Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Meal Maker Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக மீல் மேக்கரையும் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் கிரேவி அல்லது குருமா செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கிரேவியை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் மசாலாவை வதக்கி அரைத்து செய்து பாருங்கள்.
இந்த மீல் மேக்கர் கிரேவி நன்கு க்ரீமியாகவும், ருசியாகவும் இருக்கும். ஒருமுறை இந்த பக்குவத்தில் செய்தால், பின் அடிக்கடி இந்த டேஸ்ட்டில் தான் செய்ய சொல்லி கேட்பார்கள். குறிப்பாக இப்படி கிரேவி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப் அல்லது 250 கிராம்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஜாவித்திரி பூ - சிறிது
* தக்காளி - 4 (நறுக்கியது)
* முந்திரி - 7
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* அரைத்த மசாலா
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கொதிக்கும் நீரில் மீல் மேக்கரை சேர்த்து மூடி வைத்து 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதிகப்படியான நீரை பிழிந்து
நீக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து கிளறி, மீல்
மேக்கரை சேர்த்து 2 நிமிடம் ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, ஜாவித்திரி
இதழ் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, முந்திரியையும் உடைத்து
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி
வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
சீரகத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் ப்ரை செய்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து, எண்ணெய் பிரிய நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லி மற்றும் கசூரி மெத்தியை
தூவி, பாதி எலுமிச்சையை பிழிந்துவிட்டு, கிரேவியை கிளறி இறக்கினால்,
சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications