Latest Updates
-
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Milagai Killi Potta Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாம்பார் என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி வீட்டில் சாம்பார் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் சாம்பாரை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை வித்தியாசமான சுவையில் மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பாருக்கு மசாலா பொடி எதுவும் சேர்க்க தேவையில்லை. பச்சை மிளகாய் காரமே போதுமானது. இந்த சாம்பாரை செய்தால் இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப் அல்லது 100 கிராம்
* பூண்டு - 5 பல்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 1
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (இரண்டாக நறுக்கியது)
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வேக வைத்த பருப்பு
* புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை எடுத்து நீரில் 2 முறை கழுவி
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி மற்றும் 2 கப்
நீரை ஊற்றி குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்கு மசித்த விட
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய்,
கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து
கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி, மூடி
வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மிளகாய்
கிள்ளிப் போட்ட சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications