Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
கோயம்புத்தூர் ரோட்டு கடை தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்யணும் தெரியுமா?
Coimbatore Rottukadai Thakkali Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வாய்க்கு ருசியான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி சட்னி செய்யுங்கள். இந்த சட்னி நீர் போன்று இருக்கும். மேலும் இதை இட்லியுடன் சாப்பிட்டால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
இந்த சட்னியின் செயல்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் இதன் சட்னியை ஒருமுறை செய்தால் பின் அடிக்கடி செய்வீர்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த சட்னி ருசியாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்த சட்னி இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கோயம்புத்தூர் ரோட்டு கடை தக்காளி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோயம்புத்தூர் ரோட்டு கடை தக்காளி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 1/2 கிலோ
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 3
* பச்சை மிளகாய் - 2-3
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, அதில் தக்காளியில் லேசாக கீறிவிட்டு சேர்த்து, தக்காளியின்
தோல் உரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் தக்காளிகளை வெளியே எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, தக்காளி
குளிர்ந்த பின் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கீறி
வைத்துள்ள பச்சை மிளகாயையும் சேர்த்து, அதோடு கறிவேப்பிலை சேர்த்து,
வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் 1 1/2 டம்ளர்
நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லித் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* 10 நிமிடம் சட்னியை நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கோயம்புத்தூர் ரோட்டுக்கடை
தக்காளி தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications