எப்பவும் குளிர்ற மாதிரியே இருக்கா?... அதுக்கு இதெல்லாம் மாத்தினாதான் சரியாகும்...

Posted By: Kripa Saravanan
Subscribe to Boldsky

எப்போதுமே ஏசியில் இருப்பது போல் சில்லென உணர்கிறீர்களா?... அப்படியென்றால் அதற்கு உடல் வெப்பநிலையை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. வேறு சில பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம். குறிப்பாக, தைராய்டு பிரச்னை, நரம்பியல் கோளாறுகள், அதிகமாக மருநு்துகள் எடுத்துக் கொள்ளுதல், ஆல்கஹால் ஆகியவை கூட இவற்றிற்கு காரணமாக இருக்கலாம். இன்னும் பல காரணங்களும் சிறுசிறு தவறுகளும் அவற்றுள் அடங்கியிருக்கின்றன. அவற்றை சரிசெய்தாலே போதும். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சோகை

இரத்த சோகை

எப்போதும் குளிர்ச்சியாக உணர்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். உடலுக்கு தேவையான பிராணவாயுவை எடுத்து வரும் ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் போதுமான அளவு இல்லாதபோது இரத்த சோகை உண்டாகிறது. இரத்த சோகை பாதிப்பால், உடல் சோர்வு, உடல் மெலிவு, மயக்கம், மூச்சு திணறல் போன்றவை உண்டாகிறது. இந்த பாதிப்புகளால் உங்கள் உடல் குளிர்ச்சியடைகிறது , குறிப்பாக கை மற்றும் கால் பாதங்கள் குளிர்ச்சியடைகிறது. மருத்துவ ஆலோசனை பெறுவதால் உணவில் மாற்றங்கள், மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல், அல்லது மற்ற சிகிச்சைகள் போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

தைராய்டு

தைராய்டு

உங்கள் கழுத்து பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை சுரக்காமல் இருப்பதால் தைராய்டு பிரச்சனை உருவாகிறது. இதனால் உங்கள் உடல் அதிகப்படியான குளிர்ச்சியை உணர்கிறது. மூட்டு வலி, மலச்சிக்கல், வறண்ட சருமம், எடை அதிகரிப்பு போன்றவை உங்களுக்கு உண்டாகலாம். இதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள சில வருடங்கள் ஆகலாம். உடலில் மற்ற நோய்கள் உண்டாவதால் அல்லது அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதால், மற்றும் வேறு சில காரணங்களால் தைராய்டு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் உடலால் உற்பத்தி செய்யமுடியாத சில ஹார்மோன்களுக்கு மாற்றாக வேறு சில மனிதனால் உருவாக்கப்பட்ட ஹார்மோன்களை உடலுக்கு செலுத்த மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

ரேனாய்டு இயல்

ரேனாய்டு இயல்

இந்த நோய் உங்களுக்கு இருக்கும்போது, மன அழுத்தம் அல்லது குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையில் உங்கள் கைகளில் உள்ள இரத்த நாளங்கள் அதிக குளிர்ச்சியடைகிறது. சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடித்திருக்கும் மாரடைப்பின்போது இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. இதனால் உங்கள் கை விரல்கள் மற்றும் கால் விரல்கள் சில்லிட்டு நீல நிறமாக மாறுகிறது. மீண்டும் உடலில் இரத்தம் பாயத் தொடங்கும்போது, உடலில் ஒரு வித கூச்ச உணர்வு தோன்றி அதன் வேகத்தின் காரணமாக காயம் ஏற்படலாம். சரியான நேரத்தில் மருத்துவ உதவியை மேற்கொண்டால், தசை நார்கள் சேதத்தை தடுக்கலாம். சில மோசமான தருணங்களில் அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.

சிறுநீரக நோய்

சிறுநீரக நோய்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் , சிறுநீரக நோயை ஏற்படுத்தும். சிறுநீரகம் சரியாக இயங்க முடியாத காரணத்தால் உடலில் அபாயகரமான அளவிற்கு கழிவுகள் சேரத் தொடங்கும். இதனால் உடலின் வெப்ப நிலை குறையத் தொடங்கும். இந்த நிலை ஏற்படுவதால் உடலில் வேறு சில உபாதைகளும் தோன்றும். சிறுநீரக நோய்க்கு இரத்த சோகையுடன் தொடர்பு உண்டு, ஆகவே வெயில் காலத்திலும், குளிர்ச்சியான நிலையை உங்கள் உடல் அனுபவிக்கும். மருத்துவரிடம் சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெறுவதால் இந்த நிலையில் இருந்து மீண்டு வரலாம்.

டைப் 2 நீரிழிவு :

டைப் 2 நீரிழிவு :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்த சோகை , சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் போன்றவை இருக்கலாம். இதனால் உடலின் குளிர்ச்சி அதிகரிக்கலாம். நீரிழிவால் உண்டாகும் நரம்பு சேதம் காரணமாகவும் உடலில் குளிர்ச்சி நிலவலாம். இரத்த சர்க்கரை அளவில் கட்டுப்பாடும், வாழ்வியல் முறையில் மாற்றங்களும், சரியான மருத்துவ உதவியும் இந்த நிலையை மாற்றலாம்.

இரத்த நாளங்கள் சுருங்குதல்

இரத்த நாளங்கள் சுருங்குதல்

உடலில் இரத்த நாளங்கள் சுருங்குவதால், உங்கள் கால்கள் மற்றும் சில நேரங்கள் கைகளுக்கு இரத்தம் சரியான அளவு கிடைப்பதில்லை. ஒரு கால் மட்டும் மற்ற காலை விட அதிக குளிர்ச்சியாக இருப்பது, அதே காலில் வலி, மெலிந்து காணப்படுவது போன்றவை இந்த நோயின் அறிகுறியாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை தொடர வேண்டும். உணவில் மாற்றம் அல்லது உடற்பயிற்சி, சில நேரம் நல்ல விளைவைத் தரும், ஆனால் மருத்துவ ஆலோசனை பெறுவதால் மட்டுமே சரியான மருந்துகள் மூலம் இந்த நோயை குணப்படுத்த இயலும், சில நேரங்களில் அறுவை சிகிச்சையையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

பசியிழப்புநோய்

பசியிழப்புநோய்

இது ஒரு உணவு சீர்கேடு நோயாகும். இதனால், திடீரென்று நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவு குறைந்து , மிகவும் மெலிதாக காணப்படுவீர்கள். உடலில் கொழுப்பு குறைபாட்டால் எப்போதும் குளிர்ச்சியாக உணர்வீர்கள், குறிப்பாக கைகள் மற்றும் பாதங்கள் மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். இது உடலுக்கு மிகப்பெரிய அபாயத்தை விளைவிக்கும். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு இந்த உணவு சீர்கேடு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையை மேற்கொள்ளவும்.

ஃப்ளு

ஃப்ளு

உங்கள் மூக்கு, தொண்டை, நுரையீரல் என்று மொத்த உடலையும் பாதிக்கும் ஒரு கிருமியால் இந்த நோய் உண்டாகிறது. உடல் சோர்வு, தலைவலி, தசை வலி, இருமல் போன்ற உபாதைகளுடன், குளிர் மற்றும் உடல் வெப்பம் போன்றவை அதிக அளவில் இருக்கும். குழந்தைகளுக்கும் வயதான பெரியவர்களுக்கும் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வருடந்தோறும் ஃப்ளு ஊசி போட்டுக் கொள்ளலாம்.

பரிபூரண நரம்பியல்

பரிபூரண நரம்பியல்

உங்கள் பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பது போல் உணர்ந்து தொட்டு பார்த்தால் சில்லென்று இலலமல் இருப்பது இந்த நோயின் பாதிப்பின் அறிகுறியாகும். முதலில் கால் விரலில் தொடங்கி, இந்த உணர்வு மேல் நோக்கி நகரும். காயம் அல்லது வேறு மருத்துவ நிலையால் உங்கள் நரம்புகள் பாதிக்கப்படும் போது இந்த நிலை ஏற்படும். நீரிழிவு இதன் பொதுவான காரணமாகும். தொற்று, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய், வைட்டமின் குறைபாடு, அல்லது நச்சு பொருந்திய ரசாயனம் போன்றவற்றுடன் தொடர்பு ஆகியவை இதன் காரணிகளாகும். இதற்கான சிகிச்சையை உங்கள் மருத்துவர் வழங்குவார்.

வைட்டமின் பி 12 குறைபாடு

வைட்டமின் பி 12 குறைபாடு

வைட்டமின் பி 12 குறைபாடால் இரத்த சோகை உண்டாகலாம். சிக்கன் , முட்டை மற்றும் மீனில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் மூலம் செறிவூட்டக் கூடிய தானியங்களும் மற்ற உணவுகளும் கூட உண்டு. வைட்டமின் பி 12 அதிகம் உள்ள உணவுடன் மற்ற உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இதன் சத்து போதிய அளவு கிடைக்காது. நோயின் தாக்கம் மற்றும் மருந்துகளின் பயன்பாடு போன்ற காரணத்தால் போதிய வைட்டமின்களை உறிஞ்ச உடலுக்கு இயலாமல் போகும் வாய்ப்புகள் உண்டாகும்.

போதிய அளவு இரும்புச்சத்து கிடைக்காதது

போதிய அளவு இரும்புச்சத்து கிடைக்காதது

இரும்பு சத்து குறைபாடால், இரத்த சோகை உண்டாகலாம். இதனால் உங்கள் உடல் குளிர்ச்சி அடையும். இரத்த போக்கு, உணவு பற்றாக்குறை, சத்துகளை உடல் உறிஞ்ச முடியாத நிலை போன்றவை உண்டாகும். இரும்பு சத்துக்கு மிக பெரிய ஆதாரம் சிவப்பு இறைச்சி, ஆனால், கோழி இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மீனிலும் இந்த சத்து அதிகம் உள்ளது. இரும்பு செறிவூட்டப்பட்ட பிரட் மற்றும் தானியங்கள், பட்டாணி, சோயாபீன்ஸ் , கொண்டைகடலை, இலை உடைய பச்சை காய்கறிகள் போன்றவற்றிலும் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

ஹைப்போ பிட்யூட்டரிசம்

ஹைப்போ பிட்யூட்டரிசம்

பிட்யூட்டரி சுரப்பி குறிப்பிட்ட அளவு ஹார்மோன்களை சுரக்காதபோது ஹைப்போ பிட்யூட்டரிசம் நோய் பாதிப்பு உண்டாகிறது. எல்லா நேரத்திலும் உங்கள் உடலில் வெப்ப தன்மை குறைவாகவும் சளி தொந்தரவுடன் குளிர்ச்சியாகவே இருக்கும். இரத்த சோகை உண்டாகலாம், பசியின்மை காரணமாக எடை குறைப்பு உண்டாகலாம். மருத்துவ ஆலோசனையை ஏற்கும்போது, ஹார்மோன் பற்றாக்குறைக்கு அவர் சில மாற்று மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

மருந்துகள்

மருந்துகள்

சில மருந்துகளை வேறு காரணங்களுக்காக உட்கொள்வதால், அதன் பக்க விளைவாக சளி தொந்தரவுகள் ஏற்படலாம். உதாரணத்திற்கு , பீட்டா ப்ளாக்கேர்ஸ் , இதயத்தை நிதானமாக்க உதவுகிறது, மேலும், இதய நோயின் காரணமாக உடலில் சில தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உற்பத்தியாகாமல் தடுக்கிறது. அதே நேரம், இந்த மருந்தால், தலைசுற்றல், சோர்வு, குமட்டல், கை மற்றும் கால் பாதங்களில் குளிர்ச்சி போன்றவை ஏற்படும். இதனை பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பதால், நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்தின் அளவை குறைக்கலாம்.

மது அருந்துதல்

மது அருந்துதல்

தோலின் அடிபகுதியில் விரிவடைந்த இரத்த நாளங்களில் இரத்தம் பாய்ந்து செல்வதால், மது அருந்தும் தொடக்கத்தில் உடல் வெப்பமாக இருப்பது போல் தோன்றும். உங்கள் உடல், உள்ளுக்குள் இருக்கும் இரத்தத்தை தோலின் மேற்பரப்பை நோக்கி உறிஞ்சும்போது தானாக உடல் வெப்பம் குறையும். உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதிக்கு மதுவினால் அழுத்தம் உண்டாகிறது. குளிர் அதிகமான நாட்களில் அபாயகரமான குளிர் உங்களை தாழ் வெப்பநிலை என்ற ஹைப்போ தெர்மியா என்ற நிலைக்கு கொண்டு செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons You're Always Cold

Feeling chilly when the AC is blasting is one thing. But if you're always shivering, or your hands and feet feel like blocks of ice while everyone else nearby says the temperature feels toasty, then it's time to investigate.
Story first published: Tuesday, March 27, 2018, 20:00 [IST]