Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
35+ ஆண்களே! தொப்பையை குறைக்கணுமா? அப்ப ஃபிட்னஸ் கோச் சொல்ற இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..
Fat Loss Hacks In Tamil: உலகளவில் பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தொப்பை. இந்த தொப்பை வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்புக்கள் தேங்குவதால் வரக்கூடியது. இப்படிப்பட்ட தொப்பையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல, சற்று சவாலானது தான்.
நிறைய பேர் தொப்பையைக் குறைப்பதற்கு கடுமையான உடற்பயிற்சி, டயட் என்றெல்லாம் மேற்கொள்வார்கள். ஆனால் இப்படியான விஷயங்கள் அனைவருக்குமே எதிர்பார்த்த பலனை தந்துவிடாது. சிலர் எவ்வளவு தான் முயற்சித்தாலும், தொப்பையைக் குறைக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

ஃபிட்னஸ் கோச் லார்ஸ் மெய்டெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடலின் வளர்ச்சியை மாற்றத்தை மீட்டமைக்கவும், பட்டினி கிடக்காமல் அல்லது கடுமையாக கார்டியோ பயிற்சிகளை செய்யாமல் பிடிவாதமாக தேங்கியுள்ள வயிற்று கொழுப்பைக் குறைக்கவும் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
"நீங்கள் கடினமாக உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, இன்னும் தொப்பையைக் குறைக்க முடியவில்லையா? அப்படியானால் நீங்கள் உடனே உடைந்து போகாதீர்கள். நீங்கள் தவறான உத்தியை பின்பற்றுகிறீர்கள்" என்று ஃபிட்னஸ் கோச் லார்ஸ் தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏன் தொப்பையைக் குறைக்கும் உத்தி தோல்வியடைகிறது?
"பெரும்பாலான ஆண்கள் கார்டியோவை அதிகம் செய்து, உணவை குறைத்து, சப்ளிமெண்டுகளை எடுத்து, கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால், தொப்பை குறைந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், எவ்வளவு முயற்சித்தும் தொப்பை குறையாவிட்டால், அது ஒரு வளர்ச்சிதை மாற்ற பிரச்சனையே தவிர, ஒரு உந்துதல் பிரச்சினை அல்ல. இந்நிலையில் எவ்வளவு HIIT பயிற்சிகளை செய்தாலும், கார்ப்ஸ்களை குறைத்தாலும், கொழுப்பை எரிக்கும் மாத்திரைகளை எடுத்தாலும் தீர்வு கிடைக்காது." என்று கோச் கூறினார்.
தொப்பையைக் குறைக்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
கூடுதலாக, கோச் லார்ஸ் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை மீட்டமைக்கவும், விடாப்பிடியான தொப்பையைக் குறைக்கவும் உதவும் 5 விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அவையாவன:
1. புரோட்டீன் அவசியம்
"தினமும் 150 கிராம் புரோட்டீனை எடுக்க முயற்சிக்க வேண்டும்." என்று லார்ஸ் கூறினார். புரோட்டீனை போதுமான அளவில் எடுப்பதன் மூலம், தசைகள் வளர்ச்சி அடையும், மெட்டபாலிசம் மேம்படும் மற்றும் நீண்ட நேரம் வயிறும் நிரம்பியிருக்க உதவும்.
2. நடைப்பயிற்சி
"ஒவ்வொரு நாளும் குறைந்தது 10,000 அடிகள் நடக்க வேண்டும்" என்று லார்ஸ் கூறினார். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம், கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும் மற்றும் உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியமும் மேம்படும்.
3. ஜிம் செல்லவும்
வாரத்திற்கு 3 முறை அவசியம் ஜிம் செல்ல வேண்டும். என்று லார்ஸ் கூறினார். ஜிம்மில் வழக்கமாக வலிமை பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், அது மெலிந்த தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது. இது விரைவான மெட்டபாலிசம் மற்றும் கொழுப்பு இழப்புக்கு அவசியமான ஒன்று.
4. காலை உணவை தவிர்க்கவும்
"காலையில் உணவை தவிர்க்க வேண்டும்" என்று லார்ஸ் கூறினார். இப்படி காலை உணவைத் தவிர்ப்பது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தும் மற்றும் கொழுப்புக்களை எரிப்பது ஊக்குவிக்கப்படும்.
5. ப்ளாக் காபி
"காலை வேளையில் ஒரு கப் ப்ளாக் காபியை குடிக்க வேண்டும்" என்று லார்ஸ் கூறினார். ஏனெனில் ப்ளாக் காபி உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவுகளை கூடுதல் கலோரிகளை சேர்க்காமல் அல்லது விரதத்தை முறியடிக்காமல் மேம்படுத்தும்.
எனவே, நண்பர்களே! நீங்கள் தொப்பையைக் குறைக்க எத்தனையோ வழிகளை முயற்சித்தும் எந்த பலனும் கிடைக்காமல் இருந்தால், இந்த கோச் கூறிய 5 விஷயங்களை பின்பற்றி பாருங்கள். எத்தனையோ விஷயங்களை ட்ரை செய்திருப்பீர்கள். இதையும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications