Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
World Tuberculosis Day 2023: காசநோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய சில முக்கியமான உணவுகள்!
காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. காசநோயாளிகள் குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலம் நோயை சமாளிக்க முடியும்.
World Tuberculosis Day 2023: காசநோய் (Tuberculosis) என்பது நுரையீரலைத் தாக்கும் ஒரு தீவிரமான தொற்றுநோயாகும். காசநோயானது மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியாக வழக்கமாக நுரையீரலைத் தாக்கும். சில சமயங்களில் இந்த பாக்டீரியா சிறுநீரகம், தண்டுவடம் மற்றும் மூளை போன்ற உடலின் பிற உறுப்புக்களையும் பாதிக்கும்.
காசநோயை ஒருவர் கவனித்து சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக மரணத்தை சந்திக்க நேரிடும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு காசநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. மேலும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம், இது மற்றவர்களுக்கு பரவும். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் எடை இழப்பு, உடல் பலவீனம், நாள்பட்ட இருமல், நெஞ்சு வலி, இருமலின் போது இரத்தம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை சந்திப்பார்கள்.

காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. காசநோயாளிகள் குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலம் நோயை சமாளிக்க முடியும். எனவே இந்த காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோயாளிகள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
கலோரி நிறைந்த உணவுகள்
காசநோயாளிகள் எடை இழப்பை சந்திப்பதால், கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் வளர்சிதை மாற்ற தேவைகளை பூர்த்தி செய்து, மேலும் உடல் எடை குறைவதைத் தடுக்கலாம். அதற்கு வாழைப்பழம், செரில், கடலைமிட்டாய், கோதுமை மற்றும் ராகி போன்றவற்றை காசநோயாளிகள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
வைட்டமின் ஏ, சி, ஈ நிறைந்த உணவுகள்
காசநோயாளிகள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தங்களின் தினசரி உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இந்த வைட்டமின்கள் ஆரஞ்சு, மாம்பழம், கேரட், கொய்யாப்பழம், நெல்லிக்காய், தக்காளி, நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றில் அதிகளவில் உள்ளன. எனவே இந்த வகையான உணவுகளை அதிகளவில் காசநோயாளிகள் சாப்பிட வேண்டும்.
புரோட்டீன் நிறைந்த உணவுகள்
காசநோயாளிகள் பசியின்மையை அனுபவிப்பார்கள். எனவே இவர்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இந்த புரோட்டீன் சத்தானது முட்டை, பன்னீர் மற்றும் சோயா போன்றவற்றில் அதிகளவில் உள்ளன. இந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அது உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகள்
காசநோய் உள்ளவர்கள் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், நட்ஸ், விதைகள், மீன் மற்றும் சிக்கன் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். ஆனால் இந்த வகை உணவுகளை மிதமான அளவில் காசநோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
ஜிங்க் நிறைந்த உணவுகள்
நட்ஸ்களில் ஜிங்க் சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இது உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எனவே சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் ஆளி விதை போன்ற விதைகள் மற்றும் நட்ஸ்களை காசநோயாளிகள் சாப்பிடுவது நல்லது. இதனால் இந்த விதைகள் மற்றும் நட்ஸ்களில் உள்ள சத்துக்கள் காசநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், நோயை எதிர்த்துப் போராடவும் காசநோயாளிகள் தங்களின் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய உணவுகளாகும். எனவே இவற்றை அன்றாட உணவில் சேர்த்து நன்மை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

