For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா?

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் இது குறித்த பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் ஒரு மேற்பரப்பில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

|

இன்றைய நாட்களில் உலகையே அச்சுறுத்தும் ஒரு பெயர் என்றால் அது கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக உலகம் முழுவதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். பல நாடுகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் அயல் நாட்டவர்களை அனுமதிப்பதில்லை. இதுவரை 79, 636 பேர் கொரோனாவால் தாக்கப்பட்ட நோயாளிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11,568 பேரின் நிலை மிகவும் தீவிரமாக உள்ளது.

MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இந்த கடும் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் இது குறித்த பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் ஒரு மேற்பரப்பில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனாவின் ரூபாய் நோட்டுகள் திருப்பி வாங்கப்படுகின்றன

சீனாவின் ரூபாய் நோட்டுகள் திருப்பி வாங்கப்படுகின்றன

சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், சீனாவின் மத்திய வங்கி அவர்களின் நாட்டு ரூபாய் நோட்டுகளை வாங்கி சுத்தம் செய்யவும் அழிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது. பலபேர் கைகளில் இந்த நோட்டுகள் புழங்கி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று செய்தி வலைத்தளங்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய்

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய்

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறுவது, கொரோனா வைரஸ் என்பது ஒரு பல விலங்குகளில் காணப்படும் கிருமிகளின் குழு. முக்கியமாக வவ்வால் போன்ற விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

தும்மல் மற்றும் இருமல் வழியாக கொரோனா பரவுகிறது

தும்மல் மற்றும் இருமல் வழியாக கொரோனா பரவுகிறது

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறுவது, தும்மல், இருமல் போன்ற சுவாச கோளாறுகள் வழியாக மற்றும் மோசமான மேற்பரப்புகள் வழியாக கொரோனா வைரஸ் பரவுகிறது. மேலும் ஒரு நபர் இந்த நோய் தொற்று பாதித்த மேற்பரப்பை தொடுவதால் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குகிறது. தொற்று பாதித்த இடங்களைத் தொட்டு, உங்கள் வாய், கண் போன்ற இடங்களை நீங்கள் தொடுவதால் உங்களுக்கும் இந்த கிருமி பரவக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த வைரஸ் யாரையும் தாக்கலாம்

இந்த வைரஸ் யாரையும் தாக்கலாம்

ஒரு குறிப்பிட்ட மேற்பரப்பில் ஃப்ளு வைரஸ் தாக்குவதால் அந்த இடத்தில் 48 மணிநேரம் இந்த கிருமிகள் வாழ்கிறது. இந்த மேற்பரப்பை ஒரு நபர் தொடுவதால் அவருக்கும் இந்த பாதிப்பு பரவுகிறது என்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

கொரோனா கிருமிகள் 9 நாட்கள் உயிர் வாழும்

கொரோனா கிருமிகள் 9 நாட்கள் உயிர் வாழும்

மனித கொரோனா வைரஸ்களான SARC மற்றும் MERC ஆகியவை உயிரற்ற மேற்பரப்பில் ஒன்பது நாட்கள் வரை தொடர்ந்து வாழ முடியும் என்று ஜர்னல் ஆஃப் ஹாஸ்பிடல் இன்ஃபெக்ஷனில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் அறிக்கை குறிப்பிடுகிறது. பொதுவான கிருமிநாசினி தயாரிப்புகளுடன் சுத்தம் செய்வது மேற்பரப்பில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. 62-71 சதவிகிதம் எத்தனால், 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு அல்லது 0.1% சோடியம் ஹைப்போகுளோரைடு அல்லது ப்ளீச் போன்றவற்றைக் கொண்டு மேற்பரப்பை சுத்தம் செய்வதால் ஒரு நிமிடத்தில் கொரோனா கிருமிகள் அழிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பாக இதற்கு முன்னர் நடத்தப்பட்ட 22 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

5 நிமிடங்கள்

5 நிமிடங்கள்

கலிஃபோர்னியா பல்கலைக்கழக தொற்று நோய் பேராசிரியர் டாக்டர் சார்லஸ் சியு கூறுவது, தற்போது கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், நாங்கள் ஆரம்பத்தில் SARS கொரோனா வைரஸ் தரவை நம்பியிருக்கிறோம் என்று கூற விரும்புகிறேன். SARS கொரோனா வைரஸ் நாவல் கொரோனா வைரஸுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் இதுவரை நடத்திய விசாரணையில் இரண்டுக்கும் 80% வரை ஒற்றுமைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. SARS கொரோனா வைரஸ்களுக்கான மேற்பரப்பு உயிர்வாழ்வு 5 நிமிடங்கள் முதல் ஒன்பது நாட்கள் வரை இருக்கும்.

இது பற்றி இன்னும் ஆராய்ச்சிகள் தேவை...

இது பற்றி இன்னும் ஆராய்ச்சிகள் தேவை...

கொரோனா வைரஸ் பற்றிய தரவுகள் குறைவாக இருப்பதால் இதுபற்றி ஒரு முடிவிற்கு வருவது இயலாமல் போகிறது. மேற்பரப்பில் கொரோனா வைரஸ் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதை இன்னும் தெளிவாக அறிவதற்கு இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தேவை என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழக தொற்று நோய் பேராசிரியர் டாக்டர் சார்லஸ் சியு கூறுகிறார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Coronavirus Survive On Surfaces And Outside The Body?

Can coronavirus survive on surfaces and outside the body? How long can the new coronavirus last on surfaces? Read on to know more...
Desktop Bottom Promotion