For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...

ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழ் ஒன்றில் வெளிவந்த புதிய ஆய்வில், தக்காளியில் உள்ள லைகோபைன், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

|

ஆண்கள் தங்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மருத்துவர்களிடம் கூட தங்களுக்கு இருக்கும் பிரச்சனையைக் கூற தயங்குவார்கள். இப்படி தயக்கம் கொள்ளும் ஆண்கள் எப்படியாவது தங்களுக்கு உள்ள பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள் கிடைக்காதா என பல இணையதளங்களில், அதற்கான வைத்தியங்களைத் தேடுவதுண்டு.

Eating Tomatoes Daily Can Boost Male Fertility By Increasing Sperm Count: Study

அப்படி வீரிய பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்களுக்கு ஓர் நற்செய்தி. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஓர் பாதுகாப்பான தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தினமும் ஒன்று அல்லது இரண்டு தக்காளியை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, வீரியத்தை ஊக்குவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழ் ஒன்றில் வெளிவந்த புதிய ஆய்வில், தக்காளியில் உள்ள லைகோபைன், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. தக்காளியை தவறாமல் தினமும் சாப்பிடும் 40 சதவீத ஆண்களிடம் நேர்மறையான முடிவுகள் தெரிய வந்தது. அதுவும் அந்த ஆண்களின் ஸ்டாமினா மட்டுமின்றி, விந்தணுக்களின் தரமும் ஓரிரு மாதங்களுக்குள் சிறப்பாக மாறி இருப்பது தெரிய வந்தது.

MOST READ: ஆண்களே ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப மறக்காம இத படிங்க...

லைகோபைன்

லைகோபைன்

தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் நிறமிப் பொருள், தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த உட்பொருள் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் உள்ளது. ஆனால் தக்காளியில் தான் இந்த நிறமிப் பொருள் அதிகமாக உள்ளது. ஆகவே, ஆராய்சியாளர்கள் தங்களின் ஆய்வில் லைகோபைனிற்கு பதிலாக வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய லாக்டோலைகோபைனைப் பயன்படுத்தினர். ஏனெனில் நமது உடல் லைகோபைனை எளிதில் உறிஞ்சாது. மேலும் தக்காளி சாப்பிட்டால், புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம் என பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம்

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம்

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து நிபுணர் லிஸ் வில்லியம்ஸ் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சி 19-30 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான 60 ஆண்களைக் கொண்டு 12 வாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதி ஆண்களுக்கு லாக்டோலைகோபைன் சப்ளிமெண்ட்டுகளும், மீதி பாதியினருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மாத்திரைகளையும் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு முன்னும், பின்னும் அவர்களது இரத்தம் மற்றும் விந்தணுக்களின் மாதிரி எடுக்கப்பட்டன.

MOST READ: முன்கூட்டியே விந்து வெளியேறுகிறதா? அப்படின்னா தினமும் இதுல ஒன்ன செய்யுங்க...

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

இந்த ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட மாதிரியைப் பரிசோதித்ததில், தினமும் லைகோபைன் சப்ளிமெண்ட்டுகளை உட்கொண்ட 40 சதவீத ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி, விந்தணுக்களின் தரமும் மேம்பட்டு இருந்தது ஆச்சரியத்தை அளித்தது என வில்லியம்ஸ் கூறினார்.

பேசி கூற்று...

பேசி கூற்று...

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் புற்றுநோயியல் மற்றும் வளர்சிதை மாற்றத் துறைத் தலைவர் ஆலன் பேசி, இந்த ஆய்வு குறித்து கூறியதாவது: விந்தணு உருவத்தின் முன்னேற்றம், விந்தணுவின் அளவு மற்றும் வடிவம் போன்றவை வியத்தகு முறையில் இருந்தது. விந்தணுவின் தரத்தில் லாக்டோலைகோபைனின் தாக்கம் குறித்து முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு இதுவாகும். மேலும் இந்த ஆய்வு மிகவும் ஆர்வமிக்கதாக, அதிக வேலை செய்ய விரும்புவதைத் தூண்டியுள்ளதாகவும் கூறினார்.

இப்போது தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கும் இதர நன்மைகளைக் காண்போம்.

MOST READ: ஆண்களே! விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா? இந்த ஜூஸ் குடிங்க...

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் படி, தக்காளியில் உள்ள லைகோபைன், புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளுக்கு காரணமாக இருக்கலாம். லைகேபைன் என்பது கரோட்டினாய்டு குடும்பத்திதைச் சேர்ந்த ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட். இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், ப்ரீ ராடிக்கல்களால் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்ளைத் தடுத்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், தினமும் ஒரு தக்காளி சாப்பிடுங்கள்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள லைகோபைன் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், தக்காளியை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

MOST READ: இந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா?

எடை இழப்பு

எடை இழப்பு

சீன ஆய்வின் படி, தக்காளி ஜூஸ் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, எடையைக் குறைக்க உதவுமாம். மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்து, மற்றும் குறைவான கலோரிகள், பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

கொலஸ்ட்ரால் குறையும், இதயம் ஆரோக்கியமாகும்

கொலஸ்ட்ரால் குறையும், இதயம் ஆரோக்கியமாகும்

நற்பதமான தக்காளியை அல்லது தக்காளி ஜூஸைக் குடித்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மெக்ஸிகன் ஆய்வு ஒன்றில், ஒரு மாதம் தொடர்ந்து தக்காளியை சாப்பிட்டு வந்தவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்தது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதயம் தானாக ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பிக்கும்.

MOST READ: ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில எச்சரிக்கை அறிகுறிகள்!

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

தக்காளியில் உள்ள குளோரைடு, செரிமான அமிலங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். மேலும் தக்காளியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை இரண்டுமே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவற்றில் உள்ள லைகோபைன், இரைப்பை புற்றுநோயைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating Tomatoes Daily Can Boost Male Fertility By Increasing Sperm Count: Study

Men who eat tomatoes daily have better sperm count and quantity. This is backed by research done by the team of the University of Sheffield. Read on...
Desktop Bottom Promotion