உடல் எடை குறைய உங்கள் உணவில் இதை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும்!

Posted By:
Subscribe to Boldsky

நம்முடைய ஆரோக்கியத்திற்கு உள்ளுருப்புகள் எல்லாம் கச்சிதமாக செயல்பட வேண்டுமென்றால் உள்ளூருப்புகள் எல்லாமே ஒழுங்காக செயல்பட வேண்டும்.அதற்கு அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் அதற்குத் தேவையான அனைத்து விதமான சக்திகளும் கிடைத்திட வேண்டும்.

ஒவ்வொரு உறுப்பும் செயல்பட வேண்டுமென்றால் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அவசியம். சில சத்துக்களை நம் உடல தானே உற்பத்தி செய்யும் சில வகைகளை நாம் சாப்பிடும் உணவின் மூலமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

எப்போதும் வெளித் தோற்றத்தை வைத்து.... தான் நம்முடைய ஆரோக்கியம் பறைசாற்றப்படுகிறது.

Why we need zinc mineral in our body

வெளித்தோற்றத்திற்கு கொடுக்கும் அதேயளவு முக்கியத்துவத்தை நம்முடைய உள்ளுருப்புகளுக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜிங்க் :

ஜிங்க் :

நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சக்திகளில் ஜிங்கும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவு முறையாக செரிப்பதற்கும், புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் ,மன அழுத்தம் வராமல் தடுப்பதற்கும்,முகத்தில் கரும்புள்ளி இருப்பதற்கு,ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு,பெண்களுக்கு கருவளம் அதிகரிக்க,உடல் எடை குறைய என நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஜிங்க் ஒரு தீர்வாக அமைந்திடும்.

என்ன செய்கிறது ? :

என்ன செய்கிறது ? :

நம் உடலுக்குத் தேவையான மினரல்களில் மிகவும் முக்கியமானது ஜிங்க். இது நம் உடலில் செல் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. நம் உடலில் 300க்கும் அதிகமான என்சைம்கள் இருக்கின்றன அவை சரியாக செயல்படுவதற்கு ஜிங்க் மிகவும் அவசியமாகும்.

தானாக உற்பத்தி செய்யும் :

தானாக உற்பத்தி செய்யும் :

சராசரியாக ஒரு மனிதர் தனக்குத் தேவையான ஜிங்க் அளவுகளில் மூன்று கிராம் அளவு தானாக சுரக்கும்.குறிப்பாக சலைவரி சுரப்பி,ப்ரோஸ்டேட் சுரப்பி,கணையம் ஆகியவற்றில் இந்த சுரப்பு நிகழ்கிறது.

மூன்று கிராமைத் தாண்டி ஒரு நாளில் உங்களுக்கு தேவையான அளவினை நீங்கள் உணவின் மூலமாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 அறிகுறிகள் :

அறிகுறிகள் :

சில விஷயங்களை அதன் அறிகுறியை வைத்து மேம்போக்கான சிகிச்சை முறைகளை எடுத்துக் கொண்டிருப்போம். அப்படி நீங்கள் எத்தனை வருடங்கள் எடுத்தாலும் உங்களுக்கான பிரச்சனை தீராது.

அதற்கு முக்கியமான அந்த அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும்.அதற்கான முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடலில் ஜிங்க் குறைபாடு தோன்றினால் என்னென்ன அறிகுறிகள் தெரிந்திடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 பட்டியல் :

பட்டியல் :

நினைவுத்திறன் பாதிக்கப்படும், எதையும் சட்டென நினைவுப்படுத்த முடியாது, நோயெதிர்பு சக்தி குறைவாக இருக்கும், வாசனை மற்றும் சுவையறிவதில் சிக்கல்கள் உண்டாகும், தூக்கக் குறைபாடு பிரச்சனைகள் உண்டாகும். முடி அதிகமாக உதிரும், உடலுறவில் நாட்டம் குறையும்,வயிற்றுப் போக்கு ஏற்படும்,

இவை நமக்கு அடிக்கடி தெரிந்திடும் அறிகுறிகள் தான். இவற்றுக்காக நீங்கள் என்னென்ன மாதிரியான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும் தீரவில்லை என்றால் உங்கள் உடலில் ஜிங்க் அளவினை சோதித்துப் பார்ப்பது சிறந்தது.

நம் உடலில் ஜிங்க் போதிய அளவு இருந்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது தெரியுமா?

சருமத்தில் :

சருமத்தில் :

சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் வராமல் தவிர்ப்பதில் ஜிங்க் முக்கிய இடம் வகிக்கிறது. கரும்புள்ளி ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று நம் சருமத்தில் அதிக டெஸ்ட்டிரோன் சுரப்பது தான். ஜிங்க் அதன் சுரப்பை கட்டுப்படுத்தும்.

உடலில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்வதால் நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

அதோடு சருமம் தன்னை புதுப்பித்துக் கொள்ள உதவிடும் கொலாஜன் உற்பத்தியையும் இது மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

Eczema எனப்படுகிற சரும வியாதி வருவதற்கான அடிப்படைக்காரணமே ஜிங்க் குறைபாடு தான்.

ப்ரோஸ்டேட் :

ப்ரோஸ்டேட் :

ப்ரோஸ்டேட் சுரப்பி சிறப்பாக செயல்பட ஜிங்க் மிகவும் அவசியமான ஒன்றாகும். ப்ரோஸ்டேட் சுரப்பி விரிவடைந்து அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு உண்டானால் புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு அதிகம்.

காய்ச்சல் :

காய்ச்சல் :

காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையிலிருந்து நம்மை இது மீட்டெடுக்க உதவிடும். இவை நம் உடலில் இருக்கக்கூடிய pro-inflammatory cytokines அளவைக் குறைத்திடும்.

இவை அதிகமாக இருந்தால் காய்ச்சல் குறையாது.

உடல் எடை :

உடல் எடை :

இன்றைக்கு உடல் எடை குறைய வேண்டும் என்று பயங்கர பிரயத்தனம் படுகிறவர்கள் நாள்கணக்கில் ஜிம்மில் தவம் கிடக்காது, டயட் என்ற பெயரில் உணவை கொரிக்காமல் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் அதிகப்படியான ஜிங்க் இருக்கிறதா என்று பாருங்கள்.

கர்ப்பம் :

கர்ப்பம் :

டி என் ஏ உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் ஜிங்க் முக்கியப்பங்காற்றுகிறது. அதே போல கருத்தரிக்கவும் இது மிகவும் பயன்படுகிறது.

இது கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமல்ல பிறந்த குழந்தைக்கும், தாய்ப்பால் கொடுக்கும் இளம் தாய்மார்களுக்கும் இந்தச் சத்து மிகவும் அவசியமாகும்

ஆண்களுக்கு :

ஆண்களுக்கு :

ஆண்களின் டெஸ்ட்ரோஜென்னி ன் அளவை சரியாக வைக்க உதவும். இது தான் விந்தணு வெளியேற்றத்திற்கான அடிப்படை அதோடு பெண்ணின் கருமுட்டையில் விந்தணு கொண்டு செல்லும் வேலையை செய்வதற்கும் ஜிங்க் மிகவும் அவசியமாகும்.

அலோபிசியா :

அலோபிசியா :

இது குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கு ஏற்படும் ஒரு முடியுதிர்வுப் பிரச்சனை.இப்பிரச்சனை ஏற்படக்கூடியவர்கள் தங்கள் உணவுகளில் ஜிங்க் அதிகரிப்பது மட்டுமே சிறந்த பலன் அளிக்கும்.

எலும்புகளுக்கு :

எலும்புகளுக்கு :

எலும்பு வலுவாக இருப்பதற்கு hydroxyapatite என்ற மினரல் தேவைப்படுகிறது. அவை குறைந்தால் வலி ஏற்படுவது,எலும்பு முறிவது, மூட்டுக்கள் வலுவழிப்பது ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

இதனைத் தவிர்க்க ஜிங்க் சேர்ப்பது அவசியம். வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஓஸ்டியோபொராசிஸ் நோய் வராமல் தடுக்கவும் இது உதவிடும்.

என்னென்ன உணவுகளில் ஜிங்க் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

முட்டை மஞ்சள் கரு:

முட்டை மஞ்சள் கரு:

முட்டையின் மஞ்சள் கருவில் அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது. இதனா ல் பலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப் பிட மாட் டார்கள். ஆனால் அதில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் அதிகமான அளவி ல் ஜிங்க் சத்து இருப்பது.

எள் :

எள் :

விதைகளில் ஜிங்க் சத்துக்கள் உள்ளன. அத்தகைய விதைகளில் ஒன்றான எள்ளி லும் அதிகமாக ஜிங்க் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன

கடல் சிப்பி:

கடல் சிப்பி:

ஜிங்க் சத்து அதிகம் உள்ள உணவுகளில் கடல் உணவுகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக கடல் சிப்பியில் ஜிங்க் என்னும் சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின் றி மேலும் பல சத்துக்களையும் உடலுக்கு தருகிறது.

வேர்க்கடலை:

வேர்க்கடலை:

வேர்க்கடலையில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. மேலும் ஜிங்க்சத்தும் அதிகம் இருக்கிறது. எனவே வறுத்த மற்றும் உப்பு உள் ள வேர்க்கடலையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பூண்டு:

பூண்டு:

வாசனைப் பொருட்களில் ஒன்றான பூண் டில் அதிக சத்துக்கள் உள்ளன. அந்த சத்து க்களில் ஜிங்க் சத்தும் ஒன்று.

இறைச்சி:

இறைச்சி:

இறைச்சியில் செம்மறி ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிகமான அளவி ல் ஜிங்க் சத்தானது உள்ளது. இந்த உண வை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், ஜிங் க் சத்தோடு, புரோட்டீனும் கிடைக்கும்.

காளான்:

காளான்:

பெரும்பாலனோருக்கு பிடித்த உணவுகளில் ஒன்றான காளானிலும் ஜிங்க் சத்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆளி விதை:

ஆளி விதை:

விதைகளில் ஒன்றான ஆளி விதையிலு ம் ஜிங்க் உள்ளது. இந்த விதைகளில் ஜிங்க் மட்டுமின்றி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் உள்ளது.

காராமணி:

காராமணி:

பருப்பு வகைகளில் ஒன்றான காரா மணி யில் நிறைய புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து உள்ளது. ஆனால் அதே சமயம், அதி க் கொழுப்பு க்களும் அதிகமாக உள்ளன. எனவே இந்த உணவை எப்போ தாவது சாப்பிடுவது நல்லது.

கடல் உணவுகள் :

கடல் உணவுகள் :

அனைத்திலுமே ஜிங்க் சத்துக்களை பார் க்கலாம். ஆனால் அதில் ஒன்றான நண்டை நன்கு ரோஸ்ட் செய்து சாப்பிட் டால், டெஸ்ட்ரோஜென் அளவை சீராக்கலாம்.

ப்ரௌன் அரிசி:

ப்ரௌன் அரிசி:

பொதுவாக முழு தானியங்களில் ஜிங்க் சத்துக்கள் இருக்கும். அதிலும் சுத்தி கரிக்கப்படாமல் இருக்கும் ப்ரௌன் அரிசியில் ஜிங்க் சத்து உள்ளது.

பசலைக் கீரை:

பசலைக் கீரை:

பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் நிறைய நன்மைகள் உள்ளங் கியுள்ளன. இதில் வைட்டமின் கே, கால் சியம் மற்றும் இரும்புச் சத்து இருப்ப தோடு, ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.

டார்க் சாக்லெட்:

டார்க் சாக்லெட்:

சாக்லெட்களில், ஜிங்க் சத்து அதிகம் உள்ள இனிப்பு இல்லாத கொக்கோ உள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக் லெட் சாப்பிட்டால், மனம் அமைதியடைவதோடு, உணர்ச்சியும் பெருக்கெடுக்கும்.

பூசணிக்காய் விதைகள்:

பூசணிக்காய் விதைகள்:

பூசணிக்காய் விதைகளை வைத்து நிறைய ஸ்நாக்ஸ்கள் உள்ளன. எனவே இந்த வகையான ஸ்நாக்ஸ்களை வாங்கி சாப்பிட்டால், உடலுக்கு ஜிங்க் சத்துக்கள் கிடைப்பதோடு, குறைவான கலோரியும், 0% கொழுப்பும் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why we need zinc mineral in our body

Why we need zinc mineral in our body