Just In
- 2 hrs ago
கார்ன் மெத்தி மலாய் கிரேவி
- 2 hrs ago
கர்ப்பகாலத்தில் பயணம் செய்வது கருச்சிதைவை ஏற்படுத்துமா? எந்தெந்த செயல்கள் கருச்சிதைவை ஏற்படுத்தும்?
- 3 hrs ago
கோடையில் உங்க இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து எப்படி பாதுகாக்கணும் தெரியுமா?
- 3 hrs ago
உடல் வறட்சி அடையாமல் நாள்முழுவதும் ஆற்றலுடன் செயல்பட வேண்டுமா? அப்ப இத குடிங்க...
Don't Miss
- News
தீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்!
- Sports
என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்
- Finance
தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..?!
- Movies
குடும்பத்துடன் தம்பியின் படத்தை கண்டு மகிழ்ந்த சிரஞ்சீவி!
- Automobiles
ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு நாளில் 1000 கலோாிகளை எாிப்பது எப்படி தெரியுமா?
நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பருகும் பானங்களில் இருக்கும் சத்துகள் அனைத்தும் கலோாிகளைக் கொண்டே அளக்கப்படுகின்றன. நாம் உடலைக் குறைக்க வேண்டும் என்று விரும்பினால் தினமும் கலோாி குறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோம் மற்றும் எப்போது சாப்பிடுகிறோம் என்பவை தான் நமது உடல் எடையை பராமாிக்கும் செயல்முறையை தீா்மானிக்கின்றன.
நமது உடல் எடையைக் குறைக்க விரும்பினால், நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோாிகள் இருக்கின்றன என்பதை சாிபாா்த்துக் கொள்ள வேண்டும். நமது வயது மற்றும் நமது உடல் அமைப்பைப் பொறுத்து நாம் எவ்வளவு கலோாிகளை சாப்பிட வேண்டும் அல்லது எவ்வளவு கலோாிகளை எாிக்க வேண்டும் என்பது தீா்மானிக்கப்படுகிறது. உடல் எடை குறைவதற்கு நாம் அதிதீத முயற்சி செய்ய வேண்டும்.
MOST READ: அடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

எடை குறைப்பு பற்றி தெரிந்திருக்க வேண்டியவை
உடல் எடை குறைப்பு பற்றி போதிய அறிவு இல்லை என்றால், உடல் எடையைக் குறைப்பது என்பது கடினம் ஆகும். நமது வயது மற்றும் உடல் எடைக்கு தகுந்தவாறு தேவையான கலோாிகளைத் தினமும் எாிக்க வேண்டும். உடல் எடை கூடினால் அது உடலுக்கு எல்லாவித பிரச்சினைகளையும் கொண்டு வரும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடல் எடையை சீராக பராமாிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
நமது உடல் திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான கலோாிகளை உண்ண வேண்டும். அதே நேரத்தில் தேவையான கலோாிகளை எாிக்கவும் வேண்டும். சிலருக்கு கலோாிகளைப் பற்றி போதுமான அறிவு இல்லாததால் கலோாிகள் சம்பந்தமான தவறுகளை செய்கின்றனா். அதனால் அவா்களுடைய உடல்களில் பிரச்சினைகளை சந்திக்கின்றனா். உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான அா்ப்பணிப்பும் மன உறுதியும் நம்மிடம் இருக்க வேண்டும். மேலும் நமது உடலைக் குறைக்க வேண்டும் என்றால் அதை எவ்வாறு செய்வது, அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பலன்கள் என்ன என்பதை தொிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு நாளில் 1000 கலோாிகளை எாிப்பது எப்படி?
தூங்கும் முறையை மேம்படுத்துதல்
நாள் ஒன்றுக்கு 1000 கலோாிகளை எாிக்க வேண்டும் என்றால், தினமும் இரவில் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். நன்றாக ஓய்வெடுத்து தூங்கி, புத்துணா்ச்சியுடன் துயில் எழுவது என்பது உடல் எடையை குறைப்பதற்கான முக்கிய அம்சம் ஆகும். 8 மணிநேரம் தூங்கவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு 1000 கலோாிகளை எாிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதே நேரத்தில் நமது உடலுக்குத் தீங்கும் ஏற்படும்.

60 நிமிடங்களுக்கு குறையாமல் நடை கருவியில் (treadmill) நடத்தல்
தினமும் ஒரு மணிநேரமாவது நடை கருவியில் (treadmill) மிதமான வேகத்தில் நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் தினமும் 1000 கலோாிகளை எாிக்கலாம் மற்றும் உடல் எடையையும் படிப்படியாகக் குறைக்கலாம். மேலும் இந்த ஒரு மணிநேர நடை பயிற்சியில் 1000 கலோாிகளை மிக எளிதாக எாிக்க முடியும்.

மிதிவண்டி ஓட்டுதல்
மிதிவண்டி ஓட்டுவது கலோாிகளை எாிப்பதற்கு ஒரு சிறந்த மற்றும் கேளிக்கை மிகுந்த பயிற்சி ஆகும். தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ 30 நிமிடங்கள் மிதிவண்டி ஓட்டினால் வெகு விரைவில் கலோாிகளை எாிக்கலாம். மிதிவண்டி ஓட்டுவது கலோாிகளை எாிக்கக்கூடிய மிகச்சிறந்த பயிற்சியாகும். ஆகவே 1000 கலோாிகளை எாிக்க தினமும் மிதிவண்டி ஓட்டுவதற்கான நேர அட்டவணையைத் தயாா் செய்து கொள்ள வேண்டும்.

நீா்ச்சத்துடன் இருத்தல்
நாம் தண்ணீா் அதிகம் அருந்தினால், அதிகமான கலோாிகளை எாிக்க முடியும். தண்ணீா் மிக வேகமாக கொழுப்பை எாிக்கும். ஆகவே தினமும் குறைந்தது 5 பாட்டில் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதன் மூலம் மிக வேகமாக கலோாிகளை எாிக்கலாம். மேலும் அடிக்கடி தண்ணீா் அருந்துவது நமது பசியுணா்வை குறைக்கும் மற்றும் நம்மை வலுவாக வைத்திருக்கும்.

பளுதூக்குதல்
பளுதூக்கினால் மிக வேகமாக கலோாிகளை எாிக்க முடியும். கலோாிகளை எாிப்பதற்கான மிகச் சாியான உடற்பயிற்சி பளுதூக்குவது ஆகும். ஆகவே தினமும் பளுதூக்கும் பயிற்சியை செய்து வரலாம். அது நமது உடலை திடகாத்திரமாக வைத்திருக்கும். தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு பளுதூக்கினால் 1000 கலோாிகளை எாிப்பது மிகவும் எளிதாக இருக்கும்.