Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்க கை ரொம்ப கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
Skin Care Tips In Tamil: உங்கள் முகத்தை விட கைகள் மிகவும் கருப்பாக உள்ளதா? இப்படி கைகள் மட்டும் நிறம் மாறி கருமையாக காட்சியளிக்க காரணம் வெயில் நேரடியாக கைகளில் நீண்ட நேரம் படுவது தான். அதோடு முகத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில், கைகளுக்கு யாரும் அவ்வளவு பராமரிப்பை கொடுப்பதில்லை.
இதனால் கைகளில் அழுக்குகள், இறந்த செல்கள் போன்றவை தேங்கி, கை சருமத்தை கருமையாக காட்டுகின்றன. இப்படி ஒருவரது முகம் நன்கு பளபளப்பாக இருந்து, கைகள் மட்டும் கருப்பாக காட்சியளித்தால் நன்றாக இருக்குமா என்ன? நிச்சயம் இல்லை தானே?

எனவே நீங்கள் உங்கள் கைகளில் உள்ள கருமையைப் போக்கி, வெள்ளையாக்க விரும்பினால், எடுத்ததும் கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களை தொடர்ந்து கொடுத்து வாருங்கள். இப்படி கொடுக்கும் போது கைகளில் உள்ள கருமை நீங்கி, கைகள் பொலிவாக மாறுவதைக் காணலாம். கீழே கைகளில் இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கடலை மாவு, மஞ்சள் மற்றும் பால்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
* இந்த பேக் கைகளில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றுவதோடு, சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
2. தேன் மற்றும் எலுமிச்சை சாறு பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கைகளை கழுவ வேண்டும்.
* இந்த பேக்கை அடிக்கடி பயன்படுத்தும் போது, கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகள் நன்கு ஈரப்பதத்தோடு இருக்கும்.
3. தயிர் மற்றும் தக்காளி ஜூஸ் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை கைகளில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
* இந்த பேக்கை பயன்படுத்துவதன் மூலம், கைகளின் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும், இறந்த செல்களும் நீங்கி, சருமம் நன்கு பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.
4. உருளைக்கிழங்கு சாறு
* இந்த பேக்கிற்கு உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை கைகளில் தடவி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
* இப்படி செய்வதன் மூலம், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்களும், அமிலங்களும் சருமத்தில் உள்ள அழுக்கையும், கருமையையும் நீக்கி, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.
5. வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டர்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் வெள்ளரிக்காயை துருவி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி செய்வதன் மூலம், வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ரோஸ்வாட்டருடன் சேர்த்து சருமத்தில் உள்ள கருமையை திறம்பட அகற்றும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications