Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
Fat Storage Reasons In Tamil: நாம் அனைவருமே கொழுப்புக்களை கெட்டதாக நினைக்கிறோம். ஆனால் இந்த கொழுப்பு நமது உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இந்த கொழுப்புக்கள் உடல் ஆற்றல் பெறுவதற்கும், ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும், செல் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை (ஏ, டி, ஈ, கே) உறிஞ்சுவதற்கும் உடல் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கும் இந்த கொழுப்பு மிக அவசியமானதாக இருந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அதுவும் தற்போது நிறைய பேர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். இப்படி உடல் பருமனடையும் அனைவருக்கும் ஒரே இடத்தில் கொழுப்புக்கள் தேங்குவதில்லை. சிலருக்கு அடிவயிற்று பகுதியிலும், சிலருக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதியிலும், இன்னும் சிலருக்கு கைகளிலும் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும்.
இப்படி உடலின் ஒவ்வொரு பகுதியிலும் கொழுப்புக்கள் தேங்குவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? ஹார்மோன்கள் தான். நமது உடலில் ஏராளமான ஹார்மோன்கள் உள்ளன. இந்த ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது, அவை ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்களை தேங்க செய்யும். அப்படி உடலின் வெவ்வேறு பகுதியில் கொழுப்புக்கள் ஏன் தேங்குகிறது என்பது குறித்து டாக்டர் ஜனனி சுப்புராஜ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1. முதுகு மற்றும் முக பகுதியில் கொழுப்பு
"ஒருவரது முதுகு மற்றும் முக பகுதியில் கொழுப்புக்கள் தேங்கினால், உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்" என்று கூறினார். எனவே உங்கள் முகம் வழக்கத்திற்கு மாறாக வீங்கி குண்டாக இருந்தால், மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதுவும் தியானம், யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவது மற்றும் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளும் விஷயங்களில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம்.
2. அடிவயிற்று கொழுப்பு
"ஒருவரது உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால், அந்நபரின் அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புக்கள் தேங்கும்" என்று டாக்டர் கூறினார். எனவே திடீரென்று தொப்பை வரத் தொடங்கினால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
3. இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்பு
"உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருந்தால் தான் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும்" என்று டாக்டர் கூறினார்.
4. கைகள் மற்றும் உடல் தசைகள் தளர்ந்து இருப்பது
"ஒருவரது கைகளில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கி, உடல் தசைகள் தளர்ந்து தொளதொளவென்று இருந்தால், உடலில் தைராய்டு ஹார்மோன் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்" என டாக்டர் கூறினார்.
5. கால் வீக்கம்
ஒருவரது கால்கள் குண்டாக இருந்தாலோ அல்லது உடலின் ஒட்டுமொத்த தசைகளும் ஓரளவு வீங்கி இருந்தாலோ, உடலில் ஆல்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அதிகமாக உள்ளது என்று அர்த்தம் என டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்கள் உடலின் எந்த பகுதியில் கொழுப்புக்கள் தேங்கியுள்ளது என்பதை கூறி, அதற்கான உண்மையான காரணம் என்னவென்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
