For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா? அப்போ இத பண்ணுங்க...

என்ன தான் ஓடியாடி வேலை செய்ஞ்சாலும் கொஞ்ச நேரத்தில சோர்வாகி விடுவோம். நிறைய பேர் மேஜைலயே படுத்து தூங்க கூட செஞ்சு பாஸ் கிட்ட வாங்கி கட்டிப்பாங்க.

|

நாம் பெரும்பாலும் நேரத்தை செலவழிக்கும் இடம் ஆபிஸ் தான். ஆமாங்க நம்ம கமல்ஹாசன் சொன்ன மாதிரி" வேல வேல வேல ஆம்பளைக்கும் வேல பொம்பளைக்கும் வேல இங்கே". என்ன தான் ஓடியாடி வேலை செய்ஞ்சாலும் கொஞ்ச நேரத்தில சோர்வாகி விடுவோம். நிறைய பேர் மேஜைலயே படுத்து தூங்க கூட செஞ்சு பாஸ் கிட்ட வாங்கி கட்டிப்பாங்க. இப்படி சோர்வா இருந்தா எப்படி? உங்களால வேலையிலும் நல்ல பேரு வாங்க முடியாது, உங்கள் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்காது.

5 Ways To Stay Energetic At Work

இப்படி நீங்கள் உடனே சோர்வாக இருப்பதற்கு காரணம் வேலையில ஏற்படுற மன அழுத்தம், முதுகுவலி, ஆரோக்கியம் குறித்த அலட்சியம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, இருக்கை வசதிகள், தவறான உணவுப் பழக்கம் இவைகள் உங்களை சரியாக வேலையே செய்ய விடாமல் ஆக்கிவிடும். எனவே உங்கள் பழக்கவழக்கங்களில் சின்ன மாற்றங்களை நீங்கள் செய்தாலே போதும் வேலையில் இனி நீங்கள் புலியாக ஈடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியாக உட்கார்ந்து பழகுங்கள்

சரியாக உட்கார்ந்து பழகுங்கள்

வேலை செய்யும் இடங்களில் நீங்கள் உட்கார்ந்து இருக்கும் தோரணை கூட உங்களை சுறுசுறுப்பாக வைத்து இருக்குமாம். எனவே இனி நாற்காலியில் அமரும் போது நேராக நிமிர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து பழகுங்கள். உங்களது இடுப்பு எலும்பு மற்றும் முதுகுப்பகுதி சீட்டில் அமரும் விதத்தில் உட்காருங்கள். உங்கள் தோள்பட்டையை பின்னுக்கு வைத்து அடிவயிற்று தசை உள்நோக்கி இருக்குமாறு வயிற்றை நேராக வைத்து அமருங்கள். இதற்காக நீங்கள் ரொம்ப மூச்சுப் பிடிச்சு உட்கார வேண்டிய அவசியம் இல்லை. நீண்ட நேரம் அமரும் விதத்தில் உங்களுக்கு ஏதுவாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

சோம்பல் முறிந்து விடுங்கள்

சோம்பல் முறிந்து விடுங்கள்

ஒவ்வொரு மணி நேர வேலை இடைவெளியில் இருக்கையில் இருந்து எழுந்து கொஞ்சம் காலார நடங்கள். 11/2 மணிநேரத்துக்கு ஒரு முறை இப்படி நடங்கள். வேண்டுமென்றால் இருக்கையில் இருந்த படியே சில உடற்பயிற்சிகளை செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.

சின்னதா உடற்பயிற்சி

சின்னதா உடற்பயிற்சி

கைகளை பின்னால் கட்டிக் கொண்டு தோள்பட்டையை இழுத்து கழுத்தை கடிகார திசையில், அதற்கு எதிர்த் திசையில் சுழற்றுங்கள். தலையைக் குனிந்து கழுத்தின் அடிப்பகுதியை தொடுங்கள். இப்பொழுது கழுத்தை வலது தோள்பட்டை நோக்கியும் பின்னர் இடது தோள்பட்டையை நோக்கியும் நகற்றுங்கள். பிறகு கழுத்தை மேலும் கீழும் நகற்றுங்கள். இந்த உடற்பயிற்சி உங்கள் இடுப்பு, கழுத்து மற்றும் கைகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

உடம்புக்கு உடற்பயிற்சி

உடம்புக்கு உடற்பயிற்சி

பேனாவை கீழே போட்டு அதை குனிந்து எடுக்குமாறு உடற்பயிற்சி செய்யலாம். அல்லது நாற்காலியில் இருந்து எழுந்திருந்தவாறு எடுங்கள். இது உங்கள் கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை வழங்கி வேலை டென்ஷனை விரட்டி விடும்.

கொஞ்சம் நடங்கள்

கொஞ்சம் நடங்கள்

ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல் கொஞ்சம் எழுந்திருச்சு காலார நடந்து வாருங்கள். உங்கள் கைகளை இடுப்பின் பின்னால் கட்டிக் கொண்டு தோள்பட்டையை பின்னோக்கி இழுத்து கால்களை உயர்த்தி வைத்து நடங்கள். இது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, கால்களில் ஏற்படும் வீக்கத்தையும் தடுக்கிறது.

இந்த டிப்ஸ்கள் நீங்கள் ஆபிஸ் நேரத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Ways To Stay Energetic At Work

Here are some natural ways to stay energetic at work. Read on...
Desktop Bottom Promotion