Latest Updates
-
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க..
முட்டைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்!
இங்கு முட்டைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் தான் முட்டை. இந்த முட்டையில் பல்வேறு முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது மற்றும் இது மிகச்சிறந்த காலை உணவும் கூட. ஒருவரது உடலுக்குத் தேவையான பி வைட்டமின்களை முட்டையில் இருந்து எளிதில் பெற முடியும். உடல்நல நிபுணர்களும் முட்டை ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளாகக் கூறுகிறார்கள். ஆய்வுகளிலும் காலை உணவில் செரில் போன்ற உணவுகளை உட்கொள்வதை விட முட்டை நிறைந்த காலை உணவை உட்கொள்வது சிறந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முட்டை ஹேங் ஓவரை சரிசெய்யும் சிறப்பான உணவும் கூட. இதில் உள்ள அதிகளவிலான சிஸ்டைன் என்னும் அமினோ அமிலம், அசிடல்டிஹைடை உடைத்தெறிந்து, ஹேங் ஓவருக்கு காரணமானதை வேரோடு அழிக்கும். மேலும் முட்டை உடலில் இருந்து தேவையற்ற டாக்ஸின்களை வெளியேற்றவும் செய்யும். தற்போது முட்டைகளில் போலி இருப்பதால், நல்ல ஆர்கானிக் முட்டைகளைத் தேடிப் பார்த்து வாங்கி உட்கொள்ளுங்கள். சரி, இப்போது முட்டைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள் குறித்துக் காண்போம்.

மூளை வளர்ச்சிக்கு உதவும்
முட்டையின் மஞ்சள் கருவில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமினான கோலைன் அதிகளவில் உள்ளது. கோலைன் நரம்புகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, அழற்சியைக் குறைக்கும். முக்கியமாக கர்ப்பிணிகள் கோலைன் நிறைந்த முட்டையை சாப்பிட்டால், அது சிசுவின் மூளை வளர்ச்சிக்கு உதவும். இதனால் தான் கர்ப்பிணிகளை நிறைய முட்டை சாப்பிட சொல்கிறார்கள்.

புரோட்டீன் உணவு
முட்டையில் நல்ல தரமான புரோட்டீன் நிறைந்துள்ளது. முட்டை தரமான புரோட்டீன் மட்டுமின்றி, ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் டி, ரிபோஃப்ளேவின், ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் கோலைன் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளது. ஒரு வேக வைத்த முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது.

எடையைக் குறைக்க உதவும்
எடை குறைப்பு டயட்டில் இருப்போர் முட்டையை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏன் தெரியுமா? ஏனெனில் முட்டையில் உள்ள புரோட்டீன், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, நாள் முழுவதும் வயிறு நிறைந்த திருப்திகரமான உணர்வைக் கொடுக்கும். ஒரு பெரிய முட்டையில் 70 கலோரிகளும், 6 கிராம் புரோட்டீனும் உள்ளது. ஆகவே இது எடையைக் குறைப்போருக்கு சிறந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது.

ஃபிட்னஸ் உணவு
உடற்பயிற்சிக்குப் பின், போதுமான அளவு புரோட்டீன் கிடைக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் இது தசைகளின் வளர்ச்சிக்கும், பாதிக்கப்பட்ட தசை திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது. அதிலும் முட்டையை எண்ணெய் சேர்த்து பொரித்து உட்கொள்வதை விட, வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

வைட்டமின் டி உணவு
பொதுவாக உடலுக்கு வைட்டமின் டி சத்தானது வெயிலில் இருந்து தான் பெறப்படுகிறது. ஆனால் இந்த வைட்டமின் டி முட்டையிலும் அதிகளவில் உள்ளது என்று தெரியுமா? ஒருவர் முட்டையை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். நீங்கள் வெயிலில் குறைவாக சுற்றுபவராயின், அன்றாட உணவில் முட்டையை தவறாமல் சேர்த்து வாருங்கள். ஒரு பெரிய முட்டையின் மஞ்சள் கருவில் 41 யூனிட் வைட்டமின் டி உள்ளது.

முட்டையின் நிறத்திற்கும் சத்துக்களுக்கும் சம்பந்தம் இல்லை
பலரும் வெள்ளை நிற முட்டைகளை விட ப்ரௌன் நிற முட்டைகள் தான் ஆரோக்கியமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முட்டை ஓட்டின் நிறத்திற்கும் முட்டையினுள் உள்ள சத்துக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சொல்லப்போனால் முட்டையின் மஞ்சள் கருவில் வேண்டுமானால் நிற வேறுபாடு இருக்கலாம். இதற்கு அந்த கோழிக்கு கொடுக்கப்பட்ட உணவு தான் காரணமே தவிர, வேறு எதுவும் இல்லை.

நற்பதமான முட்டைகளே சிறந்தது
முட்டையை கடைகளில் இருந்து வாங்கி 3 வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். மேலும் முட்டையை சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்துப் பராமரிப்பது நல்லது. அதை விட்டு அறைவெப்ப நிலையில் பராமரித்தால், முட்டை விரைவில் பாழாகிவிடும். எனவே முட்டையை வாங்கிய உடனேயே சமைத்து சாப்பிட்டுவிடுங்கள்.

முட்டையில் உள்ள கொழுப்பு
ஒரு பெரிய முட்டையில் 1.5 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்பு, 1 கிராம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 1.8 கிராம் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது. சில முட்டைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதற்கு கோழிகள் ஆளி விதையை சாப்பிட்டிருப்பது தான் காரணம்.

சரிவிகித டயட் அவசியம்
எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலும், அதை சரியான மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். அது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். இது முட்டைக்கும் பொருந்தும். மேலும் புரோட்டீன் சத்தானது முட்டையில் மட்டுமின்றி, மீன், பருப்பு வகைகள் போன்றவற்றிலும் உள்ளது. ஒருவர் என்ன தான் டயட்டில் இருந்தாலும், அந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கால்சியம் நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த நட்ஸ், விதைகள் போன்றவையும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications