Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
World Tuberculosis Day 2023: 'டிபி'யை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சில இயற்கை வழிகள்!
World Tuberculosis Day 2023: டிபி என்று அழைக்கப்படும் காசநோய் மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடிய மிகவும் கொடிய நோய். உலகளவில் இந்த காசநோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக காசநோயானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய தன்மையைக் கொண்டது.
இந்த காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், இந்நோயை முற்றிலும் ஒழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

காசநோய் என்பது நுரையீலைத் தாக்கும் ஒரு தொற்றுநோய். இது மூளை அல்லது தண்டுவடம் ஆகிய பகுதிகளுக்கும் பரவும். இந்த காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாவால் பாதிக்கப்படும் அனைவருமே நோய்வாய்ப்படுவதில்லை. காசநோயில் இரண்டு வகையான நிலைமைகள் உள்ளன. அவை லேடன்ட் டிபி தொற்று (Latent TB infection (LTBI)) மற்றும் டிபி நோய். இந்த காசநோய்க்கு சிகிச்சை எடுக்காவிட்டால் அது உயிரையே பறிக்கக்கூடியது.
நெஞ்சு வலி, 3 வாரத்திற்கும் நீடித்த இருமல், இருமலின் போது இரத்தக்கசிவு, பசியின்மை, இரவு நேரத்தில் அதிகமாக வியர்ப்பது போன்றவை காசநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் அறிகுறிகளாகும். மேலும் சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் அல்லது புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சையை மேற்கொண்டவர்கள் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாக நிறைய வாய்ப்புள்ளது.
இந்த காசநோயைக் குணப்படுத்த ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. இன்று உலக காசநோய் தினம் என்பதால், காசநோய்க்கான அந்த இயற்கை வழிகள் என்னவென்பதைக் காண்போம்.
புதினா
புதினாவில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது காசநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்த உதவுகிறது. அதற்கு 1/2 கப் கேரட் ஜூஸில், ஒரு டீஸ்பூன் புதினா சாற்றினை 2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் மால்ட் வினிகர் சேர்த்து கலந்து, அதை மூன்றாக பிரித்து, ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று குடிக்க வேண்டும். இப்படி செய்தால், அது காசநோயில் இருந்து விடுபட உதவும்.
பூண்டு
மருத்துவ குணம் அதிகம் கொண்ட பூண்டு காசநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பூண்டில் உள்ள சல்ஃப்யூரிக் அமிலம், காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் பூண்டில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். அதுவும் நெல்லிக்காய் ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால் உடலிலும், சருமத்திலும் மாயங்கள் ஏற்படும். முக்கியமாக இந்த நெல்லிக்காய் ஜூஸ் காசநோயால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை காசநோயை உண்டாக்கிய பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
மிளகு
காரத்தன்மையைக் கொண்ட மிளகு அழற்சி தொடர்பான நோய்களை எதிர்த்துப் பேராடுவதில் சிறந்தது. முக்கியமாக மிளகு நுரையீரலை சுத்தம் செய்யவும், சளி உற்பத்தியைக் குறைப்பதிலும் சிறந்தது. காசநோயாளிகள் இருமலால் சந்திக்கும் நெஞ்சு வலியைக் குறைக்கவும் மிளகு உதவுகிறது. அதற்கு ஒரு வாணலியில் சிறிது வெண்ணெயைப் போட்டு, அதில் 8-10 மிளகைப் போட்டு வறுத்து இறக்கி, அதை பேஸ்ட் செய்து, ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் ஒருமுறை 1/2 டீஸ்பூன் உட்கொண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன. முக்கியமாக இதில் உள்ள பாலிஃபீனால்கள் காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகின்றன. எனவே தினமும் 2 கப் க்ரீன் டீயை காசநோயாளிகள் குடிப்பது நல்ல நிவாரணத்தை வழங்கும்.
அன்னாசி
அன்னாசி ஜூஸ் காசநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அன்னாசி ஜூஸானது சளி உருவாக்கத்தைக் குறைக்க உதவி புரிந்து, விரைவில் காசநோயில் இருந்து விரைவில் குணமாக உதவுகிறது. அன்னாசி ஜூஸை தினமும் குடிப்பது காசநோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


