ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Mercury Retrograde In Cancer On 29 June 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் கிரகங்களிலேயே மிகவும் வேகமாக தனது நிலையை மாற்றக்கூடியவர். அதுவும் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர் புதன்.

Mercury Retrograde In Cancer On 29 June 2026 These Zodiac Signs Should Be Careful

இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் ஜூன் 22 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் புதன் ஜூன் 29 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இப்படி புதன் வக்ரமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் மன குழப்பங்கள், தொழில் மற்றும் நிதி ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் எந்தவொரு பெரிய முடிவுகளையும் அவசரமாக எடுக்காமல், பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்போது புதன் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தவறான புரிதல்கள் அதிகரிக்கும் மற்றும் உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பல பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும். இக்காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதையோ அல்லது புதிய வேலைகளை தொடங்குவதையோ தவிர்ப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். பணியிடத்தில் பொறுப்புக்கள் அதிகரித்து, அதன் மூலம் ஓய்வெடுக்க முடியாமல் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும். வேலையில் செய்யும் சிறு தவறுகளும் பெரிய பிரச்சனையாக மாறக்கூடும். எனவெ எந்த வேலையை செய்தாலும், கவனமாக செய்ய வேண்டும். கூட்டு வணிகம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளருடன் வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டும். இல்லாவிட்டால் அது தவறான புரிதலை ஏற்படுத்தி உறவை பாதித்துவிடும்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் பண விஷயங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை தள்ளிப் போடுவது நல்லது. அவசரப்பட்டு எந்த முதலீடுகளையும் செய்யக்கூடாது மற்றும் எந்த ஒரு பணம் தொடர்பான முடிவுகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு ஒப்பந்தத்தையும் படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். வரவு செலவுகளுக்கு இடையில் சமநிலை சீர்குலைந்து, மன அழுத்தத்தை உண்டாக்கும். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் பண பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, June 23, 2026, 11:03 [IST]
Desktop Bottom Promotion