Latest Updates
-
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க
கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் உள்ள ஒரு அழுத்தப் புள்ளியை 'ஃபெங் ஃபூ' என்று அழைப்பர். அந்த புள்ளியில் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால், உடலினுள் உள்ள ஒருசில பிரச்சனைகள் நீங்கும்.
நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது.
பாதங்களில் உள்ள ஏழு அழுத்தப் புள்ளிகளை தூண்டுவதனால் பெறும் நன்மைகள்!!!
அந்த வகையில் நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் ஒரு அழுத்தப் புள்ளி உள்ளது. இதனை 'ஃபெங் ஃபூ' என்று அழைப்பர். சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்த ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால், உடலினுள் உள்ள ஒருசில பிரச்சனைகள் நீங்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நன்மை 1
உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியெனில் ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை தினமும் 20 நிமிடங்கள் வைப்பதன் மூலம், இரவில் நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

நன்மை 2
செரிமான பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? இந்த ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை வைத்தால், உங்களது செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராகும்.

நன்மை 3
அடிக்கடி உங்களுக்கு சளி பிடிக்கிறதா? கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து வாருங்கள். இதன் மூலம் சளித் தொல்லையில் இருந்து நிச்சயம் விடுபடுவீர்கள்.

நன்மை 4
கழுத்திற்கு பின் தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதன் மூலம், மூச்சு கோளாறு நீங்கும் மற்றும் இதய செயல்பாடு மேம்படும்.

நன்மை 5
தலைவலி, பல் வலி மற்றும் மூட்டு வலி உங்களுக்கு உள்ளதா? இந்த பிரச்சனைகளுக்கும் இந்த ஃபெங் ஃபூ ஐஸ் கட்டி முறை உடனடி நிவாரணம் வழங்கும்.

நன்மை 6
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், முதுகுத்தண்டு பிரச்சனைகள் போன்றவற்றை ஃபெங் ஃபூ ஐஸ் கட்டி முறை குணமாக்கும்.

நன்மை 7
தைராய்டு பிரச்சனையால் பெண்கள் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இந்த தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குவதற்கு தினமும் கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து வாருங்கள்.

நன்மை 8
ஆர்த்ரிடிஸ், உயர் மற்றும் தாழ் இரத்த அழுத்த பிரச்சனைகள் இருந்தால், அதனை ஃபெங் ஃபூ ஐஸ் கட்டி முறையை தினமும் செய்வதன் மூலம் சரிசெய்ய முடியும்.

நன்மை 9
ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் ஃபெங் ஃபூ ஐஸ் கட்டி முறையை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நன்மை 10
கழுத்தின் பின் ஐஸ் கட்டியை வைப்பதனால், இரைப்பை கோளாறுகள், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

நன்மை 11
மாதவிடாய் கோளாறுகள், ஆண்மையின்மை, கருவுறுதலில் உள்ள பிரச்சனை போன்றவற்றை இந்த முறையை செய்வதன் மூலம் சரிசெய்ய முடியும்.

நன்மை 12
உள உணர்ச்சி கோளாறுகள், மன இறுக்கம், நாள்பட்ட சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவையும் ஃபெங் ஃபூ ஐஸ் கட்டி முறையின் மூலம் சரிசெய்யலாம்.

குறிப்பு
இந்த ஃபெங் ஃபூ ஐஸ் கட்டி முறையை கர்ப்பிணிகள் அல்லது மூளைக் கோளாறு உள்ளவர்கள் அல்லது பேஸ் மேக்கர் கொண்டவர்கள் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
