உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...

Underarm Whitening Remedies At Home In Tamil: ஒவ்வொருவருமே வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதுவும் முகம் மட்டுமின்றி, கை, கால், அக்குள் என ஒட்டுமொத்த உடலும் சீரான சரும நிறத்தில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவோம். அதற்காக பல்வேறு அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் வருவோம். ஆனால் என்ன செய்தாலும், அக்குள் மட்டும் சிலருக்கு அதிக கருமையாக இருக்கும்.

Top 5 Effective Natural Remedies for Underarm Whitening

இப்படி அக்குள் கருப்பாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் இறந்த செல்களின் தோக்கம், தொடர்ச்சியாக சருமத்திற்கு எரிச்சலூட்டும் பொருட்களை பயன்படுத்துவது, ஷேவிங் செய்வது, இறுக்கமான ஆடைகளின் தொடர்ச்சியான உராய்வு, தொற்றுகள், சில சமயங்களில் மருத்துவ நிலைகளும் காரணங்களாக இருக்கலாம்.

எனவே அக்குள் கருப்பாக இருந்தால், அப்போது அந்த அக்குள் கருமையைப் போக்க எடுத்ததும் கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிப்பு கொடுப்பதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், எவ்வித பக்கவிளைவுமின்றி ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். கீழே அக்குள் கருமையைப் போக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. எலுமிச்சை மற்றும் தயிர் மாஸ்க்

* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை சுத்தம் செய்த அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
* ஆனால் சென்சிடிவ் சருமத்தை கொண்டவர்கள், இதை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்கவும்.

2. உருளைக்கிழங்கு தெரபி

* உருளைக்கிழங்கில் உள்ள நொதிகளும், வைட்டமின் சி-யும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி, அதைக் கொண்டு அக்குளில் 10-15 நிமிடம் தேய்க்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் என 2-3 வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்துங்கள். இதன் மூலம் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

3. தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் பேஸ்ட்

* இதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை சுத்தம் செய்த அக்குளில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, அக்குளில் உள்ள கருமை நீங்குவதைக் காணலாம்.

4. பேக்கிங் சோடா ஸ்க்ரப்

* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 3 பங்கு பேக்கிங் சோடாவை எடுத்து, அத்துடன் 1 பங்கு நீரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கழுவிய ஈரப்பதமான அக்குளில் தடவி, 2-3 நிமிடங்கள் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

5. ஆப்பிள் சீடர் வினிகர் டோனர்

* இதற்கு ஒரு பங்கு ஆப்பிள் சீடர் வினிகரில் 2 பங்கு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒவ்வொரு முறை குளித்த பின்னரும், அக்குளில் இதை ஸ்ப்ரே செய்து, காய வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வர, அக்குளில் உள்ள கருமை நீங்குவதைக் காணலாம்.

Story first published: Monday, June 22, 2026, 22:15 [IST]
Desktop Bottom Promotion