For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்!

குடல் ஆரோக்கியம் முழுவதும் ஒருவரது கையில் தான் உள்ளது. அதற்கு டயட் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இதனால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும்.

|

பாக்டீரியாக்கள் என்றதும் தீங்கு விளைவிப்பவைகளாகத் தான் மனதில் தோன்றும். ஆனால் நம் உடலில் இயற்கையாகவே சில பாக்டீரியாக்கள் உள்ளது தெரியுமா? அதுவும் நம் குடலில் செரிமானத்தை மேம்படுத்த மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பளிக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. ஒருவரது உடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறைந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Good Bacteria Are Essential For Gut Health, Here Are 5 Ways To Increase Them

குடல் ஆரோக்கியம் முழுவதும் ஒருவரது கையில் தான் உள்ளது. அதற்கு டயட் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இதனால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். இக்கட்டுரையில் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்

புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்

உணவுகளைப் புளிக்க வைக்கும் பாக்டீரியாக்கள், அதாவது புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். யோகர்ட், கிமிச்சி, கொம்புச்சா போன்றவை சிறந்த புளிக்க வைக்கப்பட்ட உணவுகளாகும். இவை உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பல நோய்களைத் தடுக்கும்.

புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் லாக்டோபேசில்லி பாக்டீரியா அதிகம் உள்ளது. அது வயிற்றில் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அதே சமயம் யோகர்ட்டை ஒருவர் சாப்பிட்டால், அது லாக்டோஸ் சகிப்புத்தன்மைக்கு சிகிச்சை அளிப்பதோடு, குடலில் உள்ள பாக்டீரியாக்களை மாற்றும்.

MOST READ: உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி!

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள், பீன்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல பாக்டீரியாக்களை உடலில் அதிகரிக்கும். இவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது மற்றும் இவை குறிப்பிட்ட பாக்டீரியாக்களால் எளிதில் ஜீரணிக்கப்படலாம். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டால், உடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவும் அதிகரிக்கும். பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸை தவிர, பச்சை பட்டாணி, ப்ராக்கோலி, முழு தானியங்கள், ராஸ்ப்பெர்ரி, கொண்டைக்கடலை போன்றவற்றையும் அதிகம் உட்கொள்வது நல்லது.

MOST READ: உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா?

ப்ரீபயாடிக் உணவுகள்

ப்ரீபயாடிக் உணவுகள்

ப்ரீயாடிக் உணவுகள் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த பாக்டீரியாக்கள், உடல் பருமனுடன் இருப்பவர்கள் சந்திக்கும் வளர்சிதை மாற்ற கோளாறுகளை சரிசெய்ய உதவும். ப்ரீபயாடிக் உணவுகளில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து உள்ளதால், இவை எளிதில் செரிமானமாகாது. எனவே நமது உடல் இந்த உணவுகளை செரிமானம் செய்வதற்கு சில அத்தியாவசிய பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து, உடலுக்கு ஆற்றலை வழங்கும். இந்த ப்ரீபயாடிக் உணவுகளாவன முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை.

MOST READ: முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

தாவர வகை டயட்

தாவர வகை டயட்

சில ஆய்வுகளில் வெஜிடேரியன் மற்றும் தாவர வகை டயட்டை மேற்கொள்பவர்களின் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளமான அளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. நமது உடலில் பல்வேறு டயட்டுகளால் பல வகையான பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் வெஜிடேரியன் டயட் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தாவர வகை உணவுப் பொருட்களில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து கூட இருக்கலாம். மேலும் வெஜிடேரியன் டயட்டை மேற்கொள்பவர்களுக்கு கொலஸ்ட்ரால், உட்காயங்கள் மற்றும் உடல் எடை பிரச்சனை சற்று குறைந்திருப்பதாக முன்னணி சுகாதார வலைத்தளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MOST READ: நீங்கள் சர்க்கரை நோயாளியா? அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...

பாலிஃபீனால் உணவுகள்

பாலிஃபீனால் உணவுகள்

குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளமாக இல்லாவிட்டால், பாலிஃபீனால்களை ஜீரணிப்பது சற்று கடினம். எனவே தான் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் இம்மாதிரியான உணவுகளை அடிக்கடி தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உட்காயங்கள் குறையும். பாலிஃபீனால்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எனவே பாலிஃபீனால்கள் நிறைந்த உணவுப் பொருட்களான ப்ராக்கோலி, வெங்காயம், ப்ளூபெர்ரி, க்ரீன் டீ, பாதாம், ரெட் ஒயின், டார்க் சாக்லேட் மற்றும் கொக்கோ போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் ஊக்குவிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Good Bacteria Are Essential For Gut Health, Here Are 5 Ways To Increase Them

Not all bacteria are harmful, some are beneficial as well. Here’s how you can increase good bacteria in your gut. Read on...
Desktop Bottom Promotion