Latest Updates
-
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம்
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
World Tuberculosis Day 2026: காசநோய் என்பது மிகவும் கொடிய நோய். இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். இந்த காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகின் மிகக் கொடிய தொற்று நோய்களில் ஒன்றான காசநோயின் பேரழிவுகரமான சுகாதார மற்றும் சமூக விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த உலகளாவிய பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த காசநோயை டிபி (TB) என்று அழைப்பர். இந்த நோய் ஒரு தொற்றுநோய். ஆனால் ஒரு நல்லசெய்தி என்னவென்றால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், குணப்படுத்திவிட முடியும். இருந்தாலும், இதில் உள்ள சவால், இந்த ஆரம்பகால அறிகுறிகள் மிகவும் லேசாகத் தோன்றுவதால், பலரும் அதை புறக்கணிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுவாக உடலில் ஏதேனும் ஒரு பிரச்சனையை தொடர்ந்து நீண்ட காலமாக சந்திக்கும் போது தான், பலரும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வோம். ஆனால் இப்படி காசநோயை முற்றிய நிலையில் கண்டறிந்தால், பின் அது நிலைமையை மோசமாக்கி, சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடும். எனவே இந்த காசநோய் குறித்து ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கீழே காசநோய் என்றால் என்ன, அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன, எப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்பன குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
காசநோய் என்றால் என்ன?
காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இது பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கும். இப்படி நுரையீரலை பாதிக்கும் காசநோயை நுரையீரல் காசநோய் (Pulmonary TB) என்பர். ஆனால் இந்த பாக்டீரியாக்கள் நிணநீர் கணுக்கள், எலும்புகள், முதுகெலும்பு, மூளை மற்றும் வயிறு போன்ற உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கலாம். இப்படி பிற உறுப்புக்களை பாதிப்பதை நுரையீரலுக்கு அப்பாற்பட்ட காசநோய் (Extrapulmonary TB) என்று அழைப்பர்.
காசநோய் எப்படி மற்றவர்களுக்கு பரவும்?
காசநோயானது பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து காற்றின் மூலம் பரவும். அதுவும் அந்த நோயாளிகள் இருமும் போது, தும்மும் போது, பேசும் போது அல்லது சிரிக்கும் போது, காற்றின் மூலம் பரவலாம். ஆனால் காசநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனே நோய்வாய்ப்படமாட்டார்கள். பெரும்பாலும், எந்த அறிகுறியும் இல்லாமலேயே காசநோய் அமைதியாக தொடங்கலாம்.
காசநோயை ஏன் ஆரம்பத்திலேயே கண்டறிவது முக்கியம்?
* காசநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம்.
* மற்றவர்களுக்கு பரவும் அபாயம் குறையும்.
* உடலின் பிற உறுப்புக்கள் சேதமடைவது தடுக்கப்படும்.
* குறுகிய காலத்தில் விரைவில் முழுமையாக குணமடைந்துவிடலாம்.
ஆனால் காசநோயின் அறிகுறிகளை புறக்கணித்தால், நோய் உடலினுள் தீவிரமடைந்து, சிகிச்சை அளிப்பது கடினமாவதோடு நீண்ட காலம் எடுக்கும் மற்றும் குணமடைவதும் கடினமாகிவிடும்.
காசநோயின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?
காசநோயின் ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவையாக இருக்கும். இதனால் பலர் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு புறக்கணிப்பார்கள். அப்படி பலர் புறக்கணிக்கும் காசநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் பின்வருமாறு:
* லேசான காய்ச்சல் - இதில் காய்ச்சல் வந்துவந்து போகும். பெரும்பாலும் மாலை வேளையில் மட்டும் காய்ச்சல் தீவிரமடையும்.
* தொடர் இருமல் - இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்திருந்தால், அது காசநோயின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக தொடங்கி, பின் சளி வெளியேத் தொடங்கும்.
* பசியின்மை - பசி எடுக்காது. சாப்பிட பிடிக்காது. வயிறு எப்போதும் நிரம்பியிருப்பது போன்று இருக்கும்.
* உடல் சோர்வு மற்றும் பலவீனம் - நன்கு தூங்கி ஒய்வு எடுத்த பின்னரும், மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை சந்தித்தால், அது காசநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
* காரணமின்றி எடை இழப்பு - பசியின்மையால் சரியாக சாப்பிடாமல் இருக்கும் போது உடல் எடை படிப்படியாக குறையத் தொடங்கும்.
* இரவில் வியர்ப்பது - இரவு நேரத்தில் மட்டும் அளவுக்கு அதிகமாக வியர்ப்பது.
நுரையீரல் காசநோயின் அறிகுறிகள்
காசநோய் பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கும். அப்படி நுரையீரல் மட்டும் பாதித்திருந்தால், பின்வரும் அறிகுறிகள் தெரியக்கூடும்.
* இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்த இருமல்
* இருமல் அல்லது சுவாசிக்கும் போது நெஞ்சு பகுதியில் வலி
* மூச்சுத்திணறல்
* இரத்தம் கலந்த சளி
* நெஞ்சு பகுதியில் அசௌகரியம்
சாதாரண சளி பிடித்திருந்தால், அதற்கு சிகிச்சை எடுக்கும் போது சரியாகிவிடும். ஆனால் சிகிச்சைக்கு பிறகும் இருமல், சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
நுரையீரலுக்கு அப்பாற்பட்ட காசநோய் (Extrapulmonary TB) அறிகுறிகள்
காசநோய் நுரையீரலை மட்டுமின்றி, பிற உறுப்புக்களையும், ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அப்படி பாதித்திருந்தால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவையாவன:
* காரணமின்றி எடை இழப்பு
* தொடர் காய்ச்சல்
* மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனம்
* காரணம் தெரியாமல் வாரக்கணக்கில் நோய்வாய்ப்பட்டிருப்பது
அதுவும் காசநோய் உடலின் குறிப்பிட்ட உறுப்புக்களை பாதித்திருந்தால், அந்த பகுதிக்கு ஏற்ப அறிகுறிகள் தெரியும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
எலும்பு மற்றும் தண்டுவட காசநோய் (Bone and Spinal TB)
* நாள்பட்ட முதுகுவலி
* மூட்டு வலி மற்றும் விறைப்பு
* நடப்பதில் சிரமம்
நிணநீர் முடிச்சு காசநோய் (Lymph Node TB)
* வீங்கிய, வலியற்ற நிணநீர் கணுக்கள் (கழுத்து, அக்குள்)
* கணுக்கள் காலப்போக்கில் பெரிதாகலாம்
காசநோய் மூளைக்காய்ச்சல் (TB Meningitis)
* கடுமையான தலைவலி
* வாந்தி
* குழப்பம்
* கழுத்து விறைப்பு
வயிற்று காசநோய் (Abdominal TB)
* வயிற்று வலி
* எடை இழப்பு
* வீக்கம்
* செரிமான அசௌகரியம்
எப்போது காசநோய் பரிசோதனையை செய்ய வேண்டும்?
பின்வரும் அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்காமல் உடனே காசநோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
* 2 வாரங்களுக்கும் மேல் நீடித்த இருமல்
* இரவு நேரத்தில் மட்டும் அதிகமாக வியர்ப்பது
* காரணமில்லாத எடை இழப்பு
* பல வாரங்களாக உடல் சோர்வு
* காசநோயாளியுடன் நெருங்கிய தொடர்பு
காசநோய்க்கான பரிசோதனைகள்
காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவர்கள் பின்வரும் பரிசோதனையை மேற்கொள்வார்கள்.
* காசநோய் பாக்டீரியாவைக் கண்டறிவதற்கான சளிப் பரிசோதனை
* நுரையீரல் பாதிப்பை காண மார்பு எக்ஸ்-ரே
* துல்லியமான நோயறிதலுக்கான CBNAAT சோதனை
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று சோதனைகள் ஆரம்ப கட்டங்களிலேயே காசநோயை உறுதிப்படுத்த உதவுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


