Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
சுரைக்காயை இப்படி ஒருடைம் தொக்கு செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்...
Bottle Gourd Thokku Recipe In Tamil: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், நீர்க்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், வெயிலால் உடல் வறண்டு போகாமல் இருக்கும். மேலும் நீர்க்காய்கறிகளில் கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களும் நிறைந்திருக்கும்.
அப்படி நீர்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி தான் சுரைக்காய். இந்த காயை பொதுவாக கூட்டு, சாம்பார், பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த சுரைக்காயைக் கொண்டு தொக்கு செய்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மேலும் சற்று வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுரைக்காய் - 1/2 கிலோ (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து நன்கு 2-3
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து
7 நிமிடம் நன்கு காயை வேக வைக்க வேண்டும்.
* காய் நன்கு வெந்ததும், மத்து அல்லது கரண்டி கொண்டு காய்கறிகளை
மசித்து விட வேண்டும்.
* இறுதியாக அதில் வறுத்த வேர்க்கடலையை அரைத்து பொடி செய்து சேர்த்து,
அத்துடன் கொத்தமல்லியையும் தூவி கிளறி இறக்கினால், சுவையான சுரைக்காய்
தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications
