Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா.. உங்களுக்கு கொரோனா வரக்கூடாதா? அப்ப இந்த கஷாயத்தை குடிக்க ஆரம்பிங்க...
Covid JN.1 Variant On The Rise In India: தற்போது உலகளவில் கொரோனாவின் JN.1 புதிய மாறுபாடு பரவிக் கொண்டிருக்கிறது. சீனா, அமெரிக்காவில் வேகமெடுத்து பரவி வந்த இந்த புதிய மாறுபாடு இந்தியாவில் நுழைந்து கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த வாரத்தில் கூறப்பட்டது. தற்போது இந்த SARS-COV2 இன் JN.1 மாறுபாடு இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
அதுவும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 752 வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்தியாவில் கொரோனா வழக்குகள் 3,420 ஆக உள்ளது. முக்கியமாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நான்கு இறப்புகளும், கேரளாவில் 2 பேரும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த கொரோனா வழக்குகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கர்நாடகா மற்றும் சண்டிகரில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இந்த கொரோனா தொற்றினை தடுக்க கூட்ட நெரிசல் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸானது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களை மிக எளிதில் தாக்குவதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருசில கசாயங்களை மீண்டும் தயாரித்து குடிக்கத் தொடங்குவது நல்லது. இப்போது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில கசாயங்களைக் காண்போம். அவற்றில் உங்களால் எதை தயாரித்து குடிக்க முடியுமோ அதை தயாரித்துக் குடித்து பாதுகாப்பாக இருங்கள்.
1. ஓமம் மிளகு கசாயம்
தேவையான பொருட்கள்:
* ஓமம் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1
* தேன் - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஓமத்தை சேர்த்து, நீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் வற்றியதும், அடுப்பை அணைத்துவிட்டு, சற்று சூடு தணிந்ததும், அதை வடிகட்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்தால், கசாயம் தயார்.
* இந்த கசாயத்தை தினமும் 2 முறை குடித்து வருவது நல்லது.
2. ஏலக்காய், ஓமம் மற்றும் பட்டை கசாயம்
தேவையான பொருட்கள்:
* ஓமம் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* பட்டை - 1 சிறிய துண்டு
* தேன் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் ஓமம், ஏலக்காய், பட்டை சேர்த்து 5 நிமிடம் நன்கு உயர் தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, கசாயத்தை வடிகட்டி, தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
* விருப்பமிருந்தால், இந்த கசாயத்துடன் இஞ்சியை சிறிது தட்டிப் போட்டு கொதிக்க வைக்கலாம்.
3. இஞ்சி, பட்டை கசாயம்
தேவையான பொருட்கள்:
* ஏலக்காய் - 1
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சுக்குப் பொடி - 1 டேபிள் ஸ்ழுன்
* பட்டை - 1 துண்டு
* தேன் - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் கொதிக்கும் நீரில் ஏலக்காய், பட்டை, சுக்குப் பொடி, மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு அதை வடிகட்டி ஓரளவு சூடு தணிந்ததும், தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும் .
4. இஞ்சி, துளசி, மஞ்சள் கசாயம்
தேவையான பொருட்கள்:
* துளசி இலைகள் - 4-5
* சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் துளசி இலைகள், சுக்குப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* சூடு தணிந்ததும், அதை வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
* வேண்டுமானால், இந்த கசாயத்தில் துளசி இலைக்கு பதிலாக புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications