இந்த ஒரு அருமருந்து நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு மனிதனின் ஆரோக்கியம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது. ஒருவரது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், உடலைத் தாக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்ரியாக்கள் உடலினுள் குடிப்புகுந்து ஆரோக்கியத்தையே சீர்குலைத்துவிடும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முதலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும், அதன் வேலையை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சரியாக செய்ய வேண்டுமானால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுடன், ஒருசில மருந்துகள் அல்லது கை வைத்திய மருந்துகளும் உதவி புரியும்.

சுவாச மண்டலம் உடலில் உள்ள திசுக்கள், செல்கள் மற்றும் உறுப்புக்கள் போதுமான ஆக்ஸிஜனை தொடர்ச்சியாக பெறச் செய்கிறது. அதற்கு ஆக்ஸிஜனை சரியாக உள்ளிழுத்து, உடலினுள் உள்ள தேவையற்ற கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. ஒருவரது உடலில் சளித் தேக்கம் அதிகம் இருந்தால், நுரையீரல் சரியாக செயல்படாமல் போகும். அதோடு மூச்சுவிடுவதிலும் சிரமத்தை சந்திக்க நேரிட்டு, மிகுதியான களைப்பை உணரக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெரியாத விஷயம்

தெரியாத விஷயம்

நமது உடல் ஒரு நாளில் 2 லிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. இப்படி உடலில் உற்பத்தி செய்யப்படும் சளியை, நாம் அன்றாடம் சாதாரண இருமலின் போது, துப்பி வெளியேற்றிவிடுவோம்.

சுவாச பாதையில் சளித் தேக்கம்

சுவாச பாதையில் சளித் தேக்கம்

ஒருவேளை சளி அல்லது அலர்ஜி இருந்தால், நுரையீரல் சரியாக செயல்படாமல், மூச்சுக்குழாய்களிலும் சளி தேங்கி, அதன் விளைவாக சுவாசிப்பதில் கூட மிகுதியான சிரமத்தை சந்திக்க நேரிடும். ஒருவேளை உங்களது சளி இரத்தம் கலந்தோ அல்லது பச்சை நிறத்திலோ இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இயற்கை அருமருந்து

இயற்கை அருமருந்து

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அற்புதமான இயற்கை அருமருந்தின் மூலம் எளிதில் வெளியேற்றலாம். முக்கியமாக இயற்கை வழிகளின் மூலம் சளியை வெளியேற்ற முயற்சிக்கும் போது, அதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையும் அதிகரிக்கும்.

இப்போது சளியை வெளியேற்றும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் அருமருந்து குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஆர்கானிக் தேன் - 1 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் - 1 கப்

தண்ணீர் - 16 அவுன்ஸ்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை அணைத்து, அதில் ஆர்கானிக் ஓட்ஸ் சேர்த்து கிளறி நன்கு குளிர்ந்த பின் அதில் தேன் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதனை வடிகட்டி, அந்த நீர்மத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

தயாரித்து வைத்துள்ள பானம் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். அதுவும் தினமும் இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி குடிக்க வேண்டும். தயாரித்து வைத்திருக்கும் பானம் காலியாகிவிட்டால், மீண்டும் புதிதாக தயாரித்துக் குடியுங்கள். இப்படி 40 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த முறையை 40 நாட்கள் தொடர்ந்து பின்பற்றிய பின், 2 வார இடைவெளி விட்டு, பின் மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம். ஆனால் அதற்கு பின் இந்த முறையை பின்பற்றக்கூடாது. இந்த முறையால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை மேம்படுவதோடு, நுரையீரலும் சளியின்றி சுத்தமாக இருக்கும்.

இப்போது நுரையீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இதர இயற்கை வழிகளைக் காண்போம்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளது. இது நுரையீரலில் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, சளித்தேக்கத்தையும் தடுக்கும். அதற்கு சுடுநீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் அல்லது டீயில் சில துளிகள் கற்பூரவள்ளி எண்ணெய் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்க வேண்டும்.

அதிமதுரம்

அதிமதுரம்

ஒருவர் தொடர்ந்து அதிமதுர டீயை சில நாட்கள் குடித்து வந்தால், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதற்கு ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் அதிமதுர பொடி சேர்த்து கலந்து, 10 நிமிடம் மூடி வைத்து பின் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் 2 முறை குடித்து வந்தால், நுரையீரல் சுத்தமாகும்.

இஞ்சி

இஞ்சி

நுரையீரலின் வலிமையை அதிகரிக்க நினைத்தால், தினடும் 2 கப் இஞ்சி டீ குடியுங்கள். இந்த டீ தயாரிப்பதற்கு 1 கப் நீரில் 1 சிறிய துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்தால், இஞ்சி டீ தயார். இந்த டீயை இரத்த அழுத்தம் அல்லது இதய பிரச்சனை உள்ளவர்கள் குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

புதினா

புதினா

தினமும் 3-5 புதினா இலைகளை சாப்பிட்டால், நுரையீரல் வலிமையாகும். சளித் தேக்கத்தில் இருந்து விடுபட, சுடுநீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து ஆவி பிடியுங்கள். இல்லாவிட்டால், ஒரு கப் சுடுநீரில் உலர்ந்த புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, 5-10 நிமிடம் கழித்து தேன் கலந்து குடியுங்கள். பித்தக்கற்கள் இருப்பவர்கள், இந்த மூலிகையைப் பயன்படுத்த வேண்டாம்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

நல்ல சூடான நீரில் 5-10 துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து 5-10 நிமிடம் ஆவி பிடித்தால், சளி இளகி வெளியேறிவிடும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர, விரைவில் சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Clear Your Respiratory System And Increase Your Energy Levels With This Home Remedy

This homemade natural recipe will cleanse your lungs and lead to a healthier immune system. Read on...
Story first published: Tuesday, January 16, 2018, 14:00 [IST]
Subscribe Newsletter