For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் குளிர்காலத்தில் அவசியம் கமலா ஆரஞ்சு சாப்பிடணும் தெரியுமா?

ஆரஞ்சு பழத்தை குளிர் காலத்தில் சாப்பிடுவதே மிகவும் நல்லது. இது நாவிற்கு சுவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

|

Recommended Video

Kamala Orange And Its Benefits | குளிர்காலங்களில் ஆரஞ்சு சாப்பிடலாமா?

ஆரஞ்சு பழம் என்றதுமே அதன் புளிப்புச் சுவை தான் முதலில் நம் நினைவிற்கு வரும். ஆனால் இந்த ஆரஞ்சு பழம் குளிர்காலங்களில் மிகவும் சுவையுடனும், சற்று இனிப்பாகவும் இருக்கும் என்பது தெரியுமா? மேலும் குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற பழங்களுள் சிறப்பான ஒன்றாகவும் ஆரஞ்சு பழம் கருதப்படுகிறது. அதுவும் கமலா ஆரஞ்சு மிகவும் அற்புதமான சுவையைக் கொண்டது. ஆரஞ்சு பழ வகைகளிலேயே பலரும் விரும்பி சாப்பிடுவது என்றால் அது கமலா ஆரஞ்சு தான்.

Here’s Why You Should Eat Kamala Oranges During Winters

இந்த ஆரஞ்சு பழத்தை குளிர் காலத்தில் சாப்பிடுவதே மிகவும் நல்லது. இது நாவிற்கு சுவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பொதுவாக குளிர் காலத்தில் உடல் வெப்பநிலை குறையும், நமது நோயெதிர்ப்பு சக்தியின் அளவும் குறைவாக இருக்கும், சருமம் வறண்டும், பொலிவிழந்தும் இருக்கும் மற்றும் செரிமான மண்டலம் பலவீனமாக இருக்கும். ஆனால் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, சருமமும் பொலிவாக இருக்கும்.

MOST READ: அளவுக்கு அதிகமாக முந்திரி சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!

டி.கே. பப்ளிஷிங்கின் 'ஹீலிங் ஃபுட்ஸ்' புத்தகத்தின்படி, ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின்சி, இதய நோய், சிறுநீரக கற்கள் மற்றும் அனைத்து வகையான தொற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கும். மேலும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் மற்றும் அதில் உள்ள சுத்தப்படுத்தும் பண்புகள் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். இப்போது ஏன் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தை சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடையைக் குறைக்க உதவும்

எடையைக் குறைக்க உதவும்

ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவி, அடிக்கடி பசி ஏற்படுவதையும், அளவுக்கு அதிகமாக உணவை உண்பதையும் தடுக்கும். இதனால் கலோரிகளை அதிகமாக எடுப்பது குறைந்து, உடல் எடை குறைய உதவி புரியும். மேலும் நார்ச்சத்து மலத்தை மொத்தமாக சேர்க்க முனைந்து, நல்ல செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும். ஆகவே ஆரஞ்சு பழத்தை எக்காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள்.

MOST READ: சர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்!

வைட்டமின் சி

வைட்டமின் சி

குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம், சரும ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டலம் போன்றவை சற்று பலவீனமாக இருக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கும். மேலும் ஆரஞ்சு பழச்சாற்றினை சருமத்தில் தடவினால், சருமம் ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துடனும் இருக்கும்.

சளியைக் குறைக்கும்

சளியைக் குறைக்கும்

குளிர்காலத்தில் சளி பிரச்சனை அதிகமாக இருக்கும். சளியைத் தடுக்கும் சிறப்பான வழி என்றால், அது ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது தான். ஏனெனில், இப்பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்கும். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியால் ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வைட்டமின் சி, சளி பிரச்சனைக்கு தீர்வளிக்கக்கூடியது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இதை குளிர் காலத்தில் உட்கொண்டால், சளி பிரச்சனையைத் தடுக்கலாம்.

MOST READ: ஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

இதய ஆரோக்கியம் மேம்படும்

இதய ஆரோக்கியம் மேம்படும்

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மூலமாக சயின்ஸ் டெய்லியில் வெளியிடப்பட்ட ஆய்வில் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் கிரேப் புரூட்டை உட்கொள்வதால் பக்கவாதத்தின் அபாயம் குறையும். ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள, இதய நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த பழம் இரத்த நாளங்களின் செயல்பாடு மற்றும் உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை மேம்படுத்தும்.

சிறுநீரக கற்கள் அபாயம் குறையும்

சிறுநீரக கற்கள் அபாயம் குறையும்

சிறுநீரில் சிட்ரேட் குறைபாட்டினால் சிறுநீரக கற்கள் ஏற்படுகிறது. சிட்ரேட் என்பது சிட்ரிக் அமிலம். இது சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் காணப்படும். பொதுவாக சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கொண்ட நோயாளிகளுக்கு ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க மருந்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆரஞ்சு ஜூஸ் சிறுநீரில் சிட்ரேட்டின் அளவை அதிகரித்து, மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதன் வாய்ப்புக்களைக் குறைக்கும்.

MOST READ: உங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா?

குறிப்பு

குறிப்பு

பொதுவாக ஆரஞ்சு சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. எனவே பலர் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தை சாப்பிடமாட்டார்கள். ஆனால் இக்கட்டுரையைப் படித்த பின், இனிமேல் அப்பழக்கத்தை மாற்றி, ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, நோய்களின் தாக்குதல்களும் குறையும். இருப்பினும் ஒரு பாதுகாப்பிற்கு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் முன் உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here’s Why You Should Eat Kamala Oranges During Winters

Orange is not only good for your taste buds, but also for your health. Let's look at why kamala oranges should be eaten during winters.
Desktop Bottom Promotion