Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Keerai Sambar Recipe In Tamil: அடிக்கடி உணவில் கீரையை சேர்ப்பது நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரையை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அதுவும் கீரையை எப்போதும் பொரியல், கடையல் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கீரையைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள்.

அதுவும் சற்று கெட்டியாக சாம்பார் செய்யும் போது, அதை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். முக்கியமாக இப்படி கீரையை செய்யும் போது, கீரையை விரும்பி சாப்பிடாதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த கீரை சாம்பாருக்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* பூண்டு - 1 பல்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கீரை வேக வைப்பதற்கு...
* பசலைக்கீரை - 1 கட்டு
* தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* வேக வைத்த கீரை
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த பருப்பு
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளித்தண்ணீர் - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 மூடி
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை எடுத்து, அதை நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, 1 பல் பூண்டு மற்றும் 1/4
டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, பருப்பை நன்கு மசித்து விட
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கீரையை எடுத்துக் கொண்டு, அதில்
1/2 கப் நீரை ஊற்றி கீரையை நன்கு வேக வைத்து இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் முழுமையாக சின்ன வெங்காயத்தையும், கீறிய பச்சை
மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து,
அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது புளிச்சாற்றினை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக
கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய 1/2 மூடி
தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக அரைத்த தேங்காயை கொதித்து கொண்டிருக்கும் சாம்பாருடன்
சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், கீரை சாம்பார்
தயார்.



Click it and Unblock the Notifications