Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தொப்பையை குறைக்கணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பொடியை நீரில் கலந்து குடிங்க..
Weight Loss Tips In Tamil: தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும் மக்கள் உடல் பருமன், பானை போன்ற தொப்பையால் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சனை இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த உடல் பருமனை ஒருவர் குறைக்காவிட்டால், பின் அது பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கும், உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்களின் அபாயத்தையும் அதிகரித்துவிடும்.
இப்படி அதிகரித்த உடல் எடையை யாராலும் ஒரே நாளில் குறைத்துவிட முடியாது. அதற்கு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். இது தவிர உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில பானங்களையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால், இன்னும் சிறப்பான பலனை விரைவில் காணலாம்.

நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அதுவும் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணரான ரமிதா கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையைக் குறைக்க உதவும் 4 பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அற்புதமான எடை இழப்பு பவுடர் குறித்து கொடுத்துள்ளார். அந்த பவுடரை தினமும் உட்கொண்டு வந்தால், தட்டையான வயிற்றைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
* ஆளி விதை - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:
இந்த பொடியை தயாரிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆளி விதை, சீரகம், வெந்தயம் மற்றும் பட்டை போன்றவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
எப்படி உட்கொள்ள வேண்டும்?
"எடை இழப்புக்கு இந்த பொடியை 1 டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர், பால், தயிர் அல்லது ஸ்மூத்தியுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்" என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறியிருந்தார்.
பிற நன்மைகள்
இந்த எடை இழப்பு பொடியை உட்கொள்வதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, பிற நன்மைகளும் கிடைக்குமாம். அந்த நன்மைகளாவன:
* இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும்.
* உடலினுள் ஏற்பட்ட அழற்சி குறையும்.
* இதய ஆரோக்கியம் மேம்படும்.
* உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
* செரிமானம் சிறப்பாக இருக்கும்.
* அதிகப்படியான பசியுணர்வு கட்டுப்படும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கூறினார்.
"ஒருவரது தொப்பை மற்றும் உடல் பருமனை ஒரே ஒரு மருந்தோ அல்லது ஒரே ஒரு உணவோ சரிசெய்துவிடாது. அத்துடன் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்வதோடு, போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். அதோடு, தினமும் 40-45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியை செய்தாலும், மன அழுத்தத்தை நிர்வகிக்க யோகா, தியானம் போன்றவற்றிலும் தவறாமல் ஈடுபட வேண்டும்" என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கூறியிருந்தார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
