Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
நெல்லூர் வெங்காய கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரமானாலும் கெட்டுப்போகாது..
Nellore Special Vengaya Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? தினமும் சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் நெல்லூர் ஸ்பெஷல் வெங்காய கார சட்னியை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கார சட்னியை செய்து காற்று புகாத மற்றும் ஈரப்பதமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த நெல்லூர் ஸ்பெஷல் வெங்காய கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லூர் ஸ்பெஷல் வெங்காய கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 10
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 8 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து ப்ரை
செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுத்து,
நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் 100 கிராம் சின்ன வெங்காயத்தை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் முதலில் வறுத்த மிளகாயை மட்டும் சேர்த்து
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து, நீர் சேர்க்காமல்
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, 2-3 நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* சட்னியானது நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும், அதை
இறக்கினால், சுவையான நெல்லூர் ஸ்பெஷல் வெங்காய கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
