Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்
உங்க தொப்பை வேகமா குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த பானத்தை தொடர்ந்து 3 மாதம் குடிங்க..
New Year 2026 Weight Loss Resolution: இன்னும் ஓரிரு நாட்களில் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டில் நாம் பல கனவுகளுடனும், இலக்குகளுடனும் நுழையும் வேளையில், வாழ்க்கை சிறப்பாக இருக்க ஒருசில தீர்மானங்களையும் எடுப்போம். ஒருவரது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும்.
அதற்கேற்ப தற்போது பலர் தங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். அதுவும் தொப்பையைக் கொண்டவர்கள் ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது எடுக்கும் தீர்மானம் நிச்சயம் அந்த தொப்பையைக் குறைப்பதாகவே இருக்கும். ஏனெனில் தற்போது உலகளவில் பெரும்பாலானோர் தொப்பை பிரச்சனையை கொண்டுள்ளனர்.

இந்த தொப்பைக்கு முக்கிய காரணம் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், மோசமான உணவுப் பழக்கங்களும் தான். மேலும் தற்போது நிறைய பேரின் வேலையானது கம்ப்யூட்டர் முன்பிருப்பதால், நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்தவாறே வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் அப்படியே கொழுப்புக்களாக வயிற்றுப் பகுதியில் தேங்கி தொப்பையை வரவழைக்கின்றன.
உங்களுக்கும் இப்படி அசிங்கமான பானை போன்ற தொப்பை உள்ளதா? வருகிற 2026 புத்தாண்டில் இந்த தொப்பையை குறைக்க தீர்மானம் எடுக்க போகிறீர்களா? அப்படியானால் டாக்டர் நர்மதா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள 3 விதமான பானங்களை தினமும் குடித்து வாருங்கள்.
இந்த மூன்று பானங்கள் தொப்பையைக் குறைப்பதில் பெரிதும் உதவுவதாக டாக்டர் நர்மதா கூறியுள்ளார். மேலும் இந்த பானங்களை தினசரி உட்கொண்டு வரும் போது, உடலின் மெட்டபாலிசம் மேம்படும், செரிமானம் சிறப்பாக இருக்கும் மற்றும் வயிற்று உப்புசம் குறையும் என்றும் டாக்டர் கூறினார். இப்போது அந்த 3 பானங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. மல்லி நீர்
மல்லி நீர் உடலில் கெட்ட நீர் தேங்குவதைக் குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும். இந்த மல்லி நீரை தயாரிக்க ஒரு பாத்திரத்தில் 150 மிலி நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் மல்லி விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று டாக்டர் நர்மதா கூறினார்.
2. வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி கொழுப்புக்களை கரைக்கு திறனை மேம்படுத்தும். இந்த எலுமிச்சை நீரை தயாரிக்க ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
3. பட்டை நீர்
பட்டை நீர் சர்க்கரை உணவுகளின் மீதான நாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், இன்சுலினை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது. இந்த பட்டை நீரை தயாரிக்க, இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 1 விரல் நீரமுள்ள பட்டையை சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்த நீரை இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் தொப்பையால் சிரமப்பட்டு வந்தால், 2026 புத்தாண்டில் தொப்பையைக் குறைக்கும் தீர்மானத்தை எடுத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை தினமும் குடித்து வருவதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், தொப்பையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். முக்கியமாக இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றி வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications