்படும் சில பொருட்கள்!

இங்கு விந்துக்களை வெளியேற்றும் போது எதனால் வலி ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுக்கிலவழற்சி/புரோஸ்டாடிஸ் (Prostatitis)

சுக்கிலவழற்சி/புரோஸ்டாடிஸ் (Prostatitis)

சுக்கிலவழற்சி என்பது புரோஸ்டேட் சுரப்பியில் தொற்று அல்லது அழற்சி ஏற்பட்டிற்கும் நிலையாகும். 50 வயதிற்குட்பட்ட ஆண்களில் இது மிகவும் பொதுவான சிறுநீரக பிரச்சினை.

இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையின் இதர அறிகுறிகளாவன அடிவயிற்றில் வலி மற்றும் விறைப்பு ஏற்படுவதில் சிரமம்.

புரோஸ்டாடிஸ் ஏற்படுவதற்கான அபாய காரணிகளாவன:

* சர்க்கரை நோய்

* பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்

* ஆசனவாய் உடலுறவு

* தீங்கற்ற விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்

* சிறுநீர் வடிகுழாயின் பயன்பாடு

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

சில வகையான அறுவை சிகிச்சைகளால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் வலிமிக்க விந்து வெளியேற்றம். அதில் தீவிர புரோஸ்டேடெக்டோமி என்னும் சிகிச்சையை மேற்கொண்டவர்களின் புரோஸ்டேட் உறுப்புக்கள் மற்றும் அருகில் உள்ள திசுக்களும் நீக்கப்படும். பெரும்பாலும் இந்த சிகிச்சை புரோஸ்டேட் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையின் அபாயங்களாவன விறைப்புத்தன்மை பிரச்சனை, ஆண்குறி மற்றும் டெஸ்டிகுலார் வலி. அதேப் போல் ஹெர்னியா சிகிச்சையை மேற்கொண்ட ஆண்களுக்கும் விந்து வெளியேற்றத்தின் போது வலியை அனுபவிக்கக்கூடும்.

கட்டிகள் அல்லது கற்கள்

கட்டிகள் அல்லது கற்கள்

விந்து வெளியேற்றும் குழாயில் கற்கள் அல்லது கட்டிகள் இருந்தாலும், விந்து வெளியேற்றத்தின் போது வலியை சந்திக்கக்கூடும். சில சமயங்களில் இந்த கட்டிகள் அல்லது கற்கள் விந்து வெளியேற்றத்தை தடுத்து, மலட்டுத்தன்மை மற்றும் கடுமையான வலியுடனான விந்து வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.

மனஇறுக்க நிவாரண மருந்துகள்

மனஇறுக்க நிவாரண மருந்துகள்

மன இறுக்க நிவாரண மருந்துகள் பாலியல் செயலிழப்பு பிரச்சனைகளான வலிமிக்க விந்து வெளியேற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே அளவுக்கு அதிகமான மன இறுக்கத்தைப் போக்கும் மருந்து மாத்திரைகளை எடுக்காதீர்கள். மாறாக இயற்கையாக மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் எதிர்பாராத பல பாலியல் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

புடெண்டல் நரம்பியல் கோளாறு

புடெண்டல் நரம்பியல் கோளாறு

புடெண்டல் நரம்பியல் கோளாறு என்னும் நிலையில் இடுப்பு பகுதியில் உள்ள ஒரு நரம்பிற்கு ஏற்படும் சேதமாகும். இப்பிரச்சனை இருந்தால் அந்தரங்க பகுதி மற்றும் மலக்குடல் பகுதியில் வலியை சந்திக்க நேரிடும். புடெண்டல் நரம்புகளை பாதிக்கக்கூடிய சில விஷயங்களாவன காயங்கள், சர்க்கரை நோய் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ்.

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

பெரும்பாலும் அறிகுறியற்றதாக இருந்தாலும், புரோஸ்டேட் புற்றுநோய் கூட வலிமிகுந்த விந்து வெளியேற்றத்தை உண்டாக்கும். இதர அறிகுறிகளாவன சிறுநீர் கழிப்பதில் பிரச்சனைகள், விறைப்புத்தன்மை பிரச்சனை, சிறுநீர் அல்லது விந்துவில் இரத்தம் கலந்து இருப்பது போன்றவை.

ட்ரைக்கொமோனியாஸிஸ்

ட்ரைக்கொமோனியாஸிஸ்

ட்ரைக்கொமோனியாஸிஸ் என்பது ட்ரைக்கோமோனாட்டுகள் என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்றாகும். இது ஒரு பாலியல் தொற்று நோய். இந்த தொற்று இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலியை சந்திக்க வேண்டியிருக்கும்.

கதிரியக்க சிகிச்சை

கதிரியக்க சிகிச்சை

இடுப்பு பகுதியில் கதிரியக்க சிகிச்சை மேற்கொண்டிருந்தால், அதன் விளைவாக விறைப்புத்தன்மை பிரச்சனை, விந்து வெளியேற்றத்தின் போது வலி போன்றவற்றை அனுபவிக்கக்கூடும். ஆனால் இந்த பக்க விளைவுகள் தற்காலிகமானவையே.

மனோதத்துவ பிரச்சினைகள்

மனோதத்துவ பிரச்சினைகள்

சில சமயங்களில், காரணத்தை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஒருவேளை சுயஇன்பம் காணும் போது வலியை சந்திக்காவிட்டால், அது உணர்ச்சி ரீதியாக இருக்கலாம். இதுக்குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கு, ஒரு சிகிச்சையாளரை சந்திப்பதே சிறந்த வழி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Possible Causes for Painful Ejaculation

Here are some possible causes for painful ejaculation. Read on...
Desktop Bottom Promotion