For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கொரோனா அறிகுறிகளை சந்திப்பவர்களுக்கு முழு நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம்: ஜாக்கிரதை!

|

கொரோனா வைரஸ் என்னும் கோவிட்-19 வைரஸ் நீங்கள் நினைப்பதை விட மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த வைரஸ் மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தசை உள்ளிட்ட முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும் மற்றும் நரம்பியல் செயலிழப்பை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

SARS-COV-2 தொற்றானது காய்ச்சல், இருமல் அல்லது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு முன்பு தலைவலி, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நரம்பியல் அறிகுறிகளை காட்டக்கூடும் என்று அன்னல்ஸ் ஆஃப் நியூரோலாஜி என்னும் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

MOST READ: ஒருவருக்கு கொரோனா வந்துட்டா, இந்த பிரச்சனையை வாழ்நாள் முழுக்க சந்திக்க வாய்ப்பிருக்காம்...

பல ஆய்வுகளை ஆய்வு செய்த பின்பு, ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவை கோளாறுகள், வலிப்புத்தாக்கங்கள், பக்கவாதம், பலவீனம் மற்றும் தசை வலி போன்ற நரம்பியல் அறிகுறிகளை அனுபவிப்பதாக கண்டறிந்தனர்.

MOST READ: எப்படியோ கொரோனாவால் ஏற்படும் இறப்பைத் தடுக்க மருந்து கண்டுபிடிச்சாச்சு... இனி பயப்பட தேவையில்ல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நரம்பியல் செயலிழப்பு

நரம்பியல் செயலிழப்பு

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கோவிட்-19 பல்வேறு வழிகளில் நரம்பியல் செயலிழப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, மூளை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய உறைவு கோளாறுகளால் பாதிக்கப்படலாம். கூடுதலாக, நோய்த்தொற்றுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் போது மூளை மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் அழற்சியை ஏற்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இத்தகைய நரம்பியல் பிரச்சனைகள் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெளிவாக தெரியவில்லை.

அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முதன்மை எழுத்தாளர் அகோர் கோரால்னிக்கின் கண்டுபிடிப்பு, மருத்துவர்களுக்கு நோயின் நரம்பியல் அறிகுறிகளை நன்கு கண்டறியவும், நிர்வகிக்கவும் மற்றும் சிகிச்சை அளிக்கவும் உதவும் என்று நம்புகிறார்.

கொரோனா தொற்று வேறு எந்த சிக்கல்களைக் கொண்டு வரக்கூடும்?

கொரோனா தொற்று வேறு எந்த சிக்கல்களைக் கொண்டு வரக்கூடும்?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு, வீட்டில் இருந்தே சரிசெய்யக்கூடியவாறு லேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோய் அல்லது இதய நோய் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளனர்.

சைட்டோகைன் புயல்

சைட்டோகைன் புயல்

தற்போதைய சான்றுகளின் படி, 6 இல் 1 கொரோனா நோயாளிக்கு கடுமையான ஆரோக்கிய சிக்கல்கள் உள்ளன. அவற்றில் சில உயிருக்கே ஆபத்தானவையாக உள்ளன. கொரோனா தொற்று சைட்டோகைன் புயல் (cytokine storm) என்னும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும். இதுவே கொரோனாவால் நிலைமை மோசமாவதற்கு முக்கிய காரணமாகும்.

இந்நிகழ்வானது தொற்றை எதிர்த்து நோயெதிர்ப்பு மண்டலம் இரத்த ஓட்டத்தை தூண்டும் போது, அந்த இரத்த ஓட்டத்தில் சைட்டோகைன்கள் என்னும் அழற்சி புரதங்கள் சேர்ந்து திசுக்களை அழித்து, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புக்களை சேதப்படுத்தும். இப்போது கொரோனா தொற்றால் சந்திக்கவிருக்கும் சில சிக்களைக் காண்போம்.

கடுமையான சுவாச செயலிழப்பு (Acute Respiratory Failure)

கடுமையான சுவாச செயலிழப்பு (Acute Respiratory Failure)

உங்கள் நுரையீரலால் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜனை செலுத்த முடியாவிட்டால் அல்லது போதுமான கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியே எடுக்க முடியாவிட்டால் இந்த அறிகுறியை சந்திக்கலாம். கோவிட்-19 காரணமாக இறந்த பலருக்கு கடுமையாக சுவாச செயலிழப்பு தான் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது.

நிமோனியா

நிமோனியா

நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் வீக்கமடைந்து, சுவாசிக்க கடினமாக இருக்கும் போது நிமோனியா ஏற்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு நிலைமை மோசமான சில நோயாளிகளின் நுரையீரலை சோதித்ததில், அவர்களின் நுரையீரல் திரவம் மற்றும் சீழ் நிரப்பப்பட்டு, உடல் செயல்பாடுகளுக்கு தேவையான போதுமான ஆக்ஸிஜனை பரிமாற்றம் செய்ய முடியாமல் போனது கண்டறியப்பட்டது. மேலும் சீனாவில் தான் இம்மாதிரியான பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (Acute Respiratory Distress Syndrome)

கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (Acute Respiratory Distress Syndrome)

கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (ARDS) என்பது கடுமையான COVID-19 வழக்குகளில் மிகவும் பொதுவான சிக்கல்களுள் ஒன்றாகும். இதில் நோயாளிகளின் நுரையீரல் மோசமாக சேதமடைந்து, நுரையீரலில் இருந்து திரவம் கசியத் தொடங்கி, அதன் விளைவாக உடலின் இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாமல் போகிறது. இந்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் போன்ற சுவாசிப்பதற்கு தேவையான இயந்திரங்களின் உதவி தேவைப்படலாம்.

கடுமையான கல்லீரல் காயம் (Acute Liver Injury)

கடுமையான கல்லீரல் காயம் (Acute Liver Injury)

மிகவும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளும் கல்லீரல் பாதிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக உயிருக்கே உலை வைக்கும் சிக்கல்களான கடுமையான கல்லீரல் காயம் மற்றும் சில சமயங்களில் கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. இருப்பினும், இப்படி கல்லீரல் பாதிப்படைய கொரோனா வைரஸ் தான் காரணமா அல்லது வேறு காரணத்திற்காக இது ஏற்பட்டதா என்பது குறித்து விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பிற சிக்கல்கள்

பிற சிக்கல்கள்

கடுமையான இதய காயம், கடுமையான சிறுநீரக காயம், இரத்த உறைவு, செப்டிக் அதிர்ச்சி மற்றும் குழந்தைகளில் மல்டிசிஸ்டம் அழற்சி நோய்க்குறி போன்றவையும் கோவிட்-19 வைரஸால் ஏற்படும் சிக்கல்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

COVID-19 May Affect The Entire Nervous System Of Patients: Beware Of These Symptoms

Neurologic symptoms, like headaches, seizures, and strokes may precede fever, cough or respiratory problems in COVID-19 infection, say researchers.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more