Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
வேகமாக பரவிக் கொண்டிருக்கும் ஓமிக்ரான் உங்களுக்கு வரக்கூடாதா? அப்ப இத தினமும் எடுத்துக்கோங்க...
குளிர்காலத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் போது, கொரோனாவும் வேகமாக பரவுவதால், ஒவ்வொருவரும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் ஆர்வத்தைக் காட்ட வேண்டும்.
2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகெங்கிலும் பரவி பலரது வாழ்க்கையை சீர்குலைத்த கொரோனா வைரஸ், இன்று வரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டில் கொரோனா டெல்டா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது இந்த கொரோனா வைரஸ் இன்னும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த வகை கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது. மேலும் இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்த ஓமிக்ரான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களையும் அசால்ட்டாக தாக்குவதாக கூறப்படுகிறது.

இந்த ஓமிக்ரான் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி ஓமிக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாம் அனைவரும் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையோடு வைத்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
ஏற்கனவே குளிர்காலத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் போது, கொரோனாவும் வேகமாக பரவுவதால், ஒவ்வொருவரும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் ஆர்வத்தைக் காட்ட வேண்டும். அதற்கு நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க உதவும் ஒருசில சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இப்போது ஓமிக்ரான் கொரோனாவை எதிர்த்துப் போராட ஒருவர் தினமும் எடுக்க வேண்டிய சத்துக்கள் என்னவென்பதைக் காண்போம்.

கோவிட்-19 மாறுபாடான ஓமிக்ரானின் சில முக்கிய அறிகுறிகள்
கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து, தற்போது பரவும் ஓமிக்ரான் கொரோனாவின் சில பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, சுவை இழப்பு மற்றும் வாசனை இழப்பு ஆகியவையாகும். ஆனால் அறிகுறிகள் ஒவ்வொருக்கும் வேறுபடும். இப்போது ஓமிக்ரானை எதிர்த்துப் போராட உதவும் சத்துக்கள் என்னவென்பதைக் காண்போம்.

வைட்டமின் டி
உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்றாக்குறையைத் தவிர்க்க, வைட்டமின் டி சத்தை உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த வைட்டமின் டி இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்து நமக்கு கிடைக்கிறது. இருப்பினும், சிலருக்கு மருத்துவர்கள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்டுகளை பரிந்துரைப்பார்கள். இந்த வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால், சுவாச தொற்றுக்களைத் தவிர்க்கலாம். மேலும் வைட்டமின் டி சுவாச குழாய் தொற்று அல்லது சுவாச தசைகளில் ஏற்படும் அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. கொரோனாவை எதிர்க்க உடலில் போதுமான அளவில் வைட்டமின் டி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து மட்டுமின்றி, நாம் உண்ணும் சில உணவுகளிலும் காணப்படுகிறது. அந்த உணவுகள் பின்வருமாறு:
* கொழுப்பு நிறைந்த மீன்களான டுனா, கானாங்கெளுத்தி மற்றும் சால்மன்
* சில பால் பொருட்கள், ஆரஞ்சு பழச்சாறு, சோயா பால் மற்றும் தானியங்கள் போன்ற வைட்டமின் டி உடன் செறிவூட்டப்பட்ட உணவுகள்.
* மாட்டிறைச்சியின் கல்லீரல்
* சீஸ்
* முட்டையின் மஞ்சள் கரு

வைட்டமின் சி
நீங்கள் வைட்டமின் சி-யை தினமும் போதுமான அளவில் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும். உடலில் வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால், அது நுரையீரல் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே வைட்டமின் சி-யை போதுமான அளவில் தினமும் எடுத்தால், வீக்கம் குறையும். அதோடு வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃபுரூட்
* குடைமிளகாய்
* ஸ்ட்ராபெர்ரி
* பிளாக்கரண்ட்
* ப்ராக்கோலி
* உருளைகிழங்குகள்
* தக்காளி

ஜிங்க்
கொரோனா தொற்றைத் தவிர்க்க, உடலில் சரியான அளவில் ஜிங்க் சத்து இருக்க வேண்டியது முக்கியம். ஜிங்க் குறைபாடு நமது லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையை பாதிக்கிறது. ஜிங்க் உடலில் லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. மேலும் ஜிங்க் டி-செல்களை செயல்படுத்தவும், உருவாக்கவும் உதவுகிறது. ஜிங்க் குறைபாடு முதலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும். எனவே உடலில் போதுமான ஜிங்க் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜிங்க் நிறைந்த உணவுகள்
ஜிங்க் சத்து அதிகம் நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* இறைச்சிகள்
* கடல் சிப்பி
* விதைகள்
* நட்ஸ்
* முட்டை
* பருப்பு வகைகள்
* காய்கறிகளில் காளான், பசலைக்கீரை, ப்ராக்கோலி, கேல், பூண்டு

வைட்டமின் பி6
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மிகவும் முக்கியமான ஓர் சத்து தான் வைட்டமின் பி6. இந்த வைட்டமின் பி6-ல் காணப்படும் உயிர்வேதியியல் எதிர்வினைகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. எனவே உங்கள் உணவில் வைட்டமின் பி6 நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தற்போது பரவும் ஓமிக்ரானை எதிர்க்கும் அளவில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும்.

வைட்டமின் பி6 நிறைந்த உணவுகள்
வைட்டமின் பி6 அதிகம் நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* பன்றி இறைச்சி
* சிக்கன், வான்கோழி
* சில மீன்கள்
* வேர்க்கடலை
* சோயா பீன்ஸ்
* ஓட்ஸ்
* வாழைப்பழம்



Click it and Unblock the Notifications