Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
மீண்டும் புதிதாக உருவெடுத்து அமெரிக்காவில் பரவும் கொரோனா- இது எவ்வளவு ஆபத்தானது? இதன் அறிகுறிகள் என்ன?
New COVID-19 Variant Cicada: மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்த கொடிய கோவிட்-19 எனும் கொரோனா வைரஸை மறக்கமுடியுமா? 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கி, உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி, உலகையே சில காலம் முடக்கிய கொரோனா வைரஸ், இதுவரை பல உருமாற்றங்களை அடைந்து மக்களை பாதித்துள்ளது.
அதுவும் இந்த கோவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், அந்த வைரஸ் தடுப்பூசியையும் ஏமாற்றி உடலை தாக்கும் அளவில் பலவாறு உருமாற்றமடைந்து பரவி வந்தது. ஆனால் அந்த மாறுபாடுகளின் வீரியம் குறைவாக இருந்ததால், பெரிய அளவில் உயிர் சேத்ம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் கோவிட்-19 வைரஸ் புதிதாக உருமாற்றமடைந்து அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. BA.3.2 என அறியப்படும், "சிகாடா" என்று அழைக்கப்படும், மிகவும் உருமாறிய ஒரு புதிய கோவிட்-19 திரிபு, உலகம் முழுவதும் படிப்படியாகப் பரவி வருவதால், சுகாதார அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, 2026 பிப்ரவரி மாத நிலவரப்படி, கழிவுநீர் கண்காணிப்பு, மருத்துவ மாதிரிகள் மற்றும் பயணிகளின் பரிசோதனைகள் மூலம் குறைந்தது 25 அமெரிக்க மாகாணங்களில் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த மாறுபாடு அமெரிக்காவில் 25 மாகாணங்களில் பரவியுள்ளது. இப்படிப்பட்ட புதிய கோவிட்-19 மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது, இதன் அறிகுறிகள் என்ன, தடுப்பூசி போட்டவர்களையும் இது தாக்குமா என்பன குறித்து விரிவாக காண்போம்.
BA.3.2 (Cicada) என்றால் என்ன?
BA.3.2 என்பது BA.3 எனும் ஓமிக்ரானின் மாறுபாடாகும். இது முதலில் 2022-ல் BA.1 மற்றும் BA.2 உடன் தோன்றியது. ஆனால் பின்னர் மறைந்துவிட்டது. அதன் பின் இது 2024 ஆம் ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. நீண்ட காலமாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்த இந்த மாறுபாடு, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் பரவத் தொடங்கியது. இப்படி நீண்ட காலம் நிலத்தடியில் தங்கியிருந்து வெளிவரும் சிகாடா என்ற பூச்சியைப் போல், அமைதியாக இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு பின் வெளிவரத் தொடங்கியதால், ஆராய்ச்சியாளர்கள் இதற்கு "சிகாடா" என்று பெயரிட்டுள்ளனர்.
BA.3.2 வைரஸ் எவ்வளவு ஆபத்தானது?
இந்த வைரஸ் மாறுபாட்டை மற்ற வைரஸ் மாறுபாடுகளுடன் ஒப்பிடுகையில், இதன் ஸ்பைக் புரோட்டீனில் சுமார் 70-75 சதவீதம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்களானது முந்தைய தொற்றுகள் அல்லது தடுப்பூசிகளிலிருந்து வரும் ஆன்டிபாடிகளை பகுதியளவு எதிர்த்துப் போராட அனுமதிக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வைரஸ் கடுமையான நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இதுவரை BA.3.2 வைரஸ் பரவிய பகுதிகளில், இது கடுமையான நோயையோ அல்லது மருத்துவமனை சேர்க்கைகளையோ ஏற்படுத்தும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நிச்சயம் இந்த திரிபு சற்று பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும், முந்தைய வகைகளை விட அதிக சிக்கலானது அல்ல" என்று மவுண்ட் சினாயில் உள்ள உலகளாவிய சுகாதாரம் மற்றும் வளர்ந்து வரும் நோய்க்கிருமிகள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அடோல்போ கார்சியா-சாஸ்ட்ரே கூறியுள்ளார்.
BA.3.2 வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?
BA.3.2 வைரஸ் தொற்றின் அறிகுறிகள், இதுவரை பரவிய மற்ற கோவிட் மாறுபாடுகளால் ஏற்படும் அறிகுறிகளைப் போன்றே இருக்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* காய்ச்சல்
* தொண்டை வலி
* மூச்சுத்திணறல்
* வாசனை அல்லது சுவை இழப்பு
* தலைவலி
* உடல் சோர்வு
* இரைப்பை குடல் அறிகுறிகள்
* நெரிசல்
இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம், ஆனால் பொதுவாக ஆதரவான கவனிப்பின் மூலம் அவை தானாகவே மறைந்துவிடும்.
எத்தனை நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது?
அறிக்கைகளின் படி, அமெரிக்கா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து உட்பட உலகளவில் சுமார் 22 நாடுகளில் கோவிட் வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இந்த திரிபு அமெரிக்காவின் கலிபோர்னியா, கனெக்டிகட், புளோரிடா, ஹவாய், இடாஹோ, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, டெக்சாஸ் உள்ளிட்ட 25 மாகாணங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

