Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
சுரைக்காய் வாங்குனா வேர்க்கடலையுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க... செம சைடிஷா இருக்கும்...!
Suraikkai Verkadalai Poriyal Recipe in Tamil: சாம்பார் மற்றும் ரசத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செய்து போரடித்து விட்டதா? மதியம் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பொரியல் செய்யுங்கள். இந்த சுரைக்காய் பொரியலில் வேர்க்கடலை சேர்க்கப்படுவதால் இதன் சுவை வித்தியாசமானதாக இருக்கும்.
இந்த சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சுரைக்காய் பொரியல் செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த பொரியல் நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், சுரைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வேர்க்கடலை சுரைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சுரைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 சிறிய சுரைக்காய் (துண்டுகளாக நறுக்கியது)
- தேவையான அளவு உப்பு
- ¼ கப் தண்ணீர்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- 2 பச்சை மிளகாய்
வேர்க்கடலை மசாலா செய்ய:
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- ¼ கப் வேர்க்கடலை
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் ஒரு கடாயைச் சூடுபடுத்தவும். பின் அதே கடாயில் 1 டீஸ்பூன் சீரகம், 2 வரமிளகாய் மற்றும் ¼ கப் வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- வேர்க்கடலை நன்கு வறுபடும் வரை அவற்றை எண்ணெய் ஏதும் சேர்க்காமல் வறுக்கவும். பின்னர் அவற்றை ஒரு மிக்சர் ஜாருக்கு மாற்றவும்.
- பொருட்கள் ஆறிய பிறகு, அவற்றை மென்மையான தூளாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயை மீண்டும் சூடாக்கி அதில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் 1 ஸ்பூன் கடுகை சேர்த்து, அந்த வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- கடுகு வெடித்ததும் 2 நறுக்கிய பச்சை மிளகாய்க, 1 கொத்து கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, மிதமான தீயில் அது கண்ணாடி போன்ற பதம் வரும் வரை வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, வெங்காயத்துடன் நன்கு கிளறவும். ¼ ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய சுரைக்காயை சேர்த்து நன்றாக கிளறவும்.
- ¼ கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- பாத்திரத்தை மூடி, அவ்வப்போது சரிபார்த்து, மிதமான தீயில் வேகவிடவும். சீரான இடைவெளியில், மூடியைத் திறந்து, கிளறி விடவும்.
- சுரைக்காய் முழுமையாக வெந்து நன்கு மென்மையானதும் அரைத்த வேர்க்கடலை பொடியைக் குழம்பில் சேர்த்து கிளறவும்.
- இந்த சத்தான வேர்க்கடலை பொடி சுரைக்காயுடன் நன்றாக கலந்து சுண்டும் வரை காத்திருக்கவும். சுரைக்காய் நன்கு வெந்து பொடியுடன் இணைந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான வேர்க்கடலை சுரைக்காய் பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications
