Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
Chettinad Korada Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னியை தான் சைடு டிஷ்ஷாக அதிகம் செய்வீர்களா? குறிப்பாக சட்னி என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை அதிகம் செய்வீர்களா?

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி பிடிக்குமானால், எப்போதும் ஒரே சுவையில் கார சட்னியை செய்யாமல், ஒருமுறை செட்டிநாடு கொறடா சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைல் சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு செட்டிநாடு கொரடா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கொரடா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன்எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 8 வர மிளகாய் (விதைகளை நீக்கி, உடைத்தது)
- 1 கொத்து கறிவேப்பிலை
- 5 பல் பூண்டு
- 1 கப் சின்ன வெங்காயம் (நறுக்கியது)
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் புளிக்கரைசல்
- தேவையான அளவு தண்ணீர்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் வெல்லம்
செய்முறை:
- முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் நசுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைக் கடாயில் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் இதை மூடி வைத்து, மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- மூடியைத் திறந்து வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்; பிறகு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
- நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு கொரடா சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
